என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறக்குமதி குறைப்பு"

    • ரஷியாவில் இருந்து இந்தியாவின் பொருட்கள் இறக்குமதி 2.86 பில்லியன் டாலராக இருந்தது.
    • இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைத்துள்ளன.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் சமீபத்தில் எட்டப்பட்டது. இதில் இந்தியா மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.

    இதில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் அபராத வரியாக விதிக்கப்பட்ட 25 சதவீதத்தை அமெரிக்கா ரத்து செய்தது. மேலும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்தது.

    இந்தியாவுக்கு அமெரிக்கா, வெனிசுலா கச்சா எண்ணெயை விற்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இந்தநிலையில் இந்தியாவில் ரஷியாவிடம் இருந்து பொருட்கள் இறக்குமதி 40 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் ரஷியாவில் இருந்து இந்தியாவின் பொருட்கள் இறக்குமதி 2.86 பில்லியன் டாலராக இருந்தது.

    இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிடும்போது 40.48 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு ஜனவரியில் ரஷியாவின் பொருட்கள் இறக்குமதி 4.81 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

    ரஷியாவில் இருந்து இந்தியாவின் மொத்த பொருட்கள் இறக்குமதியில் கச்சா எண்ணை இறக்குமதி 80 சதவீதம் ஆகும். தற்போது இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைத்துள்ளன.

    இதன் காரணமாக ரஷிய இறக்குமதி சரிவை சந்தித்து உள்ளது. ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு வரும் மாதங்களில் கடுமையாக குறையும் என்றும் , இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய எண்ணெயுடன் ஒப்பிடும்போது மலிவான வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க விரும்பும் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    வெனிசுலா மீதான அமெரிக்க தடைகளுக்கு முன்பு இந்தியா வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்குபவர்களில் முக்கிய நாடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் பல மண்ட ங்களாக செயல்பட்டு வருகிறது.
    • கோடை காலத்தில் வெயில் கடுமையாக சுட்டெரிப்பதால் பீர் வகைகள் வாங்க வேண்டி டாஸ்மாக் கடைகளில் மதியம், மாலை நேரங்களில் குடிமகன்கள் அதிகம் பேர் கூடுகின்றனர்.

    ேசலம்:

    தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் சேலம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி என மண்ட லங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் சேலம் மண்டலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திரு வண்ணா மலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது.

    ரூ.5 கோடி வருமானம்

    இம்மாவட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் இருக்கி றது. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ. 4 கோடி முதல் ரூ.5 கோடி மதுபானங்கள் விற்பனை நடக்கிறது.

    நடப்பாண்டு கோடை காலம் தொடங்கி உள்ளதால் பீர் வகைகளின் விற்பனை வழக்கத்தை விட 75 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்வை களின் விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளது.

    சுட்டெரிக்கும் வெயில்

    கோடை காலத்தில் வெயில் கடுமையாக சுட்டெரிப்பதால் பீர் வகைகள் வாங்க வேண்டி டாஸ்மாக் கடைகளில் மதியம், மாலை நேரங்களில் குடிமகன்கள் அதிகம் பேர் கூடுகின்றனர். இதைத்தவிர வாரத்தின் வெள்ளிக்கி ழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கி ழமையில் டாஸ்மாக் கடை களில் கூட்டம் அலைமோது கிறது. இதில் இளைஞர்கள் தான் அதிகம் எண்ணிக்கையில் உள்ளனர்.

    பீர் தட்டுப்பாடு

    இதனால் டாஸ்டாக் கடைகளில் பீர் லோடுகள் வந்து இறங்கிய அடுத்த ஒரு சில மணி நேரங்களிலேயே அனைத்தும் விற்பனையாகி விடுகிறது. இதனால் பீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மது பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    கோடை காலம் என்பதால் பீர் வகைகள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். கடைகளுக்கு எவ்வித பாகுபாடு இல்லாமல் மது பான சரக்குகள் சரா சரியாக இறக்குமதி செய்ய வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமகன்கள் கூறுகின்றனர்.

    இது குறித்து ஊழியர்க ளிடம் கேட்டபோது கோடை காலத்தில் பீர் வகைகள் மாவட்டத்தில் சில கடைகளுக்கு மட்டுமே டாஸ்மாக் நிர்வாகம் அதிக அளவில் அனுப்பி வைக்கிறது.

    விற்பனை குறைவாக நடக்கும் மற்ற கடைகளுக்கு பிரிமீயம் சரக்குகள் அதிக ளவில் அனுப்பப்படுகிறது. குறிப்பாக இக்கடைகளுக்கு விலை குறைந்த மதுபானங்க ளும் குறைந்த எண்ணிக்கை யில் தான் வழங்கப்படுகிறது.

    குறிப்பாக டாஸ்மாக் நிர்வாகம் சேலம் மண்ட லத்திற்கு குறைவாக பீர் வகை களை இறக்குமதி செய்வதே, இந்த தட்டுப்பாடுக்கு காரணம் என தெரிவித்தனர்.

    ×