என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்ஆலன் ஆடமி 1926 விஸ்கி"

    • ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறையும் வாய்ப்பு
    • கெய்ர் ஸ்டார்மர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையே சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இதில் இந்தியர்களுக்கான விசா பிரச்சனைகள் தீர்வு, கார்கள் மற்றும் ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறைப்பு ஆகியவை அடங்கும்.

    இந்நிலையில், வர்த்தக பேச்சுவார்தைகளுக்காக இங்கிலாந்து பிரதமர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் இன்று இந்தியா வந்தடைந்தார்.

    கெய்ர் ஸ்டார்மர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்த ஒப்பந்தம் ஆண்டுதோறும் ஸ்காட்லாந்து பொருளாதாரத்திற்கு 190 மில்லியன் யூரோ பங்களிக்கும் என்றும் அதாவது இந்தியாவிற்கு ஆண்டுக்கு £1 பில்லியன் யூரோ அளவுக்கு ஸ்காட்ச் விஸ்கி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமரின் இந்திய பயணம் குறித்து பேசிய ஸ்காட்லாந்திற்கான இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் டக்ளஸ் அலெக்சாண்டர், "இங்கிலாந்து - இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) மூலம் ஸ்காட்ச் விஸ்கி தொழில் வளர்ச்சியடையும். இந்த ஆண்டு இந்தியாவுடன் இங்கிலாந்து அரசாங்கம் செய்து கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் ஸ்காட்லாந்திற்கும், குறிப்பாக நமது விஸ்கி தொழிலுக்கும் ஒரு சிறந்த செய்தியாகும். ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சில சவால்கள் உள்ளது.

    இந்தியாவுடனான இங்கிலாந்து அரசாங்கத்தின் ஒப்பந்தத்தில் ஸ்காட்ச் விஸ்கி ஒரு பெரிய வெற்றியாளராக உள்ளது. இது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரத்துடன் இதுவரை எந்த நாடும் ஒப்புக் கொள்ளாத சிறந்த ஒப்பந்தமாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெக்ஆலன் ஆடமி சிங்கிள் மால்ட் விஸ்கி 1926ல் தயாரிக்கப்பட்டது
    • மெக்ஆலன் இந்த வகை மதுபானத்தை 40 பாட்டில்கள் மட்டுமே தயாரித்தது

    "ஸ்காட்ச் விஸ்கி" என பிரபலமடைந்துள்ள ஸ்காட்லேண்டு நாட்டின் விஸ்கி மதுபானம் உலகெங்கும் பலரால் விரும்பப்படுபவை. இவற்றின் தரத்திற்காகவும் சிறப்பான சுவைக்காகவும், மதுபான பிரியர்கள் ஸ்காட்ச் விஸ்கிக்களை என்ன விலை கொடுத்தாவது வாங்குவது வழக்கம்.

    மிக அரிதான பொருட்களை விற்க விரும்புபவர்களுக்கும் அவற்ற வாங்க விரும்புபவர்களுக்கும் இடையே ஏல முறையில் வர்த்தகம் நடத்தும் உலக புகழ் பெற்ற நிறுவனம், சாத்பீ'ஸ் (Sotheby's). பன்னாட்டு நிறுவனமான சாத்பீ'ஸ், அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு உலகின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்நிறுவனத்தின் லண்டன் கிளையில், இரு தினங்களுக்கு முன், 1926 வருட மெக்ஆலன் ஆடமி சிங்கிள் மால்ட் விஸ்கி (Macallan Adami Single Malt Whiskey) மதுபானம் சுமார் ரூ.22,48,89,885.00 கோடி ($2.7 மில்லியன்) தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த விஸ்கி, இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட மதுபான வகைகளில் முன்னர் கிடைத்த தொகையை விட அதிகமாக ஏலம் விடப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

    "இந்த ஒரு விஸ்கியைத்தான் உலகின் மது பிரியர்கள் ஏலத்தில் விற்கவும் விரும்புகின்றனர்; வாங்கவும் போட்டி போடுகின்றனர். இந்த மதுபானத்தின் சிறு துளியை நான் ருசி பார்க்க அனுமதிக்கப்பட்டேன். இது மிகவும் வளமையான விஸ்கி. எதிர்பார்த்ததை போலவே இதில் ஏராளமான உலர் பழங்கள் பயன்படுத்தப்பட்டு அவற்றின் திடம் சிறப்பாக உள்ளது" என இந்த ஏல நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜானி ஃபவுல் (Jonny Fowle) இதன் தரம் குறித்து கூறினார்.

    இந்த விஸ்கி உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து சுமார் 60 வருட காலம் கருமையான ஓக் ஷெர்ரி (black oak sherry) பீப்பாய்களில் ஊற வைக்கப்பட்டது. அதன் பிறகு 1986ல் இது பாட்டிலில் அடைக்கப்பட்டது.

    இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் இது போன்ற விஸ்கி, மொத்தம் 40 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது; ஆனால், இவை வெளிச்சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. இவற்றை தயாரித்த மெக்ஆலன் நிறுவனம் தங்களின் மிக முக்கிய வாடிக்கையாளர்களுக்கே இவற்றை அளித்துள்ளது.

    40 பாட்டில்களையும் வெவ்வேறு வகையில் மெக்ஆலன் நிறுவனம் லேபிள் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதனால், வெவ்வேறு காலகட்டங்களில் இவை ஏலத்திற்கு வரும் போது, மிக அதிக தொகையை பெற்று தருகின்றன.

    ×