என் மலர்tooltip icon

    உலகம்

    சீன அதிபருடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்திய   டிரம்ப்.. அடுத்த மாதம் நேருக்கு நேர் சந்திப்பு
    X

    சீன அதிபருடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப்.. அடுத்த மாதம் நேருக்கு நேர் சந்திப்பு

    • ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
    • அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார்.

    இந்த உரையாடலில் வர்த்தகம், ஃபென்டனில் போதைப்பொருள் விவகாரம், மற்றும் டிக்டாக் ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார்.

    அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

    மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் சீனாவுக்குச் செல்வதாகவும், தொடர்ந்து ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு வருகை தருவார் என்றும் அவர் தெரிவித்தார்.

    டிக்டாக் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காகவும் டிரம்ப் தனது நன்றி தெரிவித்தார்.

    முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக மோதல் காரணமாக இருதரப்பும் பரஸ்பரம் வரிகளை அதிகரித்தன.

    பேச்சுவார்த்தைக்கு பின் ஏற்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தின்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. இந்த ஒப்பந்தம் நவம்பரில் முடிவடைகிறது.

    Next Story
    ×