என் மலர்

  நீங்கள் தேடியது "2 youths"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பவானிசாகர் தொப்பம் பாளையம் அண்ணாநகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
  • பாலித்தீன் கவரில் 100 கிராம் கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது.

  சத்தியமங்கலம்,

  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சிறப்பு உதவி ஆய்வாளர் பூர்ணசந்திரன் மற்றும் போலீசார் பவானி சாகர் அருகே உள்ள தொப்பம் பாளையம், நால்ரோடு ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.

  அவர்கள் பவானிசாகர் தொப்பம் பாளையம் அண்ணாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் தப்பிஓட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

  அப்போது அவர்களது மோட்டார் சைக்கிள் சீட்டிற்கு கீழே பாலித்தீன் கவரில் 100 கிராம் கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பவானி சாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த மதுரை செல்வன்(21), கவி என்கிற கவியரசன் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.
  • சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் பர்கூர் சோதனை சாவடியில் பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

  அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

  மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது ஒரு பாலித்தீன் பை இருந்தது. அதனை திறந்து பார்த்த போது 150 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

  போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரன் (24), நந்தகுமார் (27) என்பதும் இவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

  இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
  • இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

  சென்னிமலை:

  சென்னிமலை அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதா சிவம். இவர் அந்த பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.

  இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு சதாசிவம் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு சென்றார். மறு நாள் காலை வந்து கடையை திறந்தார். அப்போது கடையில் இருந்த ரூ.25 ஆயிரத்தை காணா ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பணத்தை யாரோ சிலர் திருடி சென்றது தெரிய வந்தது.

  இது குறித்து அவர் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமி ராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

  அதில் 2 பேர் காரில் வந்து டீக்கடையில் பணத்தை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.

  இந்த நிலையில் போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பவானி அருகே உள்ள காலிங்க ராயன்பாளையம் மூவேந்தர் நகரை சேர்ந்த மாரிமுத்து (31), ஈரோடு அடுத்த ஆர்.என்.புதூர் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு (32) எனவும், கடையில் பணத்தை திருடியதும் தெரிய வந்தது.

  இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். ெதாடர்ந்து அவர்கள் பெருந்துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கார் மோதிய வேகத்தில் ரோட்டில் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.
  • இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

  பவானி:

  பவானி அருகே உள்ள புன்னம் நாரப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் சக்திவேல் (29). மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த செங்கோடன் மகன் நந்தகோபால் (26).

  இவர்கள் 2 பேரும் பவானி ஆப்பக்கூடல் மெயின் ரோடு, ஜம்பை பேரூராட்சி அலுவலகத்தின் அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு மோட்டார் சைக்கிளுடன் ரோட்டின் ஓரமாக நின்று கொண்டு இருந்தனர்.

  அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து கார் மோதிய வேகத்தில் ரோட்டில் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.

  இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

  இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சக்திவேல் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையிலும், நந்தகோபால் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கார் டிரைவர் அர்த்தனாரீஸ்வரர் என்பவரிடம் போலீசார் விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  ஜம்பையில் டீக்கடை முன்பாக ரோட்டின் ஓரம் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் 2 பேர் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோட்டில் வாகன சோதனையின் போது பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

  ஈரோடு:

  ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்த குமார் தலைமையில் கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்ப–ட்டது.

  இந்நிலையில் வீரப்பன் சத்திரம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டி–ருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

  அந்த வாலிபர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன்பட்டி, குட்டை தெருவை சேர்ந்த மணிகண்டன் என்கிற மணி (27), நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் 4 -வது வீதியை சேர்ந்த தவச்செல்வன் (21) என்பது ெதரிய வந்தது. மேலும் இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஈரோடு சூரம்பட்டி, வீரப்பன் சத்திரம் பகுதியில் 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து இருந்து 7 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

  இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களிடம் இருந்து ஆடு மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  கமுதி

  விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பகுதியில் உள்ள விடத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த சோனைமுத்து (23), தங்கராஜ் (27) இருவரும் இரு சக்கர வாகனத்தில் சாயல்குடியில் உள்ள நண்பர் வீட்டிற்கு குழந்தை பிறந்ததைப் பார்க்க வந்தனர்.

  பின்னர் ஊருக்கு திரும்பும் போது கமுதி அருகே உள்ள வில்லனேந்தல் விலக்கு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளாடை இருவரும் திருடிக்கொண்டு தப்பினர். பின்னர், கமுதி-குண்டாறு பாலம் அருகே நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களையும் கோவிலாங்குளம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

  அவர்களிடம் இருந்து ஆடு மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சம்பவத்தன்று இரவு பட்டியல் ஆடுகள் சத்தம் போடுவதை கேட்டு சந்திரசேகர் அங்கு வந்து பார்த்தார். அப்பொழுது 2 வாலிபர்கள் ஆட்டுப்பட்டியில் ஆடுகளை திருட முயன்றனர்.
  • இதனையடுத்து 2 வாலிபர்களையும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சை க்கிளையும் சிவகிரி போவீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  சிவகிரி:

  சிவகிரி அருகே மின்ன பாளையத்தை அடுத்த மொசுக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (42). விவசாயி. அதே பகுதியில் அவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் 15 ஆடுகள் வளர்த்து வருகிறார்.

  இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு யாரோ மர்ம நபர்கள் சந்திரசேகர் பட்டியில் இருந்த 2 ஆடுகளை திருடி சென்று விட்டனர். மேலும் ஆடுகள் திருட்டு போகாமல் இருக்க இரவு, பகலாக ஆடுகள் கட்டி வைத்திருக்கும் பட்டியை கண்காணித்து வந்தார்.

  இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பட்டியல் ஆடுகள் சத்தம் போடுவதை கேட்டு சந்திரசேகர் அங்கு வந்து பார்த்தார். அப்பொழுது 2 வாலிபர்கள் ஆட்டுப்பட்டியில் ஆடுகளை திருட முயன்றனர்.

  அப்போது சந்திரசேகர் வருவதை கண்டு 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர்.

  அப்பொழுது அந்த 2 வாலிபர்களை சந்திரசேகர் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து விசாரித்ததில், பாசூர் சோளங்காபாளையம் மணப்பாளிபள்ளம் 2-வது வீதியை சேர்ந்த சிவானந்தன் (20), அதே பகுதியை சேர்ந்த மனோஜ் (19) என்பது தெரிய வந்தது.

  இதனையடுத்து 2 வாலிபர்களையும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சை க்கிளையும் சிவகிரி போவீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  போலீசார் சிவானந்தம், மனோஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கொடுமுடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை ரெயில் நிலையத்தில் 62 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசார் ெரயிலில் வந்தவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.

  மதுரை

  மதுரை எக்ஸ்பிரஸ் ெரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, ெரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் போலீசார் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

  இந்தநிலையில் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ெரயில் நேற்று இரவு 12 மணி அளவில் மதுரைக்கு வந்து சேர்ந்தது. அப்போது போலீசார் ெரயிலில் வந்தவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.

  அப்போது தோல் பைகளுடன் வந்த 2 பேரை மறித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்எதேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது அதில் 62 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

  அங்கு விசாரணை நடத்தியதில் கஞ்சா கடத்தியது மதுரை செல்லூர் ஜீவா தெரு, ஜெயபாண்டி ‌(31), ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பெருக்கீடு, குடிவாடா ரோடு, ஹனுமான் சந்திப்பு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் வாழி (22) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன்கோவில் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

  ஈரோடு, ஜூன். 15-

  ஈரோடு கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன்கோவில் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசை பார்த்ததும் தப்பியோட முயன்றனர்.

  அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர்கள் கருங்கல்பாளையம், மாரியம்மன்கோயில் வீதியை சேர்ந்த வினோத்(32), ராஜாஜிபுரம் மணி(30) என தெரியவந்தது.

  அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமிருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

  ×