மோட்டார் சைக்கிளில் கஞ்சா வாங்கி வந்த 2 வாலிபர்கள்

மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.
மோட்டார் சைக்கிளில் கஞ்சா வாங்கி வந்த 2 வாலிபர்கள்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பர்கூர் சோதனை சாவடியில் பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது ஒரு பாலித்தீன் பை இருந்தது. அதனை திறந்து பார்த்த போது 150 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரன் (24), நந்தகுமார் (27) என்பதும் இவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com