என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே லாரியை கடத்திய வாலிபர் கைது
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த சிறுவானூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் பாபு. இவர் லாரி வைத்து தொழில் செய்துவருகிறார்.
இந்த நிலையில் கை வண்டூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி இருந்த அவரது லாரி மாயமானது. அதனை மர்ம நபர் கடத்தி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து சதீஷ்பாபு திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சந்திரதாசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் தீவிர விசாரணை செய்தனர்.
இதில் கடத்தப்பட்ட லாரி மப்பேடு அருகே உள்ள கோவிந்த மேடு கிராமத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று லாரியை மீட்டனர்.
லாரி கடத்தல் தொடர்பாக திருத்தணி வெங்கடாபுரம் அம்பாள் நகரை சேர்ந்த முனிரத்தினம் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் சதீஷ்பாபுவின் லாரியில் கைதான முனிரத்தினம் டிரைவராக வேலைபார்த்து விட்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நின்று இருப்பது தெரிந்தது. அவரை போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






