சென்னிமலையில் நர்சு தற்கொலை- தீபாவளி அன்று நடந்த சோகம்

இந்திரா நர்சிங் படிப்பு முடித்துவிட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.திடீரென சமையல் அறையில் இருந்த மின்விசிறியில் இந்திரா தாவணியால் தூக்குபோட்டு கொண்டார்.
சென்னிமலையில் நர்சு தற்கொலை- தீபாவளி அன்று நடந்த சோகம்
Published on

சென்னிமலை:

சென்னிமலை அருகே சில்லாங்காட்டுவலசை சேர்ந்தவர் நடராஜ். தற்போது சென்னிமலை பொறைன்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகள் இந்திரா (வயது 27). இவர் நர்சிங் படிப்பு முடித்துவிட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 4 வருடங்களாக இந்திராவுக்கு அவரது தந்தை நடராஜ் வரன் பார்த்து வந்தார். எனினும் இந்திராவுக்கு எந்த வரனும் சரியாக அமையவில்லை. இதனால் விரக்தி அடைந்த இந்திரா தனக்கு திருமணமே வேண்டாம் என வீட்டில் கூறி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இந்திராவின் தந்தை நடராஜ் தனது மனைவியுடன் சில்லாங்காட்டுவலசில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது இந்திராவும் அவருடைய தம்பி கோபாலகிருஷ்ணன் இருவரும் மட்டும் வீட்டில் இருந்தனர். திடீரென சமையல் அறையில் இருந்த மின்விசிறியில் இந்திரா தாவணியால் தூக்குபோட்டு கொண்டார். இதனைக்கண்ட அவரது தம்பி கோபாலகிருஷ்ணன் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இந்திராவின் பெற்றோர்கள் விரைந்து சென்று இந்திராவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் இந்திரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திராவின் தந்தை நடராஜ் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com