சங்கராபுரம் அருகே வீடு புகுந்து வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு

ராமாயி அம்மாள் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகன் ரமேஷ் வீட்டிற்கு சென்றார்.அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
சங்கராபுரம் அருகே வீடு புகுந்து வெள்ளி பொருட்கள்,  பணம் திருட்டு
Published on

கள்ளக்குறிச்சி 

சங்கராபுரம் அருகே எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி ராமாயி அம்மாள். இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகன் ரமேஷ் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் ராமாயி அம்மாள் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவி த்தனர்.

உடனே அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்து வீட்டை பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த ½ கிலோ வெள்ளி தட்டு, வெள்ளி காமாட்சி விளக்கு, வெள்ளி குங்குமச்சிமிழ் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தொியவந்தது. இது குறித்து ராமாயிஅ ம்மாள்கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து வெள்ளி பொரு ட்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com