search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman knife attack"

    ஆரணி அருகே பெண்ணை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    ஆரணி அருகே உள்ள சின்னம்பேடு அய்யனார் மேடு பகுதியை சேர்ந்தவர் சர்மிளா. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நேதாஜி. இவர்களது வீட்டுக்கு நடுவே மாமரம் உள்ளது. இதில் துணி காயப்போட கயிறு கட்டும் போது இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நேதாஜி கத்தியால் சர்மிளாவை வெட்டினார். இதில் சர்மிளா காயம் அடைந்தார்.

    இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து நேதாஜியை கைது செய்தனர்.

    மது குடிக்க பணம் தராததால் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், நொய்யல் அருகே வெல்லக்கல் மேட்டைச் சேர்ந்தவர் முனுசாமி (43). இவரது மனைவி பரமேஸ்வரி (30). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    முனுசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் பரமேஸ்வரியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவதன்று முனுசாமி பரமேஸ்வரியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முனுசாமி அருகில் கிடந்த கத்தியை எடுத்து பரமேஸ்வரியின்கழுத்தை அறுத்தார். வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் பரமேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வேலாயுதம்பாளைம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் வழக்கு பதிவுசெய்து முனுசாமியை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்து வருகிறது.

    பாபநாசம் அருகே பெண் உள்பட 3 பேருக்கு கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே திருவையாத்துக்குடி கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் பழனி மகன் கனகராஜ். இவரது குடும்பத்துக்கும் அதே ஊரை சேர்ந்த ரவி குடும்பத்திற்கும் இடப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று ரவி மகன்கள் ராஜேஷ், செல்வகுமார், பால கிருஷ்ணன், உறவினர்கள் சூர்யா, குமரேசன், தினேஷ் ஆகிய 6 பேரும் சேர்ந்து கனகராஜையும், அவரது அண்ணன் பாலமுருகன், அண்ணி சத்யா ஆகியோரை கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த 3 பேரும் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வன் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் (20), பாலகிருஷ்ணன் (45), சூர்யா (21) ஆகிய 3 பேரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

    மாஜிஸ்திரேட் ராஜசேகர் 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தலைமறைவாக உள்ள செல்வகுமார், குமரேசன், தினேஷ் ஆகிய 3 பேரையும் தேடிவருகிறார்கள்.

    தேவகோட்டை அருகே சொத்து பிரச்சினையில் பெண்ணுக்கு அரிவாளால் வெட்டிய மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள களபாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மீனாள் (வயது68). இவர்களது மகன் குமார் (40).

    கடந்த சில மாதங்களாகவே குமார் தனக்குரிய சொத்தை பிரித்து தருமாறு பெற்றோருடன் வற்புறுத்தி வந்துள்ளார். அவர்கள் மறுக்கவே குமார் அடிக்கடி பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று இரவு குமார் தனது சித்தப்பா மணிவண்ணனுடன் சென்று தாய் மீனாளிடம் சொத்து குறித்து மீண்டும் பிரச்சினை செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாய் என்றும் பாராமல் மீனாளை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து வேலாயுதபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா பிளவர், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குமார் மற்றும் மணிவண்ணனை கைது செய்தனர்.

    ×