திண்டிவனம் அருகே ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம்

ராஜவேல் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து.ஆட்டோ டிரைவர் பாஸ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
திண்டிவனம் அருகே ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மயிலம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் (வயது 57).இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரும் இவரது மனைவி மஞ்சுளா (50). ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்துபோ திண்டிவனம் போலீஸ் நிலையம் எதிரில் வந்து கொண்டிருக்கும்போது திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஆட்டோ ராஜவேல் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தலைமையாசிரியர் ராஜவேல், அவரது மனைவி மஞ்சுளா, ஆட்டோவில் பயணம் செய்த ராஜன் தெருவைசேர்ந்த யாகவல்லி, ஆட்டோ டிரைவர் வேங்கை பகுதியை சேர்ந்த பாஸ்ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்றனர். மேலும் ஆட்டோ டிரைவர் பாஸ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து விட்டார். இதுகுறித்து திண்டி வனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com