என் மலர்
இந்தியா

காதலிக்கு வேறொருவருடன் திருமணம்.. பெங்களூரு ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
- அந்தப் பெண் தனது திருமணப் பத்திரிகை மற்றும் திருமணப் புடவையை கிரணிடம் காட்டியுள்ளார்.
- சம்பவத்தன்று மாலை தனது தாயிடம் பேப்பர் மற்றும் பேனா கேட்டு வாங்கி அறைக்குள் சென்றுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் பகுதியில் வசித்து வந்தவர் 26 வயது ஜிம் பயிற்சியாளர் கிரண்.
பாடிபில்டரான இவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கிரண் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். ஆனால், அந்தப் பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அந்தப் பெண் தனது திருமணப் பத்திரிகை மற்றும் திருமணப் புடவையை கிரணிடம் காட்டியுள்ளார். இதனால் கிரண் கடந்த இரண்டு வாரங்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கிரண் எழுதியுள்ள கடிதத்தில், தனது மரணத்திற்குத் தனது காதலியும் அவரது தாயாருமே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிரண் தனது காதலியின் கடன்களை அடைக்கத் தனது சம்பாத்தியத்தைச் செலவு செய்துள்ளதாகவும், அவரைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று மாலை தனது தாயிடம் பேப்பர் மற்றும் பேனா கேட்டு வாங்கி அறைக்குள் சென்றுள்ளார்.
நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால், குடும்பத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
கிரண் பல பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்களை வென்றுள்ளார்.
அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், மகாலட்சுமி லேஅவுட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






