என் மலர்

  நீங்கள் தேடியது "Bengal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் பெங்கால் அணி 773 குவித்து டிக்ளேர் செய்தது.
  • பெங்கால் அணி சார்பில் அந்த அணியில் 9 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர்.

  பெங்களூரு:

  ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் பெங்கால், ஜார்க்கண்ட் அணிகள் இடையிலான காலிறுதி ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

  முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுக்கு 577 ரன்கள் எடுத்திருந்தது. மனோஜ் திவாரி 54 ரன்களுடனும், ஷாபாஸ் அகமது 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

  3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 773 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பெங்கால் அணியில் அபிஷேக் ராமன் (61 ரன்), கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (65), சுதிப் கராமி (186), அனுஸ்துப் மஜூம்தார் (117), மனோஜ் திவாரி (73), அபிஷேக் போரெல் (68), ஷபாஸ் அகமது (78) ரன்கள் எடுத்தனர். இதேபோல், சயான் மொண்டல் 53 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

  இந்நிலையில், முதல்தர கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு அணியில் 9 வீரர்கள் குறைந்தது 50 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன்பு 1893-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணிக்கு எதிரான முதல்தர போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 8 வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. இந்த 129 ஆண்டு கால சாதனையை பெங்கால் அணியினர் தகர்த்து புதிய சாதனை படைத்தனர்.

  மூன்றாம் நாள் முடிவில் ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜனதா ரத யாத்திரைக்கு அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. #BJP #RathYatra #SupremeCourt
  புதுடெல்லி:


  மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளில் டிசம்பர் 7 முதல் 14-ம் தேதி வரை பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் ரத யாத்திரையை நடத்த மாநில பா.ஜனதா கட்சி முடிவு செய்தது.

  இதற்கு மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பா.ஜனதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ரத யாத்திரைக்கு அனுமதி தர உத்தரவிட்டார். எனினும் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், பா.ஜனதா மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ரத யாத்திரைக்கு அனுமதி கோரி பா.ஜனதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

  இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கக் கோரிய பா.ஜனதாவின் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பா.ஜனதாவின் ரத யாத்திரையால், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் என, மாநில அரசு கவலை தெரிவித்துள்ளதை ஒதுக்க முடியாது. எனவே, சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில், நியாயமான முறையில், ரத யாத்திரைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்கத்தில் இதுவரை 27 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டு ஹெலிகாப்டர் சேவை வழங்கப்பட்டு வருவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். #HelicopterServices #Mamata
  கொல்கத்தா:

  மேற்கு வங்க மாநிலத்தில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன.

  சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில், மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ஹெலிகாப்டர் சேவை தொடர்பாக பதிவிட்டுள்ளார்.  ‘இன்று சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நாள். பங்களாவில் (மேற்கு வங்கம்) 2018 மே மாதம் வரை 27 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. பயணிகளின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கொல்கத்தாவில் இருந்து மால்டா, பாலர்காட், டிகா, கங்காசாகர் போன்ற இடங்களுக்கு ஹெலிகாப்டர் இணைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது’ என மம்தா டுவிட் செய்துள்ளார். #HelicopterServices #Mamata
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. #RanjiTrophy #Bengal #TamilNadu
  சென்னை:

  ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் இடையிலான லீக் (பி பிரிவு) ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் தமிழகம் 263 ரன்களும், பெங்கால் 189 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 141 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 216 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது.  இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தமிழக பவுலர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். அந்த அணி 150 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதி கட்டத்தில் சட்டர்ஜீயும், பிரதிப்தா பிரமானிக்கும் மனஉறுதியுடன் போராடினர். சட்டர்ஜீ 40 ரன்னிலும், அடுத்து வந்த அசோக் திண்டா ஒரு ரன்னிலும் வெளியேறினர். அப்போது அந்த அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. 10-வது விக்கெட்டுக்கு இறங்கிய இஷான் போரெலுக்கு, ரஹில் ஷாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. கேட்டு தமிழக வீரர்கள் முறையிட்டனர். நடுவர் வழங்க மறுத்தார். அதற்குள் அவர்கள் ஒரு ரன் ஓடி எடுத்தனர். முடிவில் பெங்கால் அணி 82.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. பிரமானிக் 25 ரன்களுடன் (97 பந்து, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரஹில் ஷா 5 விக்கெட்டுகளை அறுவடை செய்தும் பலன் இல்லாமல் போய் விட்டது.   #RanjiTrophy #Bengal #TamilNadu
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாமில் நேற்று நடந்த படுகொலைகளைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்த உள்ளது. #AssamULFAAttack #TMCProtestRallies #MamataBanerjee
  கொல்கத்தா:

  அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கெரோனிபாரி பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், அருகிலுள்ள வீட்டை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை உல்பா பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு முதல்வர் சர்பானந்த சோனோவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.  அசாம் தேசிய குடிமக்கள் பதிவின் விளைவாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய மம்தா, இந்த தாக்குதலைக் கண்டித்து மேற்கு வங்காளத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்ட பேரணிகள் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

  அதன்படி இன்று பல்வேறு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. தெற்கு கொல்கத்தாவின் ஜாதவ்புரம் பஸ் நிலையம் முதல் ஹஸ்ரா விலக்கு வரை நடைபெற உள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு இளைஞர் பிரிவு தலைவரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி  தலைமை தாங்க உள்ளார். #AssamULFAAttack #TMCProtestRallies #MamataBanerjee
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெங்காலை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி பெற்றது. 6-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 4-வது வெற்றியாகும். #VijayHazareTrophy
  சென்னை:

  விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, பெங்காலை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 49.4 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

  விஜய்சங்கர் 4 விக்கெட்டுகளும், முகமது 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். தொடர்ந்து ஆடிய தமிழக அணி 42 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெகதீசனும் (55 ரன்), அபினவ் முகுந்தும் (94 ரன்) அரைசதம் அடித்து வெற்றியை எளிதாக்கினர். 6-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 4-வது வெற்றியாகும். #VijayHazareTrophy
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்காள மாநிலத்தில் ஹோட்டல் அறையில் பாயெல் சக்ரபோர்டி என்ற நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #WestBengal #PayelChakraborty
  கொல்கத்தா:

  மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டலின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  இதையடுத்து அந்த அறையை சோதனை செய்த போது, மேற்குவங்காள மாநில நடிகையான பாயெல் சக்ரபோர்டி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பாயெல் நேற்று மாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் இளம் நடிகையின் மர்ம மரணம் குறித்து பல்வேறு வழிகளிலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #WestBengal #PayelChakraborty
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மக்களவையின் முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு வங்காளதேச மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். #SomnathChatterjee #RamNathKovind
  புதுடெல்லி:

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 89 வயதான இவர் இன்று காலை 8.15 மணியளவில் இயற்கை எய்தினார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக இருந்தவர் என்பதும், 10 முறை எம்.பியாக இருந்த சிறப்புக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  மிக மூத்த அரசியல் தலைவர்களின் ஒருவரான இவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில், சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், வங்காள தேசம் மற்றும் இந்திய மக்களுக்கான பேரிழப்பாக அவரது பிரிவு அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  இவரைத் தொடர்ந்து துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, தெலுங்கானா மாநில முதல்மந்திரி சந்திரசேகர் ராவ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மேற்கு வங்காள மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் மாநில முதல்மந்திரி நிதிஷ் குமார், உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். #SomnathChatterjee #RamNathKovind
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறிய நிலையில் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். #PanchayatElection #Pollviolence
  கொல்கத்தா:

  மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் இன்று காலை துவங்கியது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

  வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பிருந்தே மேற்கு வங்காளத்தின் பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங்கியது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின.

  இந்நிலையில், சாந்திபூர் பகுதியின் நதியா மாவட்டத்தில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு மையத்தை கையகப்படுத்தச் சென்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சவுஜித் பிராமனிக் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

  மேலும், பிரக்னாஸ் அம்டங்கா பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

  முர்ஷிதாபாத் பகுதியில் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஆரிப் அலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கணவன் மனைவி கொல்லப்பட்டு, அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.


  தொடரும் கலவரங்கள் காரணமாக, பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர். வன்முறை கும்பலால் 5 பத்திரிக்கையாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர்.

  வடக்கு பிராக்னஸ் மாவட்டத்தில் உள்ள துட்டாபூர் வாக்குச்சாவடிக்குச் செல்ல முயன்ற பாஜகவைச் சேர்ந்த பெண் வேட்பாளர் திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. #PanchayatElection #Pollviolence 
  ×