என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நடிகை
Byமாலை மலர்6 Sept 2018 2:50 PM IST (Updated: 6 Sept 2018 2:50 PM IST)
மேற்கு வங்காள மாநிலத்தில் ஹோட்டல் அறையில் பாயெல் சக்ரபோர்டி என்ற நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #WestBengal #PayelChakraborty
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டலின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த அறையை சோதனை செய்த போது, மேற்குவங்காள மாநில நடிகையான பாயெல் சக்ரபோர்டி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பாயெல் நேற்று மாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் இளம் நடிகையின் மர்ம மரணம் குறித்து பல்வேறு வழிகளிலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #WestBengal #PayelChakraborty

Next Story
×