search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அசாம் படுகொலைகளை கண்டித்து மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங். இன்று ஆர்ப்பாட்ட பேரணி
    X

    அசாம் படுகொலைகளை கண்டித்து மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங். இன்று ஆர்ப்பாட்ட பேரணி

    அசாமில் நேற்று நடந்த படுகொலைகளைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்த உள்ளது. #AssamULFAAttack #TMCProtestRallies #MamataBanerjee
    கொல்கத்தா:

    அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கெரோனிபாரி பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், அருகிலுள்ள வீட்டை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை உல்பா பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு முதல்வர் சர்பானந்த சோனோவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.



    அசாம் தேசிய குடிமக்கள் பதிவின் விளைவாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய மம்தா, இந்த தாக்குதலைக் கண்டித்து மேற்கு வங்காளத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்ட பேரணிகள் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று பல்வேறு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. தெற்கு கொல்கத்தாவின் ஜாதவ்புரம் பஸ் நிலையம் முதல் ஹஸ்ரா விலக்கு வரை நடைபெற உள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு இளைஞர் பிரிவு தலைவரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி  தலைமை தாங்க உள்ளார். #AssamULFAAttack #TMCProtestRallies #MamataBanerjee
    Next Story
    ×