search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public life"

    மாயாவதி, பொது வாழ்க்கைக்கு தகுதி அற்றவர் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, அரசியல் ஆதாயத்துக்காக தன் மனைவியை கைவிட்டவர் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியிருந்தார். அதனால் அவருக்கு பா.ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-



    சகோதரி மாயாவதி, பிரதமர் ஆவதில் உறுதியாக இருக்கிறார். அவரது ஆட்சிமுறை, நன்னெறி, பேச்சுத்திறன் ஆகியவை இதுவரை இல்லாத அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டன. மோடி பற்றிய அவரது தனிப்பட்ட தாக்குதல், அவர் பொது வாழ்க்கைக்கே தகுதியற்றவர் என்பதை வெளிக்காட்டி விட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த 6 கட்ட தேர்தல்களில் மாயாவதி கட்சி வேட்பாளர்களும், அவரது கூட்டணி கட்சி வேட்பாளர்களும் தோல்வி முகத்தில் உள்ளனர். அதனால் அவர் அரசியல் மன அழுத்தத்தில் இருக்கிறார். அவர் பலவீனமாக உள்ளார். அவரது நினைவு மங்கிவிட்டது. இவையெல்லாம் அவரது அறிக்கையில் தெளிவாக தெரிகிறது.

    அவருக்கு அரசியல் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. கண்ணியம், வெளிப்படைத்தன்மை, நேர்மை ஆகியவற்றை கடைபிடிப்பதுதான் அரசியல் ஊட்டச்சத்து சாப்பிடுவதற்கு சமம்.

    கண்ணியமற்ற வார்த்தைகளை பயன்படுத்தினால், அரசியல் ஆரோக்கியம் மேம்படாது. அவர் தனது நினைவுகளை புதுப்பிக்க வேண்டும்.

    மோடி, அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டவர். ஆனால், மாயாவதி தலித்துகளுக்காக எதுவுமே செய்யவில்லை. வரும் நாட்களில் எதிர்க்கட்சிகளின் கூச்சல் அதிகரிக்கும். தேர்தல் தோல்விக்கு பிறகு அது உச்சத்தை தொட்டு விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மக்களவையின் முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு வங்காளதேச மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். #SomnathChatterjee #RamNathKovind
    புதுடெல்லி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 89 வயதான இவர் இன்று காலை 8.15 மணியளவில் இயற்கை எய்தினார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக இருந்தவர் என்பதும், 10 முறை எம்.பியாக இருந்த சிறப்புக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மிக மூத்த அரசியல் தலைவர்களின் ஒருவரான இவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில், சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், வங்காள தேசம் மற்றும் இந்திய மக்களுக்கான பேரிழப்பாக அவரது பிரிவு அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



    இவரைத் தொடர்ந்து துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, தெலுங்கானா மாநில முதல்மந்திரி சந்திரசேகர் ராவ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மேற்கு வங்காள மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் மாநில முதல்மந்திரி நிதிஷ் குமார், உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். #SomnathChatterjee #RamNathKovind
    ×