என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகள்- 48 ஆண்டுகால சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்
- ஜேக்கப் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகளை ஜேக்கப் கைப்பற்றி உள்ளார்.
நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்றது.
இந்த போட்டியிலும் நியூசிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி தட்டி சென்றார். இந்த தொடரில் 23 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார்.
இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை ஜேக்கப் டஃபி (81 விக்கெட்டுகள்) படைத்துள்ளார். இதற்கு முன்பு சர் ரிச்சர்ட் ஜான் ஹட்லி 1985-ம் ஆண்டில் 79 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவரது நீண்டகால சாதனையை ஜேக்கப் முறியடித்துள்ளார். இதன் மூலம் 48 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
ஜேக்கப் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4 டெஸ்ட் போட்டியில் விளையாடி 25 விக்கெட்டுகளும் 20 டி20 போட்டியில் விளையாடி 35 விக்கெட்டுகளும் 11 ஒருநாள் போட்டியில் விளையாடி 21 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
மொத்தமாக ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் பட்டியலில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதல் 2 இடங்களில் உள்ளார். அவர் 2001-ம் ஆண்டில் 136 விக்கெட்டுகளும் 2006-ம் ஆண்டில் 128 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 1994-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே 120 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். 119 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் மெக்ராத் (1999-ம் ஆண்டு) உள்ளார்.






