என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: தென் ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளிய நியூசிலாந்து
    X

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: தென் ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளிய நியூசிலாந்து

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

    நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்றது.

    இந்த போட்டியிலும் நியூசிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி மொத்தமாக 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 1 டிராவுடன் 77.78 சதவீதம் பெற்றுள்ளது. 100 சதவீததுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் தொடர்கிறது.

    3 முதல் 9 இடங்கள் முறையே தென் ஆப்பிரிக்கா, இலங்கை பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உள்ளது.

    Next Story
    ×