என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொள்கை எதிரிகள் புலம்பும் அளவிற்கு இறங்கி அடிக்கிறார் உதயநிதி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியது.
- நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட சிம்மாசனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்.
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
தமிழகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் சக்திகளை எதிர்த்து திமுக வெற்றி பெற்றது. எடுத்தோம், கவிழ்த்தோம் என எதையும் செய்யவில்லை.
சோதனைகள், அடக்குமுறைகளுக்கு மத்தியில் திமுக ஒளிவிட்டுக் கொண்டிருக்க அதன் அடித்தளம் தான் காரணம்.
மக்களை சந்தித்து திமுகவை வளர்த்தோம். உதயநிதி தனது பொறுப்பை உணர்ந்து பவர்புல்லாக செயல்படுகிறார், இறங்கி அடிக்கிறார்.
கொள்கை ரீதியாக திமுகவை வலுவாக இயக்க உதயநிதி ஸ்டாலின் பாசறை கூட்டங்களை நடத்தினார்.
உதயநிதி Most Dangerous என கொள்கை எதிரிகள் புலம்பும் அளவிற்கு இறங்கி அடிக்கிறார்.
திமுகவிற்கு புதுப்பேச்சாளர்களை உருவாக்கி, அறிவுத்திருவிழாவை உதயநிதி ஸ்டாலின் நடத்தியுள்ளார்.
நம் தோளில் தமிழ்நாட்டை காக்கும் கடமை மட்டுமல்ல இந்தியாவையே காக்க வேண்டிய கடமை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






