சின்னசேலம் அருகே பணத்தகராறில் ரியல் எஸ்டேட் அதிபர் மீது தாக்குதல்

பணம் ஏலம் விடும் பொழுது சிவக்குமார் கணக்கு வழக்குகளை கேட்டார்.சிவகுமாரின் வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டி அவரை தாக்கினர்.
சின்னசேலம் அருகே பணத்தகராறில் ரியல் எஸ்டேட் அதிபர் மீது தாக்குதல்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகையின் போது அந்த ஊரை சேர்ந்த பொது மக்களுக்குள் பணம் வசூல் செய்து அவர்களுக்கு வட்டிக்கு பணம் ஏலம் விடுவது வழக்கம். அதேபோல் கடந்த தீபாவளி அன்று பணம் ஏலம் விடும் பொழுது சிவக்குமார் கணக்கு வழக்குகளை கேட்டார். அப்போது அதே ஊரை சேர்ந்த பூபதி, முருகேசன், சின்னதுரை, முத்துசாமி ஆகியோர் ஒன்று சேர்ந்து சிவக்குமாரிடம் தகராறு செய்தனர்.

பின்னர் சிவகுமாரின் வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டி அவரை தாக்கினர். பின்னர் அங்கிருந்து ஊர் முக்கியஸ்தர்கள் சண்டையை விலக்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிவக்குமாருக்கு காயம் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. பின்னர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி சிவகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் போலீசார் விசாரிக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com