என் மலர்tooltip icon

    இந்தியா

    எல்லையில் அத்துமீறி தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி
    X

    எல்லையில் அத்துமீறி தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி

    • போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.
    • பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவல் முயற்சி வெற்றி கரமாக முறியடிக்கப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கே.ஜி., செக்டர் என்ற இடத்தில் எல்லை கட்டுபாடு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நேற்று பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.

    இதற்கு இந்தியா ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதனால் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

    இதில் இந்திய ராணுவம் தரப்பில் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் உள்ள கிருஷ்ணா காட்டி பகுதி வழியாக பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவ முயன்றது.

    அப்போது பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்தியா ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. அங்கு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதாக இந்திய ராணுவம் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனாலும் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானை சேர்ந்த 5 வீரர்கள் காயமடைந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    பாகிஸ்தான் ராணுவ அத்துமீறல் சம்பவத்தையடுத்து கூடுதலாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டு எல்லையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×