பல்லடம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர். சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
 குப்பையில் இறந்து போன நாய் வீசப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
 குப்பையில் இறந்து போன நாய் வீசப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம் : 

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஓடையில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் வசிக்கவே இயலாத சூழ்நிலை நிலவுவதாக பலமுறை புகார் அளித்தும் குப்பைகள் அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com