என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rabies vaccine"

    • அந்த எருமையை சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்திருந்தது.
    • பச்சடி சாப்பிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடப்பட்டது.

    உத்தரப் பிரதேசத்தில் வெறிநாய் கடித்த எருமையின் பாலைக் குடித்த கிராம மக்கள் 200 பேருக்கு ரேபிஸ் பாதிப்புக்கு ஆளாகும்  அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் 23-ம் தேதி அந்த கிராமத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்வின்போது, வந்திருந்தவர்களுக்கு உணவுடன் ரய்தா எனப்படும் தயிர் பச்சடி பரிமாறப்பட்டது.

    அந்த பச்சடியை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான எருமையிடமிருந்து கறக்கப்பட்டது. அந்த எருமையை சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்திருந்தது.

    துக்க நிகழ்வு முடிந்து சில நாட்களில், அதாவது டிசம்பர் 26 அன்று, அந்த எருமை திடீரென உயிரிழந்தது. அது ரேபிஸ் நோய் அறிகுறிகளுடன் இறந்ததைக் கண்ட கிராம மக்கள், அதன் பாலைக் கொண்டு செய்யப்பட்ட உணவைச் சாப்பிட்டதால் தங்களுக்கும் நோய் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் மூழ்கினர்.

    தகவலறிந்த மாவட்ட சுகாதார அதிகாரிகள் உடனடியாக கிராமத்திற்கு விரைந்தனர். பச்சடி சாப்பிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடப்பட்டது.

    இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராமேஸ்வர் மிஸ்ரா கூறுகையில், "பொதுவாக பாலை நன்றாகக் காய்ச்சிக் குடிப்பதன் மூலம் ரேபிஸ் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இருப்பினும், மக்களின் பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இதுவரை யாருக்கும் பாதிப்பு அறிகுறி தென்படவில்லை. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார். 

    • முகாமில் 133 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
    • வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கூறினர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறி நோயினை தடுப்பதற்கான விழிப்புணர்வு மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு,பொன்னேரி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணா தலைமை தாங்கினார். ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் வக்கீல் சுகுமார், நியமன குழு உறுப்பினர் டி.கண்ணதாசன், ஆரணி பேரூர் திமுக செயலாளர் பி.முத்து மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    இம்முகாமில்,133 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர்,பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வெறி நோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.அப்பொழுது பேசிய டாக்டர்கள் மெய்ஞான சுந்தரி, கிரிதரன், சோபனா, சித்ரா ஆகியோர் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கூறினர். மேலும், வெறி நோய் தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறினர். முன்னதாக அனைவரையும் கால்நடை ஆய்வாளர்கள் கீதா, பிரபாவதி ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் தனசேகர், பசுபதி, ஆறுமுகம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில், செல்வி நன்றி கூறினார்.

    ×