என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Benefits of Eating Yogurt"

    • முகத்தில் தோல் உரிந்தால், சருமத்திற்கு நீரேற்றம் தேவை என்று அர்த்தம்.
    • தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம்தான் சருமம் வெண்மையாக உதவுகிறது!

    தயிரை உணவில் சேர்த்துக்கொள்வது பல்வேறு நன்மைகளை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏனெனில் இதில் லாக்டோபாகிலஸ் பல்கேரிகஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபிலஸ் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளதோடு, புரோபயாடிக்குகள், புரோட்டீன்கள், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்களும் உள்ளன. உணவு மட்டுமின்றி தயிர் அழகியல் நடைமுறையிலும் பயன்படுத்தப்படுகிறது. தயிர் பயன்பாடு சருமத்தை பளபளப்பாக்கும் என்று பொதுவாகவே பலருக்கும் தெரியும். ஆனால் சரும பளபளப்பு மட்டுமின்றி பல்வேறு சரும நலன்களை கொண்டுள்ளது தயிர். தயிரை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம். 

    சருமத்திற்கு ஈரப்பதம்...

    வறண்ட சருமம் என்பது நீரிழப்புக்கான அறிகுறியாகும். சருமம் வறண்டு போகும்போது முகத்தில் தோல் உரியும். அப்படி தோல் உரிந்தால், சருமத்திற்கு நீரேற்றம் தேவை என்று அர்த்தம். தயிரை முகத்தில் தடவுவது சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கான விரைவான மற்றும் பயனுள்ள வழியாகும். தயிர் சருமத்தின் மந்தமான நிலையை உடனடியாக மேம்படுத்தும். சருமம் பிரகாசமாகவும் மாற உதவும்.

    சரும பிரகாசம்...

    தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம்தான் சருமம் வெண்மையாக உதவுகிறது. இந்த லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, மெலனின் உற்பத்தியைக் குறைத்து, சருமத்தை பிரகாசமாக்குகிறது. இது மெலனின் உற்பத்தியைத் தடுக்கும் நொதிகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. 


    தயிரில் உடலுக்கும், சருமத்திற்கும் அதிக நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன

    புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பு

    சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சருமத்தை விரைவில் கருமையடையச்செய்யும். மேலும் சருமத்தை பாதிக்கும். புற ஊதா கதிர்களால் ஏற்படும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை சரிசெய்ய தயிரைப் பயன்படுத்தலாம். சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் தயிரில் உள்ள துத்தநாகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    நெகிழ்ச்சித்தன்மை

    சருமம் கொலாஜனை இழக்கும்போது, அதன் நெகிழ்ச்சி குறையும். தயிரை முகத்தில் தடவும்போது சரும நெகிழ்ச்சித்தன்மை அதிகரிக்கும்.

    முகச்சுருக்கங்களை தடுக்கும்

    சருமம் மீள்தன்மையுடன் இருக்கும்போது, சுருக்கங்கள் மற்றும் முகத்தில் புள்ளிகள் தோன்றுவது குறையும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இந்த நிலையைத் தடுக்க ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதன் காரணமாக, உங்கள் இளமையைப் பாதுகாக்க மென்மையான, பளபளப்பான சருமத்தைப் பெறுவீர்கள்.

    முகப்பரு

    தயிரில் உள்ள புரோபயாடிக்குகள், அழற்சி, முகப்பரு புண்களுக்கு முக்கிய காரணமான P. acnes பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவும் என்று கூறப்படுகிறது. ப்ரோபியோனிபாக்டீரியம் ஆக்னஸ் (P. acnes) என்ற பாக்டீரியா இயற்கையாகவே தோலில் வசிக்கிறது. இருப்பினும், முகத்துளைகள் அடைக்கப்படும்போது, இந்த பாக்டீரியாக்கள் பெருகி, வீக்கம் மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன. புரோபயாடிக்குகள் ஒட்டுமொத்த வீக்கத்தைக் குறைக்கின்றன. இது முகப்பருவைத் தணித்து, நீண்ட காலத்திற்கு முகப்பரு வருவதை தடுக்க உதவும்.

    பிற தோல்நோய்கள்

    புரோபயாடிக்குகளில் காணப்படும் அதே அழற்சி எதிர்ப்பு பண்புகள், ரோசாசியா, சொரியாசிஸ் போன்ற பிற தோல்நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகின்றன.

    • தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம்.
    • இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    தயிர் என்பது லேக்டோபேசிலஸ் பாக்டீரியாவால் நொதிக்கப்பட்டு லேக்டிக் அமிலம் லேக்டோஸாக மாற்றப்படுகிறது. தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும். தயிர் கைக்குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை எல்லோருக்கும் உகந்த உணவு. ஒவ்வாமை இருப்போர் விதிவிலக்கு.

    அதே சமயத்தில் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன், மீன், காடை, கவுதாரி என எந்தவொரு அசைவ உணவுடனும் தயிரை சாப்பிடகூடாது. அதிலும் மிக முக்கியமாக மீனையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் தோல் சம்பந்தமான ஒவ்வாமை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டிலுமே புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.

    தயிர் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் டயட்டில் நிச்சயமாக தயிரை சேர்த்துக் கொள்ளலாம். புரதச்சத்து நிறைந்த உணவுகள் உடலில் இருக்கும் தேவையற்ற எடையை இழக்க மிகவும் உதவும். தயிரில் புரதம் நிறைவாக உள்ளது. கால்சியம், வைட்டமின் பி -2, வைட்டமின் பி -12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.

    வயிற்றில் வெப்பம் அல்லது எரிச்சல் இருந்தால் தயிரில் இருந்து தயாரிக்கப்படும் லஸ்ஸி குடிப்பது நிவாரணம் அளிக்கிறது. இது தவிர, ஒருவருக்கு வயிற்றுப்போக்கு அல்லது உடல் சூடு காரணமாக ஏற்படும் வயிற்று வலி நீங்க ஒரு கப் தயிரில் சிறிதளவு வெந்தயம் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தயிர் சாதம் சாப்பிடலாம்.

    தயிரில் நல்ல பாக்டீரியா உள்ளது. இது உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. தயிர் சாப்பிடுவது குடலுக்கு நன்மை உண்டாகும். இது நம் உடலுக்குள் நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது, இந்த நல்ல பாக்டீரியா அல்சர் (வயிற்றுப்புண்) போன்ற பிரச்சனைகளில் இருந்தும் உங்களை பாதுகாக்கிறது.

    ×