search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "acid"

    • வாலிபர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை:

    மானாமதுரையை அடுத்த கொன்னக்குளம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார், சிவகங்கையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், இவர் கருங்காலி மாலை வாங்குவதற்காக மானாமதுரையில் உள்ள விஜய மார்த்தாண்டம், என்பவரது நகை கடைக்கு சென்றுள்ளார்.

    அப்போது, நகை பட்டறை உரிமையாளருக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. திடீரென, நகை பட்டறை உரிமையாளர் விஜய மார்த்தாண்டம், சதீஷ்குமார் மீது ஆசிட் வீசியதில், அவர் படுகாயம் அடைந்தார்.

    இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருங்காலி மாலை வாங்க சென்ற வாலிபர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மேத்யூ வளர்த்து வந்த மாடுகள் எப்படி இறந்தன? என்பதை கண்டறிய, இறந்து போன மாடுகள் அனைத்தும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
    • மாடுகள் இறந்ததால் மாணவர் மேத்யுவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி வெள்ளியமட்டம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவர் மேத்யூ பென்னி. இவரது தந்தை பென்னி ஏராளமான மாடுகளை வளர்த்து வந்தார். அதனை வைத்து பால் பண்ணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் பென்னி திடீரென இறந்துவிட்டார். இதனால் தனது தந்தை வளர்த்துவந்த மாடுகளை, மாணவன் மேத்யூ பராமரிக்க வேண்டிய நிலை உருவானது. இதையடுத்து அவர் தனது தந்தையின் பண்ணையில் இருந்த மாடுகள் அனைத்தையும் பராமரித்து பால் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    சிறு வயதில் மாடுகளை சிறப்பாக வளர்த்து வந்ததன் காரணமாக பிரபலமானார். இதன் காரணமாக மாணவன் மேத்யூவுக்கு விருதும் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர் வளர்த்து வந்த 22 மாடுகளில் பல மாடுகள் அடுத்தடுத்து சுருண்டுவிழுந்தன. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர்.

    இருந்தபோதிலும் பண்ணையில் இருந்த 13 மாடுகள் அடுத்தடுத்து இறந்தன. இதனைப்பார்த்து மாணவன் மேத்யூ அதிர்ச்சியடைந்தார். தான் வளர்த்து வந்த மாடுகள் இறந்துகிடப்பதை பார்த்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மூலமட்டம் அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    மேத்யூ வளர்த்து வந்த மாடுகள் எப்படி இறந்தன? என்பதை கண்டறிய, இறந்து போன மாடுகள் அனைத்தும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது மரவள்ளி கிழங்கு தோல் சாப்பிட்டதே மாடுகள் இறந்ததற்கு காரணம் என்பது தெரியவந்தது.


    மாடுகள் சாப்பிட்ட மரவள்ளி கிழங்கு தோலில் ஹைட்ரோசியானிக் அமிலம் கலந்திருந்ததால் அவை இறந்திருக்கின்றன. இறந்தவற்றில் 5 மாடுகள் கறவை மாடுகள் ஆகும். 13 மாடுகள் இறந்ததால் மாணவர் மேத்யுவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

    அவர் மாடுகளுக்கு காப்பீடு எதுவும் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் அவருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தான் வளர்த்து வந்த மாடுகள் இறந்தது மாணவரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இறந்த மாடுகள் அனைத்தும் அங்குள்ள தோட்டத்தில் குழி தோண்டி புகைக்கப்பட்டன.

    மற்ற மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    • கடந்த ஏப்ரல் மாதம் 25ந் தேதி இரவு சுப்பிரமணியன், கவின்குமாருக்கு சொந்தமான 40 தென்னை மரங்கள் மீது ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது.
    • பல்லடம் நீதிமன்றத்தில் விவசாயி கவின்குமார் வழக்கு தொடர்ந்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வடக்கு அவினாசி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 37). இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் சுமார் 300 தென்னங்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார். கவின் குமார் என்பவருக்கும் அவரது பக்கத்து தோட்டத்துக்காரர் சுப்பிரமணியன் என்பவருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் 25ந் தேதி இரவு சுப்பிரமணியன், கவின்குமாருக்கு சொந்தமான 40 தென்னை மரங்கள் மீது ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் மரங்கள் முழுவதுமாக பட்டு போனது. இதுகுறித்து கவின்குமார் அவிநாசி பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

    இதுகுறித்து பல்லடம் நீதிமன்றத்தில் விவசாயி கவின்குமார் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இச்சம்பவம் குறித்து உடனடியாக அவிநாசி பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிட் ஊற்றிய நபரை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

    நீதிமன்ற உத்தரவுப்படி சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோர் மீது அவிநாசி பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    வழக்கு பதிவு செய்து 15 நாட்கள் ஆகியும் இன்னும் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோரை போலீசார் கைது செய்யவில்லை எனவும், வேளாண்மை துறை சார்பில் ஆசிட் ஊற்றியதால் பட்டுப்போன 40 தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயி கவின்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • 4 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளார்.
    • 40 தென்னை மரங்கள் திடீரென கருகியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடக்கு அவினாசி பாளை யம் ஊராட்சிக்கு உட்பட்டது புதுப்பாளையம். இந்த ஊரைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் கவின் குமார் (வயது 31). இவர் சுமார் 4 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்து ள்ளார். இந்த நிலையில் இவரது தோட்டத்தில் இருந்த சுமார் 40 தென்னை மரங்கள் திடீரென கருகியது. இதனை ஆய்வு செய்த கவின்குமார் அதற்கு ஆசிட் மற்றும் களைக்கொல்லி மருந்துகள் ஊற்றி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து கவின் குமார் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    தென்னை மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய மர்ம நபர் யார்? முன்விரோதம் காரணமாக யாராவது இதனை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரசு பள்ளி ஆசிரியர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ. நகர் பகுதியை சேர்ந்தவர் காந்திசாந்தகிரன் (வயது 58). இவர் கீழ உரப்பனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவரது மனைவி செந்தில்குமாரி அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில் காந்திசாந்தகிரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதில் மனமுடைந்த அவர் ஆசிட்டை குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த பரிதாப சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    முதியவர்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆஸ்டின்பட்டி அருகே உள்ள நிலையூர் கைத்தறி நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 71). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதில் மனம் உடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆசிட் குடித்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
    • கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்

    கரூர்

    குளித்தலை வைகநல்லூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்ராஜ் (வயது 54). இவருக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். ரமேஷ்ராஜ் கடந்த 7 ஆண்டுகளாக தனது தம்பி வெங்கடேஷ்ராஜ் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். ரமேஷ்ராஜ் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர் ஆசிட்டை குடித்து விட்டாராம். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரமேஷ்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கடேஷ்ராஜ் ெகாடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • கால்நடைகளின் வால் உள்ளிட்ட பாகங்களை ஒரு சிலர் சட்டவிரோதமாக அறுத்து கொடுமைப்படுத்தி இருந்தனர்.
    • தோட்டத்தில் 40 எருமை மாடுகளை வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு ெரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 39). விவசாயி. இவரது தோட்டத்தில் 40 எருமை மாடுகளை வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்ற வந்த 25-க்கும் மேற்பட்ட எருமை, மாடுகளுக்கு கொப்புளங்கள் ஏற்பட்டது.

    முதலில் இதனை பெரிதாக எடுத்து கொள்ளதாக ராஜ்குமார் 4 நாட்கள் கழித்து எருமைகள் மீது இருந்த கொப்புளங்களில் சீல் வடிந்து தோல் உரிய ஆரம்பிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒரு சில மாடுகள் மீது அதன் சதைகளை தொங்கும் நிலையில் காணப்பட்டன. பாதிக்கப்பட்ட சில எருமை கள் வயிற்றில் குட்டியுடனும், பால்கறக்கும் தன்மையுடன் இருக்கின்றன.

    இதுதொடர்பாக கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிகிச்சை அளித்து ஆய்வு செய்தனர். அதில் கால்நடைகள் மீது ஆசிட் வீசப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக ராஜ் குமார் மேட்டுப் பாளையம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் தனியார் நர்சரி உரிமையாளர் மகன் ரவிச்சந்திரன், ஊழியர் மணிகண்டன் ஆகியோர் மீது புகார் அளித்தார்.

    இது தொடர்பாக மேட்டுப் பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தலை மறைவாகி உள்ள ரவிச் சந்திரன், மணி கண்டன் ஆகியோர் தேடி வருகின்றனர். இதுகுறித்து விவசாயி ராஜ்குமார் கூறுகையில் ஏற்கனவே பழத்தோட்டம் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று வந்த கால்நடைகளின் வால் உள்ளிட்ட பாகங்களை ஒரு சிலர் சட்டவிரோதமாக அறுத்து கொடுமைப்படுத்தி இருந்தனர்.

    ஆனால் இந்த முறை கால்நடைகள் மீது ஆசிட் வீசி இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அ.தி.மு.க. கவுன்சிலர் எழுந்து நடை பயிற்சி செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றபோது அதன் மீது ஈரம் இருந்து உள்ளது.
    • சிறிது நேரம் கழித்து பார்த்தபோது சீட் கிழிந்தும், உடைகள் மேல் பட்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் பரமசிவம். இவர் அ.தி.மு.க.வில் 12-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார்சைக்கிளை தனது வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். காலையில் எழுந்து நடை பயிற்சி செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றபோது அதன் மீது ஈரம் இருந்து உள்ளது.

    உடனே அதனை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது சீட் கிழிந்தும், உடைகள் மேல் பட்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    அப்போது தான் அவர் தனது மோட்டார் சைக்கிள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளதை அறிந்தார். இந்த சம்பவம் பற்றி சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இந்த ஆசீட் வீச்சு சம்பவம் நடந்ததா? அல்லது உட் கட்சி குழப்பமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருணமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த அடிமாலி பகுதியை சேர்ந்தவர் ஷீபா (வயது 35).

    ஷீபாவுக்கும் திருவனந்தபுரத்தை அடுத்த பூஜப்புரா பகுதியை சேர்ந்த வாலிபர் அருண்குமார் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    பலமாதங்களாக பேஸ்புக்கில் பேசிவந்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். அதன்பின்பு அடிக்கடி காதலர்கள் தனிமையில் சந்தித்து பேசிவந்தனர்.

    இந்த நிலையில் ஷீபா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அருண்குமாரை வற்புறுத்தினார். அப்போதுதான் ஷீபா, திருமணம் ஆனவர் என்பதும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் அருண்குமாருக்கு தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் ஷீபாவை சந்திப்பதை தவிர்த்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஷீபா, அருண்குமாரை சமரசம் பேச வருமாறு அடிமாலிக்கு அழைத்தார்.அவரும் நண்பர்களுடன் நேற்று அடிமாலி சென்றார்.

    அடிமாலி சென்றதும் அங்குள்ள இரும்பு பாலம் அருகே அருண்குமாரும், ஷீபாவும் தனியாக சந்தித்து பேசினர். சிறிதுநேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஷீபா, திடீரென மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அருண்குமார் மீது வீசினார். இதில் அருண் குமாரின் முகத்தில் ஆசிட் பட்டு எரிந்தது. அவர் அலறிதுடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், அவரது நண்பர்களும் ஓடிவந்தனர். அவர்கள் அருண்குமாரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இச்சம்பவம் பற்றி அடிமாலி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அருண்குமாரிடம் விசாரணை நடத்தினர். அருண்குமார் போலீசாரிடம் கூறும்போது, ஷீபாவுடனான தொடர்பு மற்றும் திருமணத்திற்கு மறுத்ததால் அவர் பணம் கேட்டு மிரட்டியதும், பணம் கொடுக்க மறுத்ததால் தன் மீது ஆசிட் வீசியதாகவும் கூறினார்.

    பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண்

    இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.பின்னர் ஷீபா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கோவையில் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் ஷாஜூ (வயது 26). தங்க நகை தொழிலாளி. இவர் கோவை பூமார்க்கெட்டில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தங்கநகை பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு பட்டறையில் வேலை செய்து கொண்டு இருந்த ஷாஜூ அங்கு இருந்த ஆசிட்டை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக ஷாஜூவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஷாஜூ இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆர்.எஸ். புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜூ தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    போடி அருகே 250 தென்னங்கன்றுகளை ஆசிட் ஊற்றி அழித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான ராசிங்காபுரம், குரங்கணி, மேலசொக்க நாதபுரம் உள்ளிட்ட கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்து காணப்படும் இந்த பகுதிகளில் ஏராளமான மா மரங்கள், தென்னந்தோப்புகள் அதிக அளவில் உள்ளது.

    இந்த பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. எனவேதான் ஏராளமான விளை நிலங்கள் காணப்படுகிறது. போடி அருகே மரிமூர்குளம் பகுதியில் கந்தவேல் தோட்டத்தில் ஏராளமான தென்னங்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கந்தவேலின் மகன் குமார் தென்னங்கன்றுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது தென்னங் கன்றுகள் கருகி அழிந்த நிலையில் காணப்பட்டது. இந்த தென்னங்கன்றுகளில் ஆசிட் ஊற்றப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.சுமார் 250 தென்னங்கன்றுகள் மர்ம கும்பலால் ஆசிட் ஊற்றப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் வன விலங்குகள் அதிகம் சுதந்திரமாக உலா வருகிறது. அந்த விலங்குகள் இந்த பகுதியில் மேயும் போது ஆசிட் படிந்த புற்களை தின்றால் அவை உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. இது குறித்து குமார் குரங்கணி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து தென்னங்கன்றுகளுக்கு ஆசிட் ஊற்றிய நபர்கள் யார்? எதற்காக ஊற்றிச் சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுக்கோட்டையில் குடும்ப தகராறில் ஆசிட்டை குடித்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). இவர் அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்று முனதினம் காலை அருண்குமார் வேலைக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. 

    இந்தநிலையில் அருண்குமார் புல்வயல் பகுதியில் உள்ள காட்டு பகுதிக்குள் ஆசிட் குடித்த நிலையில் உயிருக்கு போராடுவதாக அவரது நண்பர்களுக்கு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து அவரது நண்பர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அருண்குமாரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக இறந்தார்.

    அவர் குடும்ப தகராறு காரணமாக ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் பணிச்சுமையால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும்  அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருண்குமாருக்கு திருமணமாகி மீனாட்சி என்ற மனைவியும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
    ×