என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. கவுன்சிலர் மோட்டார் சைக்கிள் மீது ஆசிட் வீச்சு
  X

  சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. கவுன்சிலர் மோட்டார் சைக்கிள் மீது 'ஆசிட்' வீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அ.தி.மு.க. கவுன்சிலர் எழுந்து நடை பயிற்சி செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றபோது அதன் மீது ஈரம் இருந்து உள்ளது.
  • சிறிது நேரம் கழித்து பார்த்தபோது சீட் கிழிந்தும், உடைகள் மேல் பட்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

  சங்கரன்கோவில்:

  சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் பரமசிவம். இவர் அ.தி.மு.க.வில் 12-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

  சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார்சைக்கிளை தனது வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். காலையில் எழுந்து நடை பயிற்சி செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றபோது அதன் மீது ஈரம் இருந்து உள்ளது.

  உடனே அதனை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது சீட் கிழிந்தும், உடைகள் மேல் பட்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

  அப்போது தான் அவர் தனது மோட்டார் சைக்கிள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளதை அறிந்தார். இந்த சம்பவம் பற்றி சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

  போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இந்த ஆசீட் வீச்சு சம்பவம் நடந்ததா? அல்லது உட் கட்சி குழப்பமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×