search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Hair"

  • அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர்.
  • சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள மாநில வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கோர்ட்டு அலுவலகம் கட்ட மாநில அரசு முடிவு செய்தது.

  பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட உள்ள இடத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளது.

  புதிய கட்டிடத்திற்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அப்போது வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விரட்டியடித்தனர்.

  அப்போது கல்லூரி மாணவி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். பைக்கில் வந்த 2 பெண் போலீசார் மாணவியை துரத்தி சென்றனர்.

  மாணவியின் அருகில் சென்ற பெண் போலீஸ் ஒருவர் மாணவியின் நீண்ட தலை முடியை பிடித்து கொண்டார். இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

  கீழே விழுந்த மாணவியின் தலைமுடியை பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்துக் கொண்டு பைக்கை ஓட்டி சென்றனர்.

  இதனால் மாணவி சிறிது தூரம் தரையில் விழுந்து உரசியபடி சென்றதால் காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த சில மாணவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  இதுகுறித்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  அதில் இந்த சம்பவம் ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

  இதுகுறித்து மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். 

  • சுருள் முடி ஸ்டைல் செய்வது என வித்தியாசமான அலங்காரத்தை விரும்புகின்றனர்.
  • பயனர்கள் அந்த வாலிபரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

  சமீபகாலமாக இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் தங்களது தலைமுடிக்கு கலர் அடிப்பது, சுருள் முடி ஸ்டைல் செய்வது என வித்தியாசமான அலங்காரத்தை விரும்புகின்றனர்.

  அந்த வகையில் தற்போது எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர் கியாஸ் லைட்டரை பயன்படுத்தி சுருள் முடி ஸ்டைல் உருவாக்கும் 'டெக்னிக்' பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

  அதில், வாலிபர் கியாஸ் லைட்டரை லேசான தீயில் சூடாக்குகிறார். பின்னர் அதனை தலைமுடியில் வைத்து அதன்மீது முடியை சுற்றுவதன் மூலம் அழகான சுருள் முடி வடிவம் கிடைக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் அந்த வாலிபரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

  • சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.
  • மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.

  சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.லக்னோ:

  உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரை சேர்ந்த சிறுவன் சிடக்தீப் சிங் சாஹல் (வயது 15). சிறு வயது முதலே சாஹலுக்கு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால், மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்த சாஹல், தனது பெற்றோரிடம் அவற்றை நீக்கி விடும்படி கேட்டிருக்கிறார்.

  ஆனால் வளர்ந்ததும், அதன்மீது தனி கவனம் செலுத்த தொடங்கியதுடன், தலைமுடி தன்னில் ஒரு பகுதி என்ற உணர்வும் சாஹலுக்கு ஏற்பட்டது. சீக்கிய மதத்தினை சார்ந்த சாஹல், மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.

  சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்நிலையில், சாஹலின் நீண்ட தலைமுடியானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.

  இதுபற்றிய வீடியோ ஒன்றை கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் சாஹல், தன்னுடைய தலைமுடி பராமரிப்பு பற்றி பேசியுள்ளார். தலைமுடியை அலசி, சுத்தம் செய்து, எப்படி தலைமுடியை வாருவது என்பது பற்றி சாஹலின் தாயார் உதவி செய்திருக்கிறார். அப்படி அவர் உதவவில்லை எனில், நாள் முழுவதும் அதற்காக செலவிட வேண்டி இருக்கும் என சாஹல் கூறுகிறார்.

  அப்படி தலைமுடியை அலசாமல் அல்லது காய வைக்காமல் இருக்கும்போது, சீக்கிய முறையை பின்பற்றுபவர்களிடையே காணப்படுவது போன்று, அதனை உருண்டையாக சுற்றி வைத்து, டர்பன் அணிந்து கொள்கிறார். இந்த சாதனையை பற்றி மற்றவர்களிடம் கூறும்போது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நான் பொய் கூறுகிறேன் என நினைத்துவிட்டனர். அதன்பின்பு, அவர்களை நம்ப வைக்க சில சான்றுகள் தேவைப்பட்டன என அந்த வீடியோவில் கூறுகிறார். கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2024-ல் தன்னுடைய சாதனையும் ஒரு பகுதியாக இருப்பதற்காக சாஹல் அதிக மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

  • ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கில் பல பக்க விளைவுகளும் உள்ளன.
  • அதிகப்படியான வெப்பம் முடியின் மீது செலுத்தப்படுகிறது.

  ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வது பெண்களுக்கு அழகான தோற்றத்தைத் தருகிறது. இருப்பினும் இது முடியின் ஆரோக்கியத்துக்கு எந்த அளவுக்கு நல்லது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கில் பல பக்க விளைவுகளும் உள்ளன. எல்லோருக்கும் இந்த பின் விளைவுகள் வரும் என்று இல்லை. இருப்பினும், ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்ளும் பெண்கள் ஒவ்வொருவரும் இதைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

  முடி நீட்டமாக இருப்பதற்காக முடியில் ரசாயன கிரீம் தடவப்படுகிறது. மேலும், அதிகப்படியான வெப்பம் முடியின் மீது செலுத்தப்படுகிறது. இதனால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இந்த ரசாயன கிரீம் நம்முடைய கூந்தலுக்கு சரியாக இருக்குமா என்பதை எல்லாம் முதலில் சோதனை செய்துகொண்ட பிறகே முடிவு செய்ய வேண்டும்.

  ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கை வீட்டில், பார்லரில் செய்து கொள்ளலாம். வீட்டில் செய்வதாக இருந்தால் அடிக்கடி செய்ய வேண்டியதாக இருக்கும். பார்லரில் செய்யப்படும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் எட்டு மாதம் முதல் ஒரு வருடம் வரை இருக்கும். அதன் பிறகு மீண்டும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய வேண்டியிருக்கும்.

  ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதன் மூலம் சிலருக்கு நிரந்தரமாக முடி இழப்பு ஏற்படலாம். ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் மற்றும் அதிக வெப்பம் முடியின் வேர்க்காலைப் பாதித்து, முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.

  சிலருக்கு ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தற்காலிக முடி உதிர்வு பிரச்சனை ஏற்படலாம்.

  முடி நேராக இருக்க அயர்ன் செய்யப்படுகிறது. இந்த வெப்பம் முடிக்கு வறண்ட தன்மையை கொடுக்கும். சிலருக்கு முடி ஜீவனின்றி இருப்பது போல பொலிவிழந்து காணப்படும்.

  முடியில் உறுதியாக இருக்க அதில் ஹைட்ரஜன் இணைப்பு உள்ளது. அதை சிதைத்துத்தான் முடியை நேராக்குகிறோம். இதனால் முடியின் உறுதித்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்த சில நாட்களிலேயே சிலருக்கு முடி உடைந்து கீழே விழுவதைக் காணலாம்.

  வெயிலில் நடந்தாலே, குளிர்ந்த நீரில் குளித்தாலே, மழையில் நனைந்தாலோ கூட இவர்களுக்கு முடி உடைந்துவிடும்.

  ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தலையின் வேர்ப் பகுதியில் எண்ணெய் சுரப்பு நின்றுவிடலாம். இதனால் தலையின் வேர் பரப்பு உலர்ந்து, அரிப்பு, பொடுகு போன்ற பிரச்னை ஏற்படலாம்.

  • பெரும்பாலும் பெண்கள் பலர் தலைமுடியை தானமாக வழங்க முன்வருகின்றனர்.
  • சிறுவன் ஒருவர் தானமாக வழங்கியது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

  அவிநாசி :

  புற்றுநோயாளிகளுக்கு பலர் தங்களது தலைமுடிகளை தானமாக வழங்கி வருகின்றனர். பெரும்பாலும் பெண்கள் பலர் தலைமுடியை தானமாக வழங்க முன்வருகின்றனர். இந்தநிலையில் பெண்கள் மட்டும் தான் தானம் கொடுக்க முடியுமா?

  நானும் கொடுப்பேன் என்று, அழகாக தலைமுடியை வளர்த்து, சிறுவன் ஒருவர் தானமாக வழங்கியது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.அவிநாசி சேவூர் ரோடு, வ.உ.சி., காலனியை சேர்ந்தவர் வழக்கறிஞர் விஜய் ஆனந்த்.இவரது மனைவி சங்கீதா. இவர்கள் மகன் இறை எழில்பரிதி, நீளமாக தலைமுடியை வளர்த்து புற்றுநோயால்பாதித்தவர்களுக்கு, விக் தயாரிப்பதற்காக முடியை தானம் வழங்கியுள்ளார். முடிதானம் செய்த சிறுவனை அவிநாசி கிழக்கு ரோட்டரி நிர்வாகிகள் உட்பட பலர் பாராட்டினர்.

  வெயில் காலத்தில் எண்ணெய் வைப்பதற்கான சில ஆயுர்வேத குறிப்புகளை காண்போம். இதன் மூலம் மயிர்க்கால்கள் தூண்டப்பட்டு தலைமுடி “பிசுபிசுப்பின்றி” காணப்படுவதுடன் கூந்தலின் வேருக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
  வெயில் காலத்தில் கூந்தல் பிசுபிசுப்பாக இருக்கும். வெயிலாகவும் காற்றில் ஈரப்பதம் நிறைந்தும் இருக்கும் காலங்களில் தலைக்கு எண்ணெய் வைத்தால் அது கூந்தலை மேலும் பிசுபிசுப்பாகவும் தொட்டால் ஒட்டும் அளவுக்கு ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்திவிடும்! ஆனால் அதற்காக நாம் வெயில் காலத்தில் தலையில் எண்ணெய் வைக்காமல் இருக்க வேண்டுமா?

  “அழகான கூந்தலை ஒருவர் பெற வேண்டுமென்றால் கூந்தலுக்கு ரெகுலராக எண்ணெய் வைக்க வேண்டும் கூடவே சத்துணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். வலுவான பளபளப்பான கூந்தல், ஒருவரின் உடல் போஷாக்காகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை குறிக்கும் ” பழமையான ஆயுர்வேத அறிவியலின்படி, இயற்கையான பொருட்கள் அடங்கிய தைலங்களை கொண்டு கூந்தலுக்கு தொடர்ச்சியாக எண்ணெய் வைப்பதே உங்களது கூந்தலின் தரத்தை உயர்த்துவதற்கான ஒரே வழி. அத்தகைய கூந்தல் தைலங்கள் முடியை வேரிலிருந்து உறுதியாக்கி பளபளப்பாக்குகின்றன !

  வெயில் காலத்தில் எண்ணெய் வைப்பதற்கான சில ஆயுர்வேத டிப்ஸ்களை இப்போது நாம் காண்போம். இதன் மூலம் உங்கள் மயிர்க்கால்கள் தூண்டப்பட்டு தலைமுடி “பிசுபிசுப்பின்றி” காணப்படுவதுடன் கூந்தலின் வேருக்கு தேவையான ஊட்டச்சத்தினையும் அது வழங்குகிறது.

  * கூந்தலுக்கு குறைவான அளவு எண்ணெய் பூசுவதால் வெயில் காலத்தில் சூரியனின் கடுமையான அல்ட்ரா-வயலெட் கதிர்களிடமிருந்து கூந்தலை காக்கலாம். எனவே, வெயில் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதை முழுவதும் தவிர்க்க வேண்டாம். சிறிது பூசிக் கொள்ளலாம்.

  * தலைக்கு எண்ணெய் தேய்த்து இரவு முழுவதும் அதனை ஊறவிடுவதால் ஷாம்பூ தேய்த்தாலும் கூட உங்களது தலை சருமம் எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்படும். இதனை நீக்க அதிகளவு ஷாம்பூ பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் கூந்தல் வேர்களில் கெமிக்கல்கள் படியக்கூடும். அதற்கு பதிலாக கூந்தலில் சிறிது தைலம் தடவி இரண்டு மணி நேரங்களுக்குள் தலைக்கு குளித்துவிடவும். ஆயுர்வேதத்தில் கூந்தலில் எண்ணெய் வைத்து இரவு முழுக்க ஊற விடுவது பற்றி சிறப்பாக கூறப்படவில்லை.

  * மருத்துவ குணங்கள் நிறைந்த எண்ணெயை கூந்தலில் பூசுவது அவசியமாகும். இதனால் தலையில் பூஞ்சை வளர்ச்சி தவிர்க்கப்பட்டு தலை சருமம் ஆரோக்கியமாகிறது. ஆனால் சரியான முறையில் பூசுவதும் பின்னர் வாஷ் செய்வதும் அவசியமாகும். மேலும் அது மயிற்கால்களுக்கிடையே உள்ள இடைவெளியை நிரப்பி தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மயிற்கால்களுக்குள் ஊடுறுவாமல் காக்கிறது. அதிக சக்தியுடைய ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்பூக்களை பயன்படுத்துவதால் கூந்தல் பாதிக்கப்படுவதையும் அது தடுக்கிறது. 
  தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேம்புவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது.
  வேப்ப மரங்கள், மருத்துவ குணங்கள் கொண்டவை. "வேப்ப எண்ணெய் பொடுகுப் பிரச்சனையை குணப்படுத்தும். அந்தக் காலத்தில், வேப்பங் குச்சிகளை பல் துலக்கப் பயன்படுத்தினர். வேப்ப மரத்தின் இலைகள், பழங்கள், ஆகியவை காய்ச்சல், நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தலாம். மேலும், வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. ஆயூர்வேதத்தின்படி, வேப்பம், சீகைக்காய், நெல்லி, ஆகியவை தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்க கூடியவை.
   
  தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேம்புவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும். தலைமுடி சரும பிரச்சனைகளால், முடி வேரிலும் பாதிப்பு அடையும். வேப்ப நீர் உபயோகித்து தலை அலசுவதினால், சுத்தம் ஆகும். முடி வளர்ச்சிக்கும் வேம்பு பயன்படும்.

  வேப்ப எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துவதனால், தலைப் பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் சீராக அமைந்து முடி வளர்ச்சிக்கும் உதவியாக அமையும். வேப்ப எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலீவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தினால், இன்னும் ஆரோக்கியமானது. வேப்ப பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், முடி வளர்ச்சி பெருகும்.

  மால்ஸ்சேசியா என்ற பூஞ்சையல் ஏற்படும் பொடுகு பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொடுகு, தலையில் இருக்கும் பிசுப்பிசுப்பான எண்ணெய் தேகத்தில் இருக்கும். பொடுகு பிரச்சனைகளால் அரிப்பு ஏற்படும்.

  வேப்ப எண்ணெய் உபயோகித்து, பொடுகுப் பிரச்சனையை போக்கலாம். தேங்காய் எண்ணெயுடன் வேப்ப இலைகள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின், சில எலுமிச்சை சாறு துளிகள் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை தலைமுடியில் தேய்த்து, இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் கழுவ வேண்டும். இன்னொரு முறையாக, வேப்ப பொடி மற்றும் இலை சேர்த்த கலவையை பயன்படுத்தி வந்தால், பொடுகு நீங்கும். 
  முடி கொட்டுவதற்கு முக்கியமான காரணம் போதுமான சத்தில்லாத உணவுப்பழக்கம் மற்றும் நமது பழக்கவழக்கங்களும் தான். இதற்கான தீர்வை அறிந்து கொள்ளலாம்.
  பள்ளிக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் தலைமுடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. உடல் உஷ்ணத்தால் முடிஉதிர்வு மட்டுமல்லாமல், முடி வறட்சி, பொடுகு, புண்கள், வியர்வைத் திட்டுகள் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

  பெண்கள் தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்குள் தலைமுடியைப் பின்னிக்கொண்டு ஈரத்துடன் இருப்பதும் முடி உதிர்வுக்குக் காரணமாகிறது. நாம் பயன்படுத்தும் சீப்புக்கும் இதில் பெரும்பங்கு உண்டு.

  பொதுவாக பிளாஸ்டிக் சீப்பையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.பிளாஸ்டிக் சீப்பால் தலையில் அழுத்தம் கொடுக்கும்போது மயிர்க்கால்கள் வறண்டு, உஷ்ணமாகி முடி உதிர்வு ஏற்படுகிறது. மன உளைச்சல், மனச்சோர்வு, அதிக நேரம் கணினியில் வேலைசெய்வதால் உண்டாகும் வெப்பம் போன்றவையும் முடி உதிர்வை ஏற்படுத்தும்.'

  இன்றைக்குத் தரமில்லாத உணவுகளும், ரசாயன நச்சுகள் கலந்த உணவுகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. அந்த உணவுகளில் போதுமான அளவு இரும்புச்சத்து, வைட்டமின்  சத்துகள் இல்லாததும் முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது. இதுதவிர, தைராய்டு போன்ற ஹார்மோன் குறைபாடுகள், தைராய்டு மற்றும் கருப்பை பிரச்சனைகளுக்கு உட்கொள்ளும் மாத்திரைகளும் இதற்குக் காரணமாகிறது.

  ஆனாலும் முடி உதிர்வைத் தடுக்க எளிய வழிகள் உள்ளன.

  ரசாயனக் கலப்பில்லாத உணவுகள் உட்கொள்வது உடலில் சத்துகள் பற்றாக்குறையைச் சீராக்குவதுடன் ஹார்மோன் சுரப்பையும் சீராக்கும். உணவில் இந்துப்பு பயன்படுத்துவதால் ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தைராய்டு குறைபாடுகள் சீராகும். துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளை வாரத்துக்கு நான்கு முறை உட்கொண்டால் கருப்பை ஆரோக்கியமடைவதுடன், முடி உதிர்வும் குறையும்.

  யோகா, தியானம் போன்றவை மனஅழுத்தத்தைக் குறைத்து, உடல் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும். தினந்தோறும் பச்சைக் காய்கறிகள், பழங்களைக் கட்டாயம் எடுத்துக் கொள்ளவேண்டும். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை தலைக்குத் தேய்ப்பது, வாரம் ஒருமுறை செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயை உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பது அவசியம்.

  காலையில் இளஞ்சூடான நீரில் குளிப்பதால் உடல் உஷ்ணம் கட்டுப்படுவதுடன் மயிர்க்கால்களுக்குத் தேவையான சத்துகளும் எளிதாகக் கிடைக்கும். இதனால் முடி உதிர்வையும் பெருமளவில் கட்டுப்படுத்தலாம். புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான அமினோ அமிலம் உற்பத்தியாகி முடி உதிர்தல் குறையும்.

  தலைமுடிக்கு ஷாம்பு, கண்டிஷனர் போடுவதற்குப் பதிலாக கற்றாழை, செம்பருத்தி, நெல்லிக்காய் போன்றவற்றைக் கொண்டு தயாரித்த சீயக்காயைப் பயன்படுத்துவது நல்லது. தலைக்கு ரசாயனங்கள் நிறைந்த வர்ணங்கள் பூசுவதைத் தவிர்க்கவேண்டும். `ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்' எனப்படும் முடி அமைப்பை மாற்றும் பல நவீன சிகிச்சைகள் முடி உதிர்வுக்கு காரணமாக அமைகிறது என்பதால், அவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  எண்ணெய்ப் பதார்த்தங்களை உண்ண விரும்புபவர்கள் செக்கில் ஆட்டிய எண்ணெயில் தயாரித்த உணவுகளை உண்பது சிறந்தது. கடைகளில் கிடைக்கும்  உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம். இத்தகைய பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்தால் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதுடன் உடல் அழகை அதிகரிக்கலாம்.
  அழகான, நீண்ட கூந்தலை விரும்பும் பெண்கள் சில எளியவழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் நல்ல பலனை காணலாம்.
  1. சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும்.

  2. ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்துவிடவும். முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

  3. கூந்தல் வளர்ச்சிக்கு உடல் போஷாக்கு மிகமிக முக்கியம். விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட சத்தான ஆகாரங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.

  4. கறிவேப்பிலை உணவில் தாராளமாய் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைமுடி செழிப்பாய் வளரும்.

  5. சப்பாத்திக் கள்ளிப் பூவை சேகரித்து விழுதாய் அரைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி உபயோகித்து வர முடி அடர்த்தியாய் வளரும். முடி கொட்டுதல் நீங்கும்.

  6. செம்பருத்திப்பூவை கசக்கிச் சாறு எடுத்து முடி உதிர்ந்து சொட்டையாகியுள்ள இடத்தில் தேய்த்துவர முடி வளர ஆரம்பிக்கும்.

  7. ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் மூன்று ஸ்பூன் தேயிலையை கலந்து சூடாக்கி, தைலப் பதத்தில் இறக்கிவிடவும்,. இதனை தினசரி பயன்படுத்திட முடி கருமையாய் செழித்து வளரும்.

  8. வேப்பம்பூவை அடுப்பில் சிறிது வதக்கி, கசக்கி இளஞ்சூட்டுடன் உச்சந்தலையில் தேய்த்துவர முடி தாராளமாய் வளரும்.

  9. மருதாணி இலையை தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துகொள்ளுங்கள். இதனை தினசரி தலைக்குத் தடவிவர செம்பட்டை மாறி முடி கருமையாகும்.

  10. வெந்தயத்தை தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்து தலையில் தேய்த்து, அரைமணிநேரம் வைத்திருந்து குளித்துவிடுங்கள். அடிக்கடி பயன்படுத்திவர, முடி வளரும், முடி கொட்டுதல் நீங்கும்.

  11. பாதாம் எண்ணெய்யினால் தினசரி தலையில் வேர்க்காலில் (scalp) குறைந்தது 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவர முடி வளர்ச்சி அதிகமாகும்.

  14. பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் பால், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட ஏதுவாகும்.

  15. தலைமுடியை நெல்லிக்காய் பொடி அல்லது சிகைக்காய் கொண்டு மசாஜ் செய்து அலசிவாருங்கள். முடி வளர்ச்சி உண்டாகும்.

  16. அடிக்கடி ஆயில் மசாஜ், முடியின் வேர்க்காலுக்கு (scalp) செய்து வாருங்கள்.

  17. உடம்பில் மலச்சிக்கல் உண்டானால், உடல் உஷ்ணம் அதிகமாகி, உடம்பில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே மலசிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

  18. தினசரி செய்துவரும் எளிய உடற்பயிற்சியும் தலைமுடி வளர துணை செய்யும்.

  19. கீரைசூப், காய்கறி சூப், கேரட் சாறு இவைகளை அடிக்கடி சாப்பிடுவர தலைமுடி நன்கு வளரும்.

  20. தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் மசாஜ் செய்துவர, முடி நன்கு வளரும்.
  பெண்கள் அதிகளவு சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. கோடையில் தலைமுடி உதிர்வதற்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் காண்போம்.
  தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை முதுமை, காயங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சில சமயங்களில் காலநிலை மாறுதல்களாலும் தலைமுடி உதிர்வது என்பது அதிகமாக இருக்கும். இதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. இப்போது கோடையில் தலைமுடி உதிர்வதற்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் காண்போம்.

  கோடையில் முடி எப்படி அதிகம் உதிருமோ, அதேபோல முடியின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். மற்ற காலங்களை விட கோடையில் உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதற்கு வெப்பமான காலநிலையில் உடலின் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் உடலில் இரத்த ஓட்டமும் அதிகமாக இருக்கும். ஆகவே இக்காலத்தில் முடி வளர்வதற்கு தேவையான பராமரிப்புகளை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

  கோடையில் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் வியர்வை. கோடையில் அதிகம் வியர்ப்பதால் முடியின் கால்கள் வலிமையின்றி இருக்கும். இந்த சமயத்தில் சீப்பு கொண்டு அளவுக்கு அதிகமாக சீவினால், தலைமுடியை வேரோடு கையில் பெறவேண்டியது தான். கோடையில் தினமும் தலைக்கு குளிப்பதனால் தலையில் வியர்வையினால் சேர்ந்த அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும்.

  ஆனால் தினமும் தலைக்கு ஷாம்பு போடாதீர்கள் இல்லாவிட்டால் தலைமுடி அதிகம் உதிர்வதோடு, ஸ்கால்ப்பில் உள்ள இயற்கை எண்ணெய்களும் நீங்கிவிடும். முக்கியமாக கோடையில் சூரியக்கதிர்கள் நேரடியாக தலைமுடியைத் தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு வெளியே செல்லும் போது தலைக்கு ஏதேனும் துணியை சுற்றிக்கொண்டோ அல்லது தொப்பி அணிந்து கொண்டோ, குடைபிடித்துக்கொண்டோ செல்லலாம்.