என் மலர்
நீங்கள் தேடியது "முடி உதிர்வு"
- பூஞ்சை நோய் எல்லா வயதினரையும் பாதிக்கும் என்றாலும், சிறு குழந்தைகளை அதிகமாய் பாதிக்கும்.
- பொடுகு என்பது தலையிலிருந்து சிறு துகள்கள் உதிர்ந்துவிழும் ஒரு பொதுவான நிலையாகும்.
தலையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து மொத்தமாக தலைமுடி உதிர்ந்து, அந்தப்பகுதி மட்டும் பளபளவென்று காணப்படும். இது 'அலோபேசியா ஏறேட்டா' என்ற நோய் காரணமாக ஏற்படும். தலையில் உள்ள முடிகள் மொத்தமாக உதிர்ந்து வழுக்கையுடன் காணப்பட்டால் அது 'அலோபேசியா டோட்டாலிஸ்' என்று அழைக்கப்படும்.
இதற்கான சித்த மருத்துவம்: சிவனார் வேம்புக் குழித்தைலம், சிரட்டைத் தைலம் மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தேங்காய் எண்ணெய்யில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துவர முடி நன்றாக வளரும்.
'டீனியா கப்பைடிஸ்' என்னும் பூஞ்சையால் சிலருக்கு தலைமுடி உதிரும். முடி உதிரும் பகுதிகள் வெள்ளை அல்லது சிவப்பு வட்ட வடிவத்துடன் காணப்படும்.
இப்பூஞ்சை நோய் எல்லா வயதினரையும் பாதிக்கும் என்றாலும், சிறு குழந்தைகளை அதிகமாய் பாதிக்கும். இது பொதுவாக ஒருவர் பயன்படுத்திய சீப்பை இன்னொருவர் பயன்படுத்துவது மற்றும் பொது இடங்களில் கையை வைத்து விட்டு தலையை சொறிவது போன்ற காரணங்களால் ஒருவருக்கு ஏற்படுகின்றது.
இதற்கான சித்த மருத்துவம்: சீமை அகத்தி இலைச் சாற்றை தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அந்த இடத்தில் பூசிவர, ஊறல், செதில் உதிர்தல் நின்று மீண்டும் அவ்விடத்தில் விரைவில் முடி வளர்ந்து வரும்.
பொடுகு என்பது தலையிலிருந்து சிறு துகள்கள் உதிர்ந்துவிழும் ஒரு பொதுவான நிலையாகும். தலையில் தேய்க்கும் எண்ணெய் பசையை உண்டு வாழும் ஈஸ்ட் வகைகளில் ஒன்று 'மாலசீயா'. இது பொடுகு செதில்களுக்கு உள்ளே வளர்ச்சி அடைந்து ஊறல், அதனுடன் பொடித்துகள்கள் முகம், கழுத்து பகுதிகளில் உதிர்ந்து காணப்படும்.
தலையில் ஏற்படும் எக்ஸீமா என்னும் கரப்பானில் தோல் அழற்சி, அரிப்பு, சிறுசெதில் மற்றும் வீக்கத்துடன் இருக்கும். சோரியாசிஸ் எனப்படும் காளாஞ்சகப்படை என்பது ஒரு பொதுவான, நீண்டகால நாள்பட்ட நோயாகும். இதில் தலையில் செதில்கள், ஊறல், முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் காணப்படும். இவற்றுக்கான சித்த மருத்துவ சிகிச்சைகள்:
கரிசாலைச் சூரணம் 1 கிராம், அயப்பிருங்க ராஜ கற்பம் 200 மி.கி., சங்கு பற்பம் 200 மி.கி. இவற்றை இருவேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.
அரிப்பு இருந்தால், கந்தக பற்பம் 200மி.கி., சிவனார் பற்பம் 200மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி. இவற்றை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை சாப்பிட வேண்டும். தலையில் தேய்ப்பதற்கு கரிசலாங்கண்ணி தைலம் அல்லது செம்பருத்தி தைலம் பயன்படுத்தலாம்.
- உங்கள் மரபணுவைப் பொறுத்து தான் முடி வளர்ச்சியும் இருக்கும்.
- உங்கள் ஷாம்பூ தான் உங்கள் முடியின் மென்மையையும், முடி உதிர்வதையும் தடுக்கும் திறன் கொண்டது.
ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி.. இவர்களின் பொதுவான பிரச்சனை முடி கொட்டுதல் தான். சிலர் முடி அதிகமாக கொட்டுகிறது அதனால் மொட்டை அடிக்கப்போகிறேன் என்பார்கள். ஏன்? என்று கேட்டால் மொட்டை அடித்தால் முடி அடர்த்தியாக வளரும் என்றும், அதன்பிறகு முடி கொட்டுதல் இருக்காது என்றும் கூறுவார்கள்.
உண்மையில் மொட்டை அடித்ததற்கு பிறகு முடி அடர்த்தியாக வளருமா? முடி கொட்டுவது இருக்காதா? இது உண்மையான கூற்று தானா எனபதைப் பற்றி தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
மொட்டை அடிப்பதால் கொஞ்ச நாளைக்கு முடி இல்லாமல் இருப்போமே தவிர முடி வளர்ச்சியில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. ஏனெனில் இந்த செயலின் போது முடியிலோ அல்லது மயிர்க்கால்களிலோ எந்த மாற்றமும் இருக்காது. குறுகிய மயிர்க்கால்கள் அடர்த்தியாக தெரிவது போன்றதொரு பிம்பம் மட்டுமே காணப்படும். மொத்தத்தில் மொட்டை அடித்தால் முடி நன்றாக , வேகமாக வளர்வதாக உணர்ந்தால் அது ஒரு மாயை தான். மொட்டை அடிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் கூட, மொட்டை அடிப்பதற்கும் முடியின் வளர்ச்சி, வேகம் மற்றும் அடர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தான் கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் மரபணுவைப் பொறுத்து தான் முடி வளர்ச்சியும் இருக்கும்.
முடி கொட்டாமல் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் வைட்டமின் ஏ,சி,டி,ஈ மற்றும் இரும்புச்சத்து, துத்தநாகம் முதலானவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
முக்கியமாக தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும். அதிலும் வாரத்தில் ஒருமுறையாவது எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் சல்பேட் இல்லாததாக இருக்க வேண்டும். உங்கள் ஷாம்பூ தான் உங்கள் முடியின் மென்மையையும், முடி உதிர்வதையும் தடுக்கும் திறன் கொண்டது. அதனால் ஷாம்பூ தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.
முடியை பராமரிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாலும், முடி அதிகமாக கொட்டுகிறது, அடர்த்தியாக இல்லை மொட்டை அடித்தால் மீண்டும் வளரும் போது நன்றாக வளரும், அடர்த்தியாக இருக்கும் என தவறாக நினைத்துக்கொண்டு மொட்டை அடித்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகி சரியான காரணங்களை தெரிந்துகொண்டு முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
- மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது.
- ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக சருமமும், கூந்தலும் பாதிக்கப்படும்.
பருவமழை காலங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் பாராமரிப்பில் கூடுதல் சுவனம் செலுத்த வேண்டும். கோடை காலத்தில் கடுமையான தணித்து குளிர்ச்சியை தந்தாலும் உடல் நலத்தை பொறுத்தவரையில் மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக சருமமும், கூந்தலும் அதிகமாக பாதிக்கப்படும். தலைமுடி எளிதில் வலுவிழக்கும். தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். இவற்றை தவிர்ப்பதற்கான டிப்ஸ் இதோ...
மழைக்காலமாக இருந்தாலும், சில சமயங்களில் தலை பகுதியில் அதிகமாக வியர்வை வெளியேறும். இந்த ஈரத்தால் தலையில் அரிப்பு. பொடுகு, பிசுபிசுப்பு என பல பிரச்சினைகள் ஏற்படும். இதை தவிர்க்க தினமும் தலைமுடியை சுத்தமான வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இதற்கு ரசாயனம் கலக்காத மென்மையான ஷாம்புவை மட்டும் பயன் படுத்தலாம்.
தலைக்கு குளிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தலைமுடியை பிரி-கண்டிஷனிங் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது எசன்ஷியல் எண்ணெய்யை உச்சந்தலை முதல் முடியின் வேர்க்கால்கள் வரை முடியின் நுனி என அனைத்து பகுதியிலும் விரல் நுனியால் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
மழைக்காலத்தில் தலைமுடியில் இருக்கும் ஈரம் எளிதில் உலராது. இதனால் சளி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே தலைமுடி தானாக உலரும் வரை காத்திருக்காமல், தலைக்கு குளித்த பின்பு ஹேர் டிரையரை பயன்படுத்தி உலர்த்தலாம். இதில் குறைந்த அளவு வெப்பநிலையை மட்டும் பயன்படுத்தி முடியை உலர்த்துவது நல்லது.
இவ்வாறு செய்யும்போது பொடுகு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகளையும் தடுக்க முடியும். மழைக்காலத்தில், தலைமுடியை இறுக்கி கட்டாமல், காற்றோட்டமான வகையில் தளர்வாக பின்னிக்கொள்வது நல்லது. இது உச்சந்தலையில் வியர்வையால் ஏற்படும் கிருமித்தொற்றை தடுக்க உதவும்.
தலைமுடியை சீரான இடைவெளியில் டிரிம் செய்ய வேண்டும். இது முடியின் நுனியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதுடன், தலைமுடிக்கு சீரான வடிவத்தையும் தரும். இதனால் கூந்தலை பராமரிப்பதும் எளிதாகும்.
ஈரமான கூந்தலுடன் வெளியே செல்லும்போது, தூசி, அழுக்கு ஆகியவை எளிதாக கூந்தலில் படியக்கூடும். இது தலைமுடியின் தன்மையை பாதிப்பதோடு முடி உதிர்வு பிரச்சினையையும் உண்டாக்கும். எனவே கூந்தலை நன்றாக உலர்த்திய பின்பு வெளியில் செல்வது நல்லது.
தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு நாம் பயன்படுத்தும் ஷாம்புவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரசாயனம் கலக்காத கடினத்தன்மை இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. மழையில் நனைந்தால் வீட்டிற்கு வந்தவுடன் மிருதுவான ஷாம்பு கொண்டு உடனடியாக தலைமுடியை கழுவ வேண்டும்.
முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கற்றாழைக்கு முக்கிய பங்கு உண்டு. வாரத்திற்கு ஒருமுறை, கற்றாழை ஜெல்லை தலையில் மாஸ்க் போல பூசவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீர் கொண்டு தலைமுடியை கழுவவும். இதனால் பொடுகுத்தொல்லை, முடி உதிர்வும் குறையும், முடியின் வேர்க்கால்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
- ஆண்களுக்கு கூடுதலாக கனமான தொப்பியுடன் அலைவது, ஹெல்மெட் போடுவது போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
- மயிர்க்கால்களை சுறுசுறுப்பாக வைக்க உதவும். ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்யலாம்.
முடி உதிர்வு என்பது பெண்களை போன்றே ஆண்களுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாக மாறிவருகிறது.
உலகளவில் மூன்றில் ஒரு சதவீதத்தினர் முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இயல்பாக முடி உதிர்வு என்பதை தாண்டி அதிகப்படியான முடி உதிர்வை ஆண்களும் சந்தித்துவருகிறார்கள். முடி உதிர்தலுக்கு பொதுவாக உணவு, தாது பற்றாக்குறை, மருந்துகள், மன அழுத்தம், மாசுபாடு மற்றும் மரபியல் ரீதியிலான காரணங்கள் சொல்லப்படுகிறது.
ஆண்களுக்கு கூடுதலாக கனமான தொப்பியுடன் அலைவது, ஹெல்மெட் போடுவது போன்றவையும் காரணமாக இருக்கலாம். ஆண்கள் முடி உதிர்தலை தடுக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
தலைமுடியை லேசாக ஷாம்பு போட்டு அலசி எடுங்கள். குறைவான முடி என்பதால் எளிதாக தலை குளியல் மேற்கொள்ளலாம். தினசரி தலை குளியல் செய்வதால் பொடுகு உண்டாகும் அபாயம் குறையும். சுத்தமான கூந்தல் என்பதால் முடி உதிர்வு அதிகமாக இருக்காது.

வைட்டமின்கள் உடல் ஆரோக்கியம் போன்றே கூந்தலுக்கும் நன்மை செய்யகூடியவை. வைட்டமின் இ உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. முடியின் வேர்க்கால்களை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையின் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி சத்து முடி ஆரோக்கியத்தையும் நிறத்தையும் பராமரிக்க உதவுகிறது. அதனால் உணவில் புரதத்தை மேம்படுத்தும் உணவுகள் எடுத்துகொள்வது நல்லது. இறைச்சிகள், மீன், சோயா போன்ற புரதம் உள்ள உணவுகளை எடுத்துகொள்வதன் மூலம் முடி உதிர்தலை கட்டுப்படுத்த முடியும்.
அத்தியாவசிய எண்ணெய்கள் கொண்டு உச்சந்தலையை மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தமுடியும். சிறிதளவு எண்ணெய் எடுத்து மயிர்க்கால்களை மசாஜ் செய்தாலே போதுமானது. இது மயிர்க்கால்களை சுறுசுறுப்பாக வைக்க உதவும். ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்யலாம்.
தலைகுளியலுக்கு பிறகு ஈரத்தலையோடு துவட்ட வேண்டாம். முடி ஈரமாக இருக்கும் போது பலவீனமான நிலையில் இருக்கும். அப்போது வேகமாக துவட்டினால் முடி உதிர்வு வேகமாக இருக்கும். அதே போன்று ஈரத்தலையோடு எப்போதும் சீவ வேண்டாம். அவசரம் எனில் பற்கள் பெரிதாக இருக்கும் சீப்பை பயன்படுத்தலாம். விரல்களால் தலையை கோதியபடி தலைமுடியை ஒழுங்குப்படுத்தலாம். அதே போன்று தலை முடி காய வேண்டும் என்று ஹேர் டிரையர் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இது முடியை பலவீனமாக்கும்.
முடி உதிர்வு இருக்கும் போது பெண்களை போன்று ஆண்களும் முடி உதிர்வுக்கான பராமரிப்பு செய்யலாம். பூண்டு சாறு, வெங்காய சாறு அல்லது இஞ்சி சாறு என ஏதாவது ஒன்றை எடுத்து தலை முழுக்க உச்சந்தலை முதல் நன்றாக தேய்த்து ஒரு மணி நேரம் வரை ஊறவிட வேண்டும். இரவு நேரங்களிலும் இதை தடவி இரவு முழுக்க ஊறவைத்து மறுநாள் காலை தலையை தேய்த்து குளித்தால் முடி உதிர்வு நிற்கும்.

முடி உதிர்வு அதிகமாக இருக்கும் போது என்ன செய்வது என்று கேட்கும் ஆண்கள் இந்த பராமரிப்பை மேற்கொள்ளலாம். ஆண்கள் க்ரீன் டீ கூந்தலில் தடவும் போது அவை முடி உதிர்வு பிரச்சனையை நீக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. வெந்நீரில் இரண்டு க்ரீன் டீ பேக் சேர்த்து காய்ச்சி அவை குளிர்ந்ததும் தலைமுடியில் தடவவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்துவந்தால் முடி உதிர்வு கட்டுப்படும்.
முடி உதிர்வு இருக்கும் போது ஆல்கஹால் பழக்கத்தை கொண்டிருந்தால் நீங்கள் அதை தவிர்ப்பதே நல்லது. புகைப்பழக்கமும், மதுப்பழக்கமும் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை குறைக்க செய்யும். இது முடி வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கி முடி உதிர்வை அதிகரிக்கிறது. முடி வளர்ச்சியை விரும்பினால் இந்த பழக்கங்களை தவிர்ப்பதே நல்லது.
மன அழுத்தம் அதிகமாகும் போது முடி உதிர்வும் அதிகரிக்க செய்யும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளது. தினமும் குறிப்பிட்ட நேரம் வரை தியானம் செய்வதன் முலம் மன அழுத்தம் குறைந்து ஹார்மோன் சமநிலை அடைகிறது.
- தலைமுடியை மென்மையாக சீவ வேண்டும்.
- உச்சி வெயிலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.
புழுவெட்டு (அலோபேசியா) என்பது 'தன்னுடல் எதிர்ப்பு வகை நோய்' ஆகும். இது தலை அல்லது உடலின் எந்த பாகத்தையும் பாதிக்கலாம். குறிப்பாக ஆண்களுக்கு மீசை, தாடி பகுதிகளிலும் ஏற்படும்.

புழுவெட்டு என்பது முடிகள் முழுவதும் உதிர்ந்து வட்ட வடிவமான வழுக்கைத் திட்டுகள் தலை, தாடி, மீசை, புருவங்களில் ஏற்படுவது ஆகும். அந்த இடம் வழவழப்பாக இருக்கும். முடிகள் உதிர்வதற்கு முன் தோலில் அரிப்பு அல்லது வலி ஏற்பட்டு திடீரென முடி உதிர்தலை ஏற்படுத்தி வழுக்கையை உருவாக்குகிறது.
ஆனால் இது தற்காலிகமானது ஆகும். பூஞ்சைகளால் ஏற்படும் வழுக்கை திட்டுகளில், கடுமையான அரிப்பு, முடி உதிர்தல், உடைந்த முடி, வெண்நிற சிறு துகள்கள் உதிரல், அந்த இடம் சிவத்தல், வீக்கம் மற்றும் சில நேரங்களில் கசிவுடன் காணப்படும்.

தலைமுடி பாதுகாப்பு வழிமுறைகள்:
பரந்த பல் கொண்ட சீப்பு வைத்து தலைமுடியை மென்மையாக சீவ வேண்டும். தலைமுடி ஈரமாக இருக்கும் போது, துவட்டுவதற்கு மெல்லிய துண்டுகளை பயன்படுத்த வேண்டும். தலைமுடியைப் பாதுகாக்க உச்சி வெயிலில் நடப்பதை தவிர்க்க வேண்டும். புகைப்பிடிக்க கூடாது.

வயதாகும் போது தலை முடியின் வேர்கள் பலவீனம் அடைவது, நீரிழிவு மற்றும் லூபஸ் போன்ற சில உடல் பாதிப்புகள், மன அழுத்தம், குடும்ப பாரம்பரியத்தில் தாய்-தந்தை வகையில் வழுக்கை இருத்தல் போன்றவை முடி உதிர்வதற்கு காரணமாகிறது.






