search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Method"

    • தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • நோய்கள் குறித்து, வேளாண் துறை, வேளாண் விஞ்ஞானிகள் குழு கள ஆய்வு செய்து, இருக்கும் மரங்களை காப்பாற்ற வேண்டும்.

     மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தேங்காய், கொப்பரை விலை கடும் சரிவு மற்றும் விற்பனை இல்லாமல் தேக்கம் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தென்னையில் தற்போது நோய்த்தாக்குதல் அதிகரித்துள்ளது விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.சின்ன பொம்மன் சாளை பகுதியில், மனோன்மணிக்கு சொந்தமான தென்னந்தோப்பில், நூற்றுக்கணக்கான மரங்களின் குருத்து அழுகி, திடீரென கீழே சாய்ந்தும், ஒரு சில நாட்களில் அம்மரங்கள் காய்ந்து கீழே விழுந்தும் வருகிறது.அதே போல் விஜயகுமாருக்கு சொந்தமான தோட்டத்திலும், இதே போல் தென்னை மரங்கள் காய்ந்து வருகிறது.

    காரணமே தெரியாமல் தஞ்சாவூர் வாடல் நோயாக இருக்கலாம் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூண் வண்டு என எந்த விதமான நோய் தாக்குதல் என தெரியாமல், பாதிக்கப்பட்ட மரங்களை காய்களுடன் வெட்டி வீழ்த்தி தீ வைத்தும் வருகின்றனர்.இவ்வாறு சின்ன பொம்மன் சாளை, புங்கமுத்தூர், வாளவாடி, பொன்னாலம்மன் சோலை என தென்னை மரங்கள் அதிகம் உள்ள பெரும்பாலான கிராமங்களில், பரவலாக தென்னை மரங்களில் நோய்த்தாக்குதல் தீவிரமாக பரவி வருகிறது.

    எனவே தென்னை மரங்களை தாக்கும் நோய்கள் குறித்து, வேளாண் துறை, வேளாண் விஞ்ஞானிகள் குழு கள ஆய்வு செய்து, இருக்கும் மரங்களை காப்பாற்றவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை பெற்றுத்தரவும் வேண்டும் என்பதே விவசாயிகள் கோரிக்கையாகும்.

    இது குறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    தென்னை மரங்கள் பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அதிக அளவு காண்டாமிருக வண்டு தாக்குதல் காணப்பட்டதும் குருத்துக்களில் அவை உணவாக கொண்டு அவற்றை நாசம் செய்துள்ளன.

    தொடர்ந்து பெய்த மழையின் போது குருத்துக்களில் மழை நீர் தேங்கி குருத்து அழுகல் நோயாகவும் மாறியுள்ளது. பசும் பூஞ்சாணம் தாக்கி கடும் துர்நாற்றம் அடிக்கும். இதற்கு பசுஞ்சாணம் உள்ளிட்டவற்றை மக்க வைக்காமல் நேரடியாக பயன்படுத்துவதே காரணமாகும்.

    பிடித்த உணவாகவும், புழுக்கள் அதிகளவு உற்பத்தியாகவும் மக்கவைக்காத சாணங்கள் காரணமாக அமைகிறது. இவற்றில் காண்டாமிருக வண்டுகள் அதிகளவு உற்பத்தியாகி தென்னை மரங்களை தாக்கி வருகிறது.இதற்கு எருக்குழிகளில் மெட்டாரைசியம் தெளித்தால் புழுக்களை கட்டுப்படுத்த முடியும். வேப்பம்புண்ணாக்கு, மணலுடன் கலந்து மூன்று அடுக்காக மரத்தை சுற்றிலும் அணைக்க வேண்டும்.

    குருத்து அழுகல் நோய்க்கு காப்பர் ஆக்சி குளோரைடு பயன்படுத்தலாம். மெட்டாரைசியம் தேவையான அளவு வேளாண் துறையில் இருப்பு உள்ளது.

    நோய் பாதிப்புகள் குறித்து வேளாண் துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தால் உடனடியாக ஆய்வு செய்து மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது. எது மாதிரியான பாதிப்பு என தெரியாமல் விவசாயிகள் தேவையற்ற மருந்துகளை பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 349 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
    • மாணவர்கள், ஆசிரியர்களின் அறிவியல் சார்ந்த செய்முறைகளை பார்வையிட்டனர்.

    திருவாரூர்:

    தமிழக முதலமைச்சரால் திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான "வானவில் மன்றம்" தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் கணித கருத்துக்கள் குறித்து சிந்திக்கும் திறனை ஊக்குவி ப்பதற்கான "வானவில் மன்றம்" தொடக்க விழா மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. பூண்டி.கே.கலைவாணன் முன்னி லை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்க ளின் அறிவியல் மனபான்மை யினை மேம்படுத்துவதற்காக முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியே இவ்வானவில் மன்றம் திட்டம். அரசுப்பள்ளி மாண வர்களிடையே அறிவியல் மற்றும் கணித கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தினை வளர்த்தெடுப்பதற்கான சூழலை உருவாக்குவதே வானவில் மன்றத்தின் நோக்கமாகும்.

    இத்திட்டத்திற்காக அறிவியல் மற்றும் கணிதத்தில் திறன்மிக்க கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இக்கருத்தாளர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பாடத்தில் கடினப்பகுதிகளை எளிய செய்முறைகள் மூலம் பள்ளி ஆசிரியருடன் இணைந்து பல்வேறு செய்முறைகளை செய்துகாட்டி மாணவ ர்களின் கற்றலை மேம்படுத்தி கற்கும் அனுபவத்தை மாணவர்களுக்கு மேம்படு த்துவார்கள்.

    திருவாரூர் மாவட்டத்தில் 349 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையு ள்ள 26 ஆயிரத்து 377 மாணவ செல்வங்கள் பயன்பெறுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்களின் அறிவியல் சார்ந்த செய்முறைகளை பார்வையிட்டனர். இத்திட்ட தொடக்க நிகழ்ச்சியின் ஒன்றாக மாணவியர்களுடன் கலெக்டர், எம்.எல்.ஏ. சேர்ந்து பலூன்களை பறக்க விட்டனர்.

    இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளி மாயகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் பாலசுப்ரமணியன், பள்ளி தலைமையாசிரியர் பூந்தமிழ் பாவை, உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    • ஈக்களின் குஞ்சு, முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளின் அடியில் இருந்து சாறை உறிஞ்சி, தேன் போன்ற திரவ கழிவை வெளியேற்றும். அத்திரவ கழிவால், கரும்பூசணம் படர்ந்து, ஓலைகள் கருமை நிறமாகும்
    • அதிக பூச்சி கொல்லிகள் உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால் ரசாயன பூச்சி கொல்லிகளை தவிர்த்து இயற்கை எதிர் பூச்சிகளை வளர்த்து கட்டுப்படுத்துவது சிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் 38,800 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளனர். தென்னையில் இருந்து தேங்காய், இளநீர் கிடைப்பதுடன், ஓலைகள் கூரை வேய்வதற்கும், வேலி அமைக்கவும் பயன்படுகிறது. பயனுள்ள ஓலைகளை ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் கோடை காலங்களில் தாக்குவதுடன், தென்னை மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.

    ஈக்களின் குஞ்சு, முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளின் அடியில் இருந்து சாறை உறிஞ்சி, தேன் போன்ற திரவ கழிவை வெளியேற்றும். அத்திரவ கழிவால், கரும்பூசணம் படர்ந்து, ஓலைகள் கருமை நிறமாகும்.

    மஞ்சள் நிறம், வளர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையு டையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் இரு புறமும் ஆமணக்கு எண்ணெய் தடவி, ஒட்டும் பொறிகளை தயார் செய்து ஏக்கருக்கு 8 என்ற எண்ணிக்கையில் 5, – 6 அடி உயரத்தில் ஆங்காங்கு கட்டி வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.

    மஞ்சள் விளக்கு பொறி களை ஏக்கருக்கு 2 வீதம் தென்னந்தோப்புகளில் அமைத்து மாலை 6 மணி முதல் 11 மணி வரை ஒளிர செய்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.

    தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் விசை தெளிப்பானால் தண்ணீரை மிகுந்த அழுத்தத்துடன் பீச்சி அடித்து வெள்ளை ஈக்கள் கரும்பூசணங்களை அழிக்கலாம்.

    வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளை கட்டுப்ப டுத்தும் திறன் கொண்ட ஒட்டுண்ணி குளவியான என்கார்சியாவின் கூட்டு புழுவை உள்ளடக்கிய தென்னை ஓலைகளை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது 10 மரம் இடைவெளியில் வைத்து கட்டுப்படுத்தலாம்.

    இரை விழுங்கியான கிரைசோபெர்லா என்ற பச்சை கண்ணாடி இறக்கை பூச்சியின் முட்டைகளை ஏக்கருக்கு 300 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைத்து கட்டுப்படுத்தலாம். கிரைசோபெர்லா ஒட்டுண்ணியானது பவானி உயிரியல் கட்டுப்பா ட்டு மையத்தில் இருந்து பெறப்பட்டு வேளாண் விரிவாக்க மையங்களின் மூலம் ஈரோடு மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகள், கிரைசோபிட் இரை விழுங்கிகள் தென்னந்தோப்புகளில் இயற்கையாக பல்கி இனப்பெருக்கம் அடைய ஏதுவாக சாமந்தி பூ, சூரியகாந்தி, தட்டை பயறு போன்ற பயிர்களை தென்னந்தோப்புகளில் பயிர் செய்யலாம்.

    அதிக பூச்சி கொல்லிகள் உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால் ரசாயன பூச்சி கொல்லிகளை தவிர்த்து இயற்கை எதிர் பூச்சிகளை வளர்த்து கட்டுப்படுத்துவது சிறந்தது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×