என் மலர்

  நீங்கள் தேடியது "Disease"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மழையால் உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.
  • வீடுகளுக்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

  உடுமலை :

  உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதனைப்பயன்படுத்தி, விவசாயம் சார்ந்த பணிகள் வேகமெடுத்துள்ளன.

  தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.அதேநேரம் கிராம ஊராட்சிகளில் நோய்த்தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப்பணி மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, ஊராட்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளுக்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். அபேட் மருந்து தெளிப்பது, கொசு மருந்து அடிப்பது, கழிவுநீர் சாக்கடைகளில் கொசு மருந்து தெளிப்பது போன்ற பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்.குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த கிராம ஊராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  காய்ச்சல், வயிற்றுப்போக்கு என நோய் பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டால் பொது மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குமாரபாளையத்தில் புதிதாக பரவி வரும் கால்நடை நோயால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
  • கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

  குமாரபாளையம்:

  குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர், தட்டான்குட்டை, சத்யா நகர், எலந்தகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு வட்ட வடிவமான தடுப்பு ஏற்பட்டு, அது அனைத்து கால்நடைகளுக்கும் பரவி வருகிறது. கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

  சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், கால்நடை உதவி டாக்டர்கள் ரமேஸ்குமார், சதீஷ், செந்தில்குமார் ஆகியோர் நோய் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, இது சாதாரண வைரஸ் நோய், இதற்காக அச்சப்பட வேண்டியதில்லை என்று கூறினர்.

  இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், கால்நடை டாக்டர்கள் அச்சப்படா தீர்கள் என்றாலும், கால்நடைகளின் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து விவசாயிகளும் மருத்துவமனைக்கு தங்கள் கால்நடைகளை அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்வதென்பது சாத்தியமில்லை.

  ஆகவே ஒவ்வொரு கிராமத்தின் முக்கிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு தடுப்பூசி போட்டால், விவசாயிகளுக்கு உதவியாக இருப்பதோடு பல கால்நடைகளை நோய் பாதிப்பு, நோய் பரவலில் இருந்து காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களை அதிகம் எடுத்துக்கொண்டால் அவை கொழுப்பாக மாறிவிடும்.
  • காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுப் பொருட்கள் கொழுப்பை குறைக்க வகைசெய்யும்.

  கார்போஹைட்ரேட், உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. சர்க்கரை, நார்ச்சத்து, ஸ்டார்ச் ஆகியவற்றை குளுக்கோஸாக பிரித்து உடலுக்கு ஆற்றலாக வழங்குகிறது. அதனால் அன்றாடம் சாப்பிடும் உணவில் 50 முதல் 60 சதவீதம் கார்போஹைட்ரேட் இடம் பெற்றிருக்க வேண்டும். 'சிம்பிள்', 'காம்ப்ளக்ஸ்' என இரண்டு வகை கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.

  காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுப் பொருட்கள் கொழுப்பை குறைக்க வகைசெய்யும். மைதா போன்ற சிம்பிள் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். அவற்றை தொடர்ந்து சாப்பிடுவது நீரிழிவு, இதய, நோய், மலச்சிக்கல், கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை உருவாக்கலாம்.

  உணவில் சீரான அளவில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் இடம்பெற்றால், அது கொழுப்பை குறைக்க உதவும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்க சிம்பிள் கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல கார்போஹைட்ரேட்கள் பொதுவாக பக்க கொழுப்பு எனப்படும் உள்ளுறுப்பு கொழுப்பை குறைக்க உதவும். இந்த கொழுப்புதான் உடலுக்கு மிகவும் ஆபத்தானது. பலவிதமான நோய்களையும் உருவாக்கக்கூடியது.

  ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்களை உணவில் 50 முதல் 60 சதவீதம் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் சேர்க்கக்கூடாது. ஏனெனில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களை அதிகம் எடுத்துக்கொண்டால் அவை கொழுப்பாக மாறிவிடும்.

  உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை விரைவாக கரைக்க மன அழுத்தம் இல்லாத மற்றும் ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். ஜிம்முக்கு சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே கொழுப்பையோ, உடல் எடையையோ குறைத்துவிட முடியாது. ஆரோக்கியமான உணவு பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும்.

  அதே நேரத்தில் உடல் தசையை வலுப்படுத்த விரும்புபவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளையும் சாப்பிடலாம். உடற்பயிற்சிக்கு பிறகு ஹார்போஹைட்ரேட் நிறைந்த பழங்களை உட்கொள்ளலாம்.

  பார்லி, பாப்கார்ன், தயிர், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஓட்ஸ், கோதுமை பிரெட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, பூசணி, புரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் போன்ற காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நொறுக்கு தீனிகள், குளிர்பானம், ஜஸ்கிரீம், சாக்லெட் போன்ற சிம்பிள் காம்ப்ளக்ஸ் உண்வுகளை தவிர்த்துவிடுவது நல்லது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மானியத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
  • மல்பெரி இலைகளே தரமான வெண்பட்டுக்கூடு உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது.

  உடுமலை,

  உடுமலை சுற்றுப்பகுதியில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக,மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வகை வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட முன்பு விவசாயிகள் அதிக தயக்கம் காட்டி வந்தனர்.

  இதையடுத்து மத்திய பட்டு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் மற்றும் மாநில அரசின் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மானியத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.எனவேஇத்தொழிலில்ஈடுபடும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்து தமிழகத்தில்வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், உடுமலை பகுதி முன்னிலை பெற்றது.பிற மாநிலங்களில் இருந்து உடுமலைக்கு வந்து மல்பெரி தோட்ட பராமரிப்பு, புழு வளர்ப்பு மனை பராமரிப்பு, அறுவடை தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுச்செல்லும் அளவுக்குஇப்பகுதி இத்தொழிலில் முன்னிலையில் இருந்தது.

  கடந்த சில ஆண்டுகளாக மல்பெரி வளர்ப்பு, இளம்புழு பராமரிப்பு, நோய்த்தாக்குதல் கட்டுப்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் முறையாக கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பெருந்தொற்று பரவல் ஊரடங்கு காலத்தில் பட்டுக்கூடுகளை சந்தைப்படுத்த, சிரமம் நிலவியது.அப்போது விலை வீழ்ச்சி, விற்பனை சந்தை பிரச்னை காரணமாக இத்தொழிலை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

  நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெண்பட்டுக்கூடுகள் விலை கிலோ 700 ரூபாய் அளவுக்கு உயர்ந்த போது உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.கடந்த சில மாதங்களாக உற்பத்தியை சீராக்க விவசாயிகள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். விலையும் நிலையாக கிடைக்கத்துவங்கியது. ஆனால் தற்போது, உடுமலை பகுதியிலுள்ள மல்பெரி தோட்டங்களில் இலைப்பேன் உள்ளிட்ட நோய்த்தாக்குதல் துவங்கி வேகமாக பரவி வருகிறது.

  இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

  மல்பெரி இலைகளே தரமான வெண்பட்டுக்கூடு உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது. பல்வேறு காரணங்களால், மல்பெரி செடிகளில் இலைப்பேன் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. இவ்வகை பேன்கள் மல்பெரி இலைகளில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சிக்கொள்கிறது.எனவே தரமில்லாத மல்பெரி இலைகள் உருவாகிறது. இவ்வகை இலைகளை பட்டுப்புழுக்களுக்கு உணவாக அளித்தால், புழுக்களும் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி தரமற்ற பட்டுக்கூடுகளே உற்பத்தியாகும்.கொழுந்து செடிகளில் இத்தாக்குதல் அதிகளவு காணப்படுகிறது. நோயை கட்டுப்படுத்த முடியாததால் இந்த சீசனில் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து நஷ்டத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.பட்டு வளர்ச்சித்துறை சார்பில் முன்பு குறிப்பிட்ட இடைவெளிகளில் தொழில்நுட்ப விழிப்புணர்வு கூட்டங்கள் கிராமம் வாரியாக நடத்தப்படும். இதனால்அந்தந்த பகுதி விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.மீண்டும் இத்தகைய கூட்டங்களை நடத்திதரமான மல்பெரி இலை, பட்டுக்கூடு உற்பத்திக்கு அரசு உதவ வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிங்கம்புணரி-திண்டுக்கல் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
  சிங்கம்புணரி:

  சிங்கம்புணரி-திண்டுக்கல் சாலையில் கால்நடை மருத்துவமனைக்கு எதிரில் மழைநீர் வடிகால் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்து சாலையின் மறுபுறம் வரை குழாய் அமைத்து மழைநீர் பாலாற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் மழைநீர் வடிகால் தொட்டியில், இந்த பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் செல்லும் வகையில் இணைக்கப்பட்டது.

  இதனால் கழிவுநீருடன் வரும் குப்பைகள் மழைநீர் வடிகால் தொட்டியில் தேங்குவதால், தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல வழியின்றி, சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறினர்.

  இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- இந்த பகுதியில் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் குடியிருப்புகள், ஓட்டல்களில் இருந்து வரும் கழிவுநீரை குழாய் மூலம் சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் தொட்டியில் இணைத்துள்ளனர்.

  இதனால் கழிவுநீர் குழாயில் வரும் குப்பைகள் பிளாஸ்டிக் பைகள், கோழி கடைகளின் கழிவுகள் மழைநீர் வடிகால் தொட்டியில் தேங்கி அடைப்பு ஏற்படுகிறது. அப்போது இந்த தொட்டி நிரம்பி கழிவுநீர் சிங்கம்புணரி-திண்டுக்கல் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

  இதுபோன்று அடிக்கடி நிகழ்வதால், கடும் துர்நாற்றம் வீசிவருவதோடு, இந்த பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பினரும் பெரும் சிரமமடைகின்றனர். மேலும் மழைநீர் வடிகால் செல்லும் பாதையில் கழிவுநீர் செல்வதால், பாலாற்றில் மாசு ஏற்பட்டு வருகிறது.

  இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி, கழிவுநீர் கால்வாய் முறையாக அமைத்தும், மழைநீர் வடிகால் தொட்டியில் கழிவுநீர் செல்லாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தவளக்குப்பம் அருகே நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  பாகூர்:

  தவளக்குப்பம் அருகே தானம்பாளையம் குபேரன் வீதியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 54). லாரி டிரைவர். இவருக்கு மனைவி  மற்றும் 2 மகன்கள் உள்ளனர். 

  இதற்கிடையே தங்கவேலு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் டிரைவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் நோய் கொடுமையால் தினமும் அவதி அடைந்து வந்தார். 

  இந்த நிலையில் நேற்று தங்கவேலுவுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கவேலு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து தங்கவேலுவின் மகன் தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அய்யங்குட்டி பாளையத்தில் நோய் கொடுமையால் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  புதுச்சேரி:

  புதுவை அய்யங்குட்டி பாளையம் அமைதி நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 71). இவரது மனைவி அகிலாம்பாள். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

  ராமலிங்கத்துக்கு நோய் அதிகமானதால் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தார்.

  இந்த நிலையில் நோய் கொடுமை அதிகமானதால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கயிற்றால் ஊஞ்சலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  அப்போது வீட்டுக்கு வந்த அவரது மகன் ரமேஷ் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

  அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
  பெண்களுக்கு ஆண்களை விட அதிகத் தூக்கம் தேவை. ஆனால், உண்மையில் அவசியமான அளவு தூக்கம் கூட அவர்களுக்குச் சாத்தியப்படுவதில்லை என்றும், தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

  வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தூக்கம் என்பது கனவுதான். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை குறித்தும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்க்கலாம்.

  இப்போது மட்டுமல்ல… பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்கள் தூங்கும் நேரம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. கணவன் வரும் வரை சாப்பிடாமலும், தூங்காமலும் இருப்பது போன்ற வழக்கங்களால், பெண்கள் தாங்களாகவே தூங்கும் நேரத்தைக் குறைத்து விட்டார்கள். 70 சதவிகித பெண்கள் தங்களுக்குத் தூக்கமின்மை பிரச்சனை இருப்பதையே அறியாமல் இருப்பது தான் வேதனை.

  இன்றைய கால கட்டத்திலோ, பெண்கள் நினைத்தால் கூட தூங்குவதற்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் சூழலில், காலை முதல் இரவு வரை பெண்களுக்கு வேலை ஓய்வதில்லை. என்னதான் கணவர் வீட்டு வேலை களைப் பகிர்ந்து கொண்டாலும், பெண்களுக்குத் தான் கூடுதல் வேலைகள் இருக்கும் என்பது மறுக்க முடியாத நிஜம்.  வேலைகளை முடித்து விட்டுத் தாமதமாகச் சாப்பிடுவதும், உடனே படுத்து விடுவதும் கூட உடலுக்கு நாம் இழைக்கும் தீங்கு தான். இரவு நேரப் பணி என்பதும் நம் உடலுக்கு ஒவ்வாத விஷயமே. பகலில் உழைப்பதும், இரவில் உறங்குவதுமே இயற்கையின் நியதி. இந்தச் சக்கரத்தை மாற்றி, பகலில் உறங்கி, இரவில் வேலை செய்வதை நம் மனமும் உடலும் ஏற்றுக் கொள்ளாது.

  மேலும், நம்மைத் தூங்க வைக்கும் ’மெலட்டோனின்’ என்கிற ஹார்மோன் இரவில் அதிகம் சுரக்கும். பகலில் நாம் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கான காரணம், இது குறைவாக சுரப்பது தான்! இந்தச் செயல்பாட்டைத் தலை கீழாக மாற்றும் போது, உடல் நலமும் பாதிப்படையும். குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது, அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

  சரியான தூக்கம் கிடைக்காத பெண்கள் காரணமில்லாமல் எரிச்சல் அடைவார்கள். அதன் தொடர்ச்சியாக கோபம், மனச்சோர்வு, நாள் முழுவதும் மந்தமாக உணர்வது, சிறிய பிரச்சனையைக் கூட பெரியதாக நினைத்து கவலைப்படுவது என மனரீதியான சிக்கலுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை காரணமாக ஆரம்ப கால கட்டத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள்.

  இவை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் மாதவிடாய் குழப்பங்கள் உண்டாகும். குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக அமைந்து விடும். கண்டு கொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதய நோய், பக்க வாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும். ஆண்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுகிறார்கள்.

  பெண்களோ, ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ என்று சர்வ சாதாரணமாகக் கடந்து விடுகிறார்கள். ‘நான் ஆறு மாசமா தலைவலியால அவதிப்படுறேன். அதுக்கு டேப்லெட் எடுத்துகிறேன் டாக்டர்’ என்பவர்களை ஆராய்ந்தால், தூக்கம் தான் பெரும் பிரச்சனையாக இருக்கும். தூக்கமின்மை என்பது, நம் உடல் நலனில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்த வழி.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் வைட்டமின்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவை நிறைந்திருக்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம்.
  நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் வைட்டமின்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவை நிறைந்திருக்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம்.

  * வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு ரத்தத்தில் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யும். நோய் பாதிப்பின்போதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகை செய்யும். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ராக்கோலி, கீரை, தக்காளி போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. அத்தகைய உணவுகளை முறையாக சாப்பிட்டு வருவதன் மூலம் ஆரோக்கிய வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.

  * வைட்டமின் பி6, பி 12 ஆகியவைகளும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவை. வைட்டமின் பி 12 மாமிச உணவு வகைகளில் அதிகமாக இருக்கும். அசைவ பிரியர்கள் முட்டை, இறைச்சி, மீன் வகைகளை ருசிக்கலாம். பால் மற்றும் பால் பொருட்களிலும் பி 12 சத்து இருக்கிறது. அவை நோய் தடுப்பு ஊக்க மருந்தாக செயல்படும். தானிய வகைகள், பச்சைக்காய்கறிகளில் பி 6 சத்து உள்ளது.

  * வைட்டமின் ஈ, நோய் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவும். பல்வேறு வகை பாக்டீரியாக்கள், வைரஸ்களை எதிர்த்து போராடி வலிமையான நோய் எதிர்ப்பு அமைப்பை உருவாக்குவதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பு அணுக்கள் உருவாக்கத்திற்கும் உதவுகிறது. பாதாம், வேர்க்கடலை, சோயா எண்ணெய், கோதுமை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றிலும் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது.

  * ஆப்பிள் வினிகரையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக பராமரிக்க உதவும்.

  * உடலில் இருந்து நச்சுத்தன்மையை அகற்றுவதற்கு சீரான இடைவெளியில் தண்ணீர் பருகி வருவது அவசியமானது. அதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

  * பூண்டுவை சமையலில் சேர்த்து வருவதும் நோய் தொற்றை எதிர்த்து போராட உதவும். இஞ்சியையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  * 6 முதல் 8 மணி நேரம் தூங்கும் வழக்கத்தை முறையாக கடைப்பிடித்து வருவதும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிரை பறிக்கும் பிரச்சினை. அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய் ஆகும்.
  உடல் உள்ளே இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும்போது உறைதலும் ரத்தத்தின் இயல்பு. உயிர் காக்கும் இந்த நிலை இயற்கை தந்த பரிசு. சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிரை பறிக்கும் பிரச்சினை. அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய் ஆகும்.

  உடலுக்குள் ரத்த குழாய்க்குள் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம், எப்போதும் உறையக்கூடாது. அது முழு திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான ஓட்டத்துடன் இருக்கும். ஆனால் இதே ரத்தம் உடலைவிட்டு வெளியேறும் போது, வெளிக்காற்று பட்டவுடன் உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். இதன் மூலம் ரத்தம் வீணாகாமல் உயிர் காக்கப்படும். அப்படி இல்லாமல், ரத்தம் உறையாமலே இருக்கும் பிரச்சினை தான் ஹீமோபீலியா. பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரும் இந்த நோய், பரம்பரை சம்பந்தப்பட்டது.

  பொதுவாக அடிபட்டு மூன்று நிமிடங்களில் ரத்தம் உறையத் தொடங்கும். ஆனால், இந்த நோய் உள்ளவர்களுக்கு 30 நிமிடங்கள் ஆனாலும் உறையாது. பல் பிடுங்குதல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் இந்த நோய் உள்ளவர்கள் மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். இதனால் ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். மேலும் இந்த நோய் உள்ளவர்கள் வலி நிவாரண மருந்துகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் வயிற்றுக்குள் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

  இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ள முடியும். பாலினத்தை நிர்ணயிப்பவை குரோமோசோம்கள். இது ஆண்கள் உடலில் xy குரோமோசோம் களாகவும், பெண்கள் உடலில் xx குரோமோசோம்களாகவும் இருக்கும். x குரோமோசோமில் ஏற்படும் குறைபாடே இந்த நோய்க்கு முதன்மை காரணம். ஒரு x கொண்ட ஆண்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்பட்டால் சமாளிக்க முடியாது.  இரண்டு xx கொண்ட பெண்களுக்கு ஒன்றில் குறை ஏற்பட்டால், மற்றொரு x உள்ள மரபு பண்புகளைக் கொண்டு ரத்தம் உறையும் தன்மையை உடல் பெற்றுவிடும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவும் பெண் என்பதால் நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொண்டார். ஆனால் இவரது சந்ததியை அது பாதித்தது.

  அவருக்கு வந்ததோ மிக மோசமான ஹீமோபீலியா பி நோய் வகை. இவரது ஐந்து குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகள் மூலம், அரச வம்சத்து ஆண் குழந்தைகளுக்கு இந்நோய் பரவ விக்டோரியா காரணமாக இருந்தார். இதனால் இது அரச நோய் என்ற பெயரையும் பெற்றது. ரத்தம் உறையாமை நோய் வந்தவர்களின் வாழ்நாள் குறைவு. அடிபடாமல் கவனமாக இருந்தால் வாழ்நாளை நீட்டிக்கலாம்.

  ரத்த உறவில் திருமணம் செய்வதால் தான் இந்த நோய் அதிகம் பரவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். மரபணுவில் உள்ள இந்தச் சிக்கல், ரத்த சொந்தங்களுக்குள் நடைபெறும் திருமணங்கள் மூலமே பரவுகிறது. மரபணு காரணமாவதால் இந்த நோய்க்குத் தீர்வு இல்லை. ஆனால், இதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வீட்டை சுத்தமாக வைத்திருப்பது நோய்களைத் தவிர்க்கும் ஒரு முக்கிய வழி. வீட்டையும், நம்மையும் சுத்தமாக வைத்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
  வீட்டை சுத்தமாக வைத்திருப்பது நோய்களைத் தவிர்க்கும் ஒரு முக்கிய வழி. தினமும் நான் பெருக்கி, துடைத்து, தூசு தட்டி செய்தாலும் சில அழுக்குகள் கறைகள் நீங்கவே இல்லையே என்று அலுத்துக் கொள்பவர்களுக்கான சில குறிப்புகள்.

  * எவர்சில்வர் வாஷ்பேசின் மற்றும் ஷெல்ப் உடையவர்கள் எத்தனை சுத்தம் செய்தாலும் சுத்தமாகத் தெரிவதில்லையே என்று அலுத்துக் கொள்கின்றீர்களா? பேபி எண்ணெய், ஆலிவு எண்ணெய் என்ற மிக மென்மையான எண்ணெய் சிறிது எடுத்து பேப்பர் டவல் கொண்டு நன்கு துடையுங்கள். பொருட்கள் பளிச்சிடும். இப்படியா குறிப்பு சொல்வது எனக் கூற வேண்டாம். சில துளி எண்ணெயே போதும்.

  * காய்கறி வெட்டும் போர்டை எத்தனை சுத்தம் செய்தாலும் ஒருவித வாடையுடன் இருக்கின்றதா, ஒரு எலுமிச்சையினை பாதியாக நறுக்கி அதில் ஒரு பாதியினை போர்டில் நன்கு தேய்த்து ஒரு அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பின் அதனை நீரில் நன்கு கழுவி விட்டால் எந்த துர்நாற்றமும் இன்றி கறைகளும் இன்றி இருக்கும்.

  * காய்கறிகளும், பழங்களும் ‘பிரஷ்சாக’ இருக்க வேண்டும். பப்பிரேப் அல்லது இதற்கான பிரத்யேக உறைகளில் பழங்களையும், இதற்கான உறையில் காய்கறிகளையும் போட்டு வையுங்கள்.

  * வாஷ்பேசினில் ஆப்ப சோடா மாவு போட்டு ஒரு மணி நேரம் கழித்து சுடுநீர் ஊற்றுங்கள். வாஷ்பேசின், பாத்திரம் சுத்தம் செய்யும் இடம் இவை துர்நாற்றம் இன்றி இருக்கும்.

  * வெள்ளை வினிகர் கொண்டு பிரிட்ஜ் உள்ளே நன்கு துடைத்து விடுங்கள் ஒரு கல் ஆப்ப சோடாவினை பிரிட்ஜினுள் வையுங்கள். பிரிட்ஜ் வாடை இன்றி இருக்கும்.  * மிக முக்கியமான, குழந்தைகள் தொடக்கூடாத மருந்துகளை சிகப்பு பேனாவில் ஒரு அட்டை பெட்டியில் போட்டு உயரே வையுங்கள்.

  * ஷர்ட், பேண்டில் சூயிங்கம் ஒட்டிக் கொண்டு விட்டதா? முதலில் துணியினை நன்கு தோய்த்து சுத்தம் செய்து காய வையுங்கள். பின்னர் அத்துணியினை பிரிட்ஜ் மேல் பிரீசரில் சிறிது நேரம் வையுங்கள். பிறகு எடுத்தவுடன் எளிதாய் சூயிங்கம் பிரிந்து வந்து விடும்.

  * ஒரு ஸ்பிரே பாட்டிலில் சிறிது பேக்கிங் சோடா போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்து வீட்டின் கறை படிந்த மூலைகளில் ஸ்ப்ரே செய்து சிறிது நேரம் சென்று பஞ்சு போட்டு துடைக்க அழுக்கு கறைகள் நீங்கி விடும்.

  * உங்கள் ஷூக்களுக்குள் குறிப்பாக ஸ்போர்ட்ஸ் ஷூக்குள் அவ்வப்போது சிறிது பேக்கிங் சோடா தூவி வையுங்கள். சிறிது நேரம் சென்று நன்கு தட்டி விடுங்கள். ஷீ வாடை இன்றி இருக்கும்.

  * ஜன்னல்கள் பிசுபிசுவென அழுக்கால் இருக்கின்றதா? சிறிது வெள்ளை வினிகரை தண்ணீரில் கலந்து ஜன்னலில் நன்கு தடவி பஞ்சு கொண்டு துடைத்து விடுங்கள்.

  * மைக்ரோவேவ் சுத்தம் செய்ய மைக்ரோவேவ் பாத்திரத்தில் நீர் ஊற்றி எலுமிச்சை துண்டுகளை அதில் வெட்டி போட்டு உள்ளே வைத்து 5 நிமிடம் நன்கு சுட வையுங்கள். பிறகு உள்ளே சுத்தமான துணி கொண்டு துடையுங்கள். சுத்தம் செய்யும்போது தகுந்த கையுறைகளை அணிந்து செய்யுங்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print