search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சள் காமாலை நோய் பரவுகிறது?
    X

    மஞ்சள் காமாலை நோய் பரவுகிறது?

    • திருச்சி உறையூர் பகுதியில் மஞ்சள் காமாலை நோய் பரவுவதாக சந்தேகிக்கப்படுகிறது
    • பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் போது குடிநீர் குழாய் உடைந்து அதில் சாக்கடை நீர் கலந்து விட்டதால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் சந்தேகம்

    திருச்சி,

    திருச்சி உறையூர் பகுதி கல்லறை மேட்டுத் தெரு, சோழராஜபுரம், பாண்டமங்கலம் , நாச்சியார் கோவில், பாளையம் பஜார், பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, வாத்துக் காரத் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்சல் மற்றும் வாந்தியால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் பரிசோதனை செய்ததில் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை திருமயம் கடியப்பட்டணத்தில் நாட்டு மருத்துவம் பார்த்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் போது குடிநீர் குழாய் உடைந்து அதில் சாக்கடை நீர் கலந்து விட்டதால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் சந்தேகிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா தெரிவித்திருந்தார்.மேலும் பொதுமக்கள் தரப்பில் கூறும் போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மீண்டும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவேமாநகராட்சி சுகாதாரத் துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×