search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிக சேதம் உண்டாக்கும் தென்னையை  தாக்கும் தஞ்சாவூர் வாடல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
    X

    அதிக சேதம் உண்டாக்கும் தென்னையை தாக்கும் தஞ்சாவூர் வாடல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

    • அதிக சேதம் உண்டாக்கும் தென்னையை தாக்கும் தஞ்சாவூர் வாடல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது
    • புதுக்கோட்டை மாவட்டத்தில் 12,584 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 12,584 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்னை மரங்களை தாக்கும் நோய்களில் தஞ்சாவூர் வாடர் நோய் அதிக சேதம் விளைவிக்கக் கூடியது. இது கடற்கரையை ஒட்டிய மணற்பாங்கான இடங்கள், மானாவாரி தோப்புகள், பராமரிப்பு இல்லாத தோப்புகள் ஆகிய இடங்களிலும் மற்றும் கோடைகாலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படும். எனவே விவசாயிகள் தென்னையினைத் தாக்கும் வாடல் நோயினைக் கண்டறிந்து கட்டுப்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    நோய் தாக்கி இறந்த மரங்களையும், நோய் முற்றிய நிலையில் உள்ள மற்ற மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மரத்தைச் சுற்றி வட்டப் பாத்திகள் அமைத்து தனித்தனியே நீர் பாய்ச்ச வேண்டும். கோடையில் பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு சதவீதம் போர்டோ கலவையை 40 லிட்டர் என்ற அளவில் மரத்தைச் சுற்றி 2 மீட்டர் வட்டப்பாத்தியில் மண் நன்கு நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஊற்ற வேண்டும். ஹெக்சாகோனசோல் இரண்டு மிலி மருந்தை 100 மிலி தண்ணீரில் கலந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை வேர் வழியாக உட்செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×