search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hair loss"

    • பெண்கள் அழகாக இருக்க நிறைய முயற்சிகள் செய்கிறார்கள்.
    • ஹேர் ஸ்ட்ரெய்டனிங் உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது.

    இன்றைய ஃபேஷன் உலகில், பெண்கள் அழகாக இருக்க நிறைய முயற்சிகள் செய்கிறார்கள். இந்த நோக்கத்திற்காக பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. சருமத்தின் அழகு மட்டுமின்றி, அவர்கள் அழகு நிலையத்திற்குச் சென்று, தலைமுடியை அழகாக்குவதற்கு, ஹேர் ஸ்ட்ரெய்டனிங் மற்றும் ஹேர் ஸ்மூத்திங் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

     தற்காலிக ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், பிறகு முடி மீண்டும் சிக்கலாகிவிடும். நீங்கள் அதே நிரந்தர ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், முடி 3-6 மாதங்களுக்கு நேராக இருக்கும். ஆனால்... இந்த சிகிச்சையில் சில வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    * ஹேர் ஸ்ட்ரெய்டனிங் உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது.

    * ஏனெனில் தோல் எரியும் அபாயம் உள்ளது.

    * ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் சரியாக செய்யாவிட்டால், பொடுகு, முடி உதிர்தல், நரை, முடி பிளவு முனைகள் ஏற்படும்.

    * ஹேர் ஸ்மூத்திங் செய்தால் முடி உதிர்தல், உச்சந்தலையில் எரிச்சல், சிலருக்கு ரசாயனங்களால் ஒவ்வாமை ஏற்படலாம்.

    * கர்லிங் (சுருட்டையாக்குதல்) செய்யும்போது கூந்தல் முற்றிலும் உலர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவை வேறுபட்ட சூட்டைப் பயன்படுத்துகின்றன.

    * சுருட்டை முடியில் ஃபிளாட் அயர்னை பயன்படுத்துதல். ஃபிளாட் அயர்னை பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை புளோ -டிரை செய்ய வேண்டும்.

    * கூந்தல் முழுவதையும் ஒரே நேரத்தில் அயர்ன் செய்யக்கூடாது. இதனால், சீரற்ற சூடும் அழுத்தமும் ஏற்படுகிறது. இவை இரண்டுமே சீரற்ற கூந்தல் நேராக்குதலுக்கு வழிவகுத்து விடும்.

    • தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை.
    • தினமும் சராசரியாக அரை மி.மீ. நீளத்துக்கு வளர்கிறது.

    முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் என்னும் புரதத்தால் ஆனது. `பாலிக்கிள்' எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது. நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. முடியின் வளர்ச்சி 3 பருவங்களை கொண்டது. `அனாஜன்' என்பது வளரும் முதல் பருவம்.

    ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மி.மீ. நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சி பருவம் 3 முதல் 7 ஆண்டுகள் வரை நீடிக்கும். இதை தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள். அடுத்தது `காட்டாஜன்' பருவம் ஆகும். இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்த பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் `டீலாஜன்'. இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் ௨ முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும்.

    இந்த சுழற்சி முடிந்து மீண்டும் வளர்ச்சி பருவத்துக்கு திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும். தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும்.

    உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும். வழுக்கை விழும். வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன் ஆகியவை தான் வழுக்கைக்கான முக்கிய காரணங்கள். உடல் வளர்ச்சி நியதியின்படி, வயது ஆக ஆக செல்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வதை தாமதப்படுத்தும். இதன் விளைவால் புதிய செல்களின் உற்பத்தி குறையும்.

    இது தலைமுடிக்கும் பொருந்தும். ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்றுவிடும். முதுமையில் வழுக்கை விழுவது இப்படித்தான்.

    ஆண்களுக்கு மட்டுமே வழுக்கை விழுகிறது. பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை? இந்த சந்தேகம் அதிகம் பேருக்கு இருக்கிறது. டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் பெண்களிடம் அளவாகவே சுரக்கிறது. அதிகமாக சுரக்க வழியில்லை. இதனால் பெண்களுக்கு வழுக்கை விழுவது மிக அரிதாக இருக்கிறது.

     சிறு வயதில் இருந்து தலைமுடியை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முக்கியம். சருமத்தையும் முடியையும் வறண்டு போகாமல் வைத்திருக்க எண்ணெய் நிச்சயம் உதவும்.

    • மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது.
    • ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக சருமமும், கூந்தலும் பாதிக்கப்படும்.

    பருவமழை காலங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் பாராமரிப்பில் கூடுதல் சுவனம் செலுத்த வேண்டும். கோடை காலத்தில் கடுமையான தணித்து குளிர்ச்சியை தந்தாலும் உடல் நலத்தை பொறுத்தவரையில் மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக சருமமும், கூந்தலும் அதிகமாக பாதிக்கப்படும். தலைமுடி எளிதில் வலுவிழக்கும். தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். இவற்றை தவிர்ப்பதற்கான டிப்ஸ் இதோ...

    மழைக்காலமாக இருந்தாலும், சில சமயங்களில் தலை பகுதியில் அதிகமாக வியர்வை வெளியேறும். இந்த ஈரத்தால் தலையில் அரிப்பு. பொடுகு, பிசுபிசுப்பு என பல பிரச்சினைகள் ஏற்படும். இதை தவிர்க்க தினமும் தலைமுடியை சுத்தமான வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இதற்கு ரசாயனம் கலக்காத மென்மையான ஷாம்புவை மட்டும் பயன் படுத்தலாம்.

    தலைக்கு குளிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தலைமுடியை பிரி-கண்டிஷனிங் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது எசன்ஷியல் எண்ணெய்யை உச்சந்தலை முதல் முடியின் வேர்க்கால்கள் வரை முடியின் நுனி என அனைத்து பகுதியிலும் விரல் நுனியால் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

    மழைக்காலத்தில் தலைமுடியில் இருக்கும் ஈரம் எளிதில் உலராது. இதனால் சளி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே தலைமுடி தானாக உலரும் வரை காத்திருக்காமல், தலைக்கு குளித்த பின்பு ஹேர் டிரையரை பயன்படுத்தி உலர்த்தலாம். இதில் குறைந்த அளவு வெப்பநிலையை மட்டும் பயன்படுத்தி முடியை உலர்த்துவது நல்லது.

    இவ்வாறு செய்யும்போது பொடுகு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகளையும் தடுக்க முடியும். மழைக்காலத்தில், தலைமுடியை இறுக்கி கட்டாமல், காற்றோட்டமான வகையில் தளர்வாக பின்னிக்கொள்வது நல்லது. இது உச்சந்தலையில் வியர்வையால் ஏற்படும் கிருமித்தொற்றை தடுக்க உதவும்.

    தலைமுடியை சீரான இடைவெளியில் டிரிம் செய்ய வேண்டும். இது முடியின் நுனியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதுடன், தலைமுடிக்கு சீரான வடிவத்தையும் தரும். இதனால் கூந்தலை பராமரிப்பதும் எளிதாகும்.

    ஈரமான கூந்தலுடன் வெளியே செல்லும்போது, தூசி, அழுக்கு ஆகியவை எளிதாக கூந்தலில் படியக்கூடும். இது தலைமுடியின் தன்மையை பாதிப்பதோடு முடி உதிர்வு பிரச்சினையையும் உண்டாக்கும். எனவே கூந்தலை நன்றாக உலர்த்திய பின்பு வெளியில் செல்வது நல்லது.

    தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு நாம் பயன்படுத்தும் ஷாம்புவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரசாயனம் கலக்காத கடினத்தன்மை இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. மழையில் நனைந்தால் வீட்டிற்கு வந்தவுடன் மிருதுவான ஷாம்பு கொண்டு உடனடியாக தலைமுடியை கழுவ வேண்டும்.

    முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கற்றாழைக்கு முக்கிய பங்கு உண்டு. வாரத்திற்கு ஒருமுறை, கற்றாழை ஜெல்லை தலையில் மாஸ்க் போல பூசவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீர் கொண்டு தலைமுடியை கழுவவும். இதனால் பொடுகுத்தொல்லை, முடி உதிர்வும் குறையும், முடியின் வேர்க்கால்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

    • உடலில் 300-க்கும் மேற்பட்ட என்சைம்கள் உற்பத்திக்கு ஜிங்க் இன்றியமையாதது.
    • உடலில் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கு ஜிங்க் உதவுகிறது.

    ஜிங்க் என்பது நமது அன்றாட உடல் செயல்பாடுகளை பராமரிக்க தேவையான தனிம சத்தாகும். உடலில் ஜிங்க் குறைபாடு இருக்கும் நபர்களுக்கு ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. வளர்ச்சி குன்றுதல், வயிற்றுப்போக்கு, முடி உதிர்தல், கண் மற்றும் சரும பாதிப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது

    உடலில் 300-க்கும் மேற்பட்ட என்சைம்கள் உற்பத்திக்கு ஜிங்க் இன்றியமையாதது. எனவே நம் உணவில் போதுமான வைட்டமின்களை பெறுவது மிகவும் அவசியம். நம் உடல் ஆரோக்கியமான வளர்ச்சி பெற கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற பல தாதுக்கள் தேவைப்படுகின்றன. எனவே சமச்சீரான ஜிங்க் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா போன்ற காலங்களில் ஏற்படக்கூடிய தொற்றில் இருந்து தப்பிக்க உதவுகிறது

    பெண்களுக்கு உடல்நலனை காக்க தேவைப்படும் சத்துக்களில் துத்தநாகம் என்னும் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது., இந்த ஜிங்க் பெண்களின் உடல்நலத்திற்கு எந்த வகையில் உதவுகிறது என்பதை பார்க்கலாம்.

    * உடலில் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கு ஜிங்க் உதவுகிறது.

    * ஜிங்க் உணவுகள் இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்கள் வராமல் காக்க உதவுகிறது.

    * ஜிங்க் சத்து கால்சியம் அளவிற்கு எலும்புகளுக்கு முக்கியமானது. எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.

    * ஜிங்க் உணவுகள் ஹார்மோன் உற்பத்தியை சமநிலையாக பராமரிக்க உதவுகிறது.

    * ஜிங்க்கில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் பண்புகள் சரும செல்கள் சேதமடைவதை தடுத்து சருமத்தை பாதுகாக்கிறது.

    * ஜிங்க்கில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் தொகுப்புகள் கண்களின் பார்வை திறனை மேம்படுத்துகின்றன.

    * ஜிங்க்கில் உள்ள சத்துக்கள் முடி உதிர்தலை குறைத்து கூந்தல் பாதுகாப்பிற்கு உதவுகிறது.

    * ஜிங்க் பெண்களின் கர்ப்பப்பை பாதுகாப்பு மற்றும் கருமுட்டை வளர்வதற்கு உதவுகிறது.

    • தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.
    • வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தி வரலாம்.

    உலகம் முழுவதும் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்னைகளில் ஒன்று முடிகொட்டுவது. முடி என்பது ஒருவரை அழகாகவும் இளமையாகவும் காட்டக்கூடியது. அதனால் பலரும் அதற்காக நேரமும் பணமும் செலவிட தயங்கவதே இல்லை.

    இன்னும் சிலர் மற்றவர்களுக்கு எப்படி சரியானது என்று கேட்டு, அதன்படி தானும் செய்து மேலும் முடியை இழந்த கதைகள் ஏராளம். தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.

    பொதுவாக முடி நம் உடலின் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் நமது முக அழகையும் குறிக்கும் முதன்மையான விஷயமாகும். நீங்கள் முடி தீர்வு தேடுகிறீர்களானால், வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு எளிய முறையில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தி வரலாம். அதிக விலையில் விற்பனையாகக்கூடிய எண்ணெய் வகைகளை பயன்படுத்தி ஏமாற வேண்டாம்.

    அந்தவகையில் தற்போது முடி கொட்டும் பிரச்சினையை எப்படி எளியமுறையில் சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:-

    தேங்காய் எண்ணெய்- 2 லிட்டர்

    கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி

    செம்பருத்தி பூ- இரு 10 பூ

    செம்பருத்தி இலை- ஒரு கைப்பிடி

    வேப்பிலை- ஒரு கைப்பிடி

    மருதாணி இலை- ஒரு கைப்பிடி

    சாம்பார் வெங்காயம்- 5 நம்பர் (இடித்தது)

    சோற்றுக்கற்றாலை- ஒரு கப்

    வெந்தயம்- 2 டீஸ்பூன்

    பெரிய நெல்லிக்காய்- 3 (இடித்தது)

    கருசீரகம்- 2 டீஸ்பூன்

    வெட்டிவேர்- ஒரு கைப்பிடி

    செய்முறை:

    ஒரு பெரிய அயன் கடாயில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்ததும், கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை மற்றும் முடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி, வெங்காயம், நெல்லிக்காய் இதனை இடித்து சேர்க்க வேண்டும். கற்றாலையை நன்றாக கழுவி சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் வெந்தயம், கருஞ்சீரகம், வெட்டி வேர் போன்றவர்றை மிதமான தீயில் வைத்து அனைத்து பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கொதிக்க விட வேண்டும். சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நன்றாக நிறம் மாறி வரும் வரை அதனை காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதனை ஒருநாள் முழுவதும் அதே பாத்திரத்தில் வைக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் எசன்ஸ்சும் அந்த தேங்காய் எண்ணெயில் நன்றாக ஊறி இறங்கிய பிறகு வடிகட்டி அதனை தேவையான டப்பாக்களில் வைத்து பயன்படுத்தலாம். 2, 3 மாதங்கள் இருந்தாலும் இந்த எண்ணெய் கெட்டுப்போகாது.

    முடிகொட்டுதல் பிரச்சினை மற்றும் முடி அடர்த்தி அதிகமாக இல்லை என்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும், பொடுகு தொல்லை உள்ளவர்களுக்கும் இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உபயோகப்படுத்தி பயன்பெறுங்கள்.

    கூந்தல் வளர்ச்சிக் குறைபாட்டிற்கு சரியான உணவுப்பழக்கம் இல்லாதது ஒரு முக்கியக் காரணம். மேலும் கூந்தல் உதிர்வை தவிர்க்க சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
    தலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. முடி வளர்ச்சிக் குறைபாடுகளுக்குச் சரியான உணவுப்பழக்கம் இல்லாதது ஒரு முக்கியக் காரணம். நாம் உண்ணும் உணவில் இரும்பு, புரதம், துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், நாம் இத்தகைய சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்கிறோமா என்பது சந்தேகமே.

    நாம் சாப்பிடும் உணவுகளில் போதிய புரதச் சத்து இல்லாததால் முடி வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. கர்ப்ப காலத்திலும் குழந்தைப்பேற்றுக்குப் பிறகும் பெண்களில் பலருக்கு முடி உதிர்வது என்பது இயல்பான ஒன்றாகும். இந்த முடி பிரச்னை ஹார்மோன் மாற்றங்களால் நிகழக்கூடியது. இது சிறிது காலத்துக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும்.

    இன்றைய பெண்களில் பலர் நீளமாக முடி வளர்க்க விரும்புவதில்லை. அப்படியே வளர்த்தாலும் ஹேர் கலரிங், `ஸ்ட்ரெய்ட்டனிங்' செய்கிறார்கள். சிலர்  ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். இதனாலும் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு முடி உதிரக்கூடும்.

    பூஞ்சைத் தொற்று (Fungal infection), வட்ட வடிவில் ஏற்படும் புழுவெட்டு (Ring infection) போன்றவை சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடும். இவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமானால், பாய், தலையணை, சீப்பு, டவல் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். பூஞ்சைத் தொற்று, புழுவெட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை பயன்படுத்தினால் நம்மையும் அது பாதிக்கலாம்.



    சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகக்கூட இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதிகரித்துவிட்ட வாகனங்களின் புகையால் காற்று மாசுபட்டு முடி கொட்டக்கூடும். முதலில் தலையில் பொடுகு ஏற்பட்டு அதன்பிறகு முடி கொட்டத் தொடங்கும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்குத் தலையில் பொடுகு வர வாய்ப்பு உள்ளது. சூரியஒளியில் அதிக நேரம் நிற்பதால் அல்ட்ரா வயலட் கதிர்கள் தலையை நேரடியாகப் பாதிப்பதால் தலைமுடி உடைந்து முடி கொட்டத் தொடங்கும்.

    இன்றைக்கு இருசக்கர வாகனங்கள் அதிகரித்துவிட்டன. ஹெல்மெட்டில் வியர்வை தேங்குவதால் கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து அது தலைமுடியைப் பாதிக்கிறது. இதனால் சிலருக்கு அளவுக்கதிகமாக முடி கொட்டுகிறது. இதைத் தவிர்க்க ஹெல்மெட்டில் ஆன்டி பாக்டீரியல் சொல்யூஷன் பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறையோ 10 நாள்களுக்கு ஒருமுறையோ ஹெல்மெட்டை சூரியஒளி படும்படி வைத்துப் பயன்படுத்தினால் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கலாம். அதேபோல் ஹெல்மெட்டை அவ்வப்போது சுத்தப்படுத்தி பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கமுடியும்.

    குளிக்கும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமிருந்தாலும் முடி கொட்ட வாய்ப்புள்ளது. தலைமுடியைப் பராமரிக்க உணவுப் பழக்கவழக்கங்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். உணவில் அதிகம் புரதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள், சோயா, தேங்காய்ப்பால், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பப்பாளி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது. அதேபோல் பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இரவில் இரண்டு பேரீச்சம்பழம், 10 உலர்ந்த திராட்சையை நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன்மூலம் போதிய இரும்புச்சத்து கிடைக்கும். அத்திப்பழம், பீட்ரூட், மாதுளை, சப்போட்டா போன்ற பழங்களிலும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. எள் மிட்டாய், எள்ளுருண்டை சாப்பிடுவதன்மூலமும் போதிய இரும்புச் சத்து கிடைக்கும்.

    வாரத்துக்கு இரண்டு முறை முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும். கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துகள் கிடைக்கும். துத்தநாகம், வைட்டமின் ஈ, ஒமேகா 3 சத்துகள் நிறைந்த பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். கேரட், கிர்ணி, மாம்பழம், சீனிக்கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. அவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    முடி கொட்டுதலுக்கு மனஅழுத்தம் காரணமாக இருப்பதால் யோகா சிறந்த தீர்வு தரும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல்சூடு குறையும். சூடு காரணமாக முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.

    நீங்கள் தவறான வழியில் சீப்பை உபயோகிப்பதாலும் அதிகமான முடியை இழக்க நேரிடும். எந்த தவறான முறையில் சீப்பை உபயோகிப்பதால் முடி கொட்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    சில குறிப்பிட்ட நோய்கள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அதிகமான ரசாயனங்கள் கலந்த ஷாம்பூ முடிக்கு அடிக்கடி உபயோகிப்பது, மோசமான உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் முடி அதிகமாக கொட்டுகின்றது. நீங்கள் தவறான வழியில் சீப்பை உபயோகிப்பதாலும் அதிகமான முடியை இழக்க நேரிடும். இங்கே பொதுவாக தவறான முறையில் சீப்பை உபயோகப்படுத்துவது குறிப்பிடப்பட்டுள்ளது படித்து தெரிந்து கொள்ளுங்கள் திருத்தி கொள்ளுங்கள்.

    முதலில் முடியில் உள்ள சிக்கல்களை போக்க சீப்பை வேர்களில் இருந்து உபயோகிக்காமல் முடியின் பாதியில் இருந்து உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்து சிக்கல்களை நீக்கிய பின்பு முடியின் வேர்களில் இருந்து சீப்பை உபயோகப்படுத்தலாம்.

    ஆரம்பத்திலேயே சிக்கல்களை எடுக்காமல் வேரில் இருந்து சீப்பை உபயோகப்படுத்தினால் முடி மேலும் சிக்கலாகி முடி பலவீனமாகும். இதனால் பலவீனமடைந்த முடிகள் கொட்ட ஆரம்பிக்கும் எனவே அதிகப்படியான முடி கொட்டும் வாய்ப்பு இருக்கிறது.



    தற்போது முடியைப் பராமரிக்க பல்வேறு ரசாயனப் பொருட்கள் மார்க்கெட்களில் கிடைக்கிறது.

    கிரீம்கள், சீரம், பேஸ்ட் போன்ற பொருட்கள் ஸ்டைலிங் காரணமாக முடிக்கு உபயோகப்படுத்துபவர்கள் பெருகி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றை மனதில் கொள்ளுங்கள். இவற்றை முடியில் உபயோகித்த பிறகு சீப்பை பயன்படுத்தாதீர்கள். உங்கள் விரல் நுனிகளை மட்டும் பயன்படுத்துங்கள்.

    சீப்பைப் பயன்படுத்துவதால் கிரீம்கள் இயல்பு மாறுவதை விட இது முடியை பாதிக்கும். அதன் அடர்த்தியைப் பாதிக்கும். அதுமட்டுமின்றி இது முடியை உடைக்கும் வல்லமை வாய்ந்தது இதனால் முடி அதிகமாக கொட்டும்.

    சில நேரங்களில் சிலர் முடியை சீப்பு கொண்டு நுனியில் இருந்து வேர் நோக்கி சீவுகின்றனர். இது முடி அடர்த்தியாக அதிகமாக இருப்பது போன்று காட்சி அளிக்க உதவுகிறது. இது ஒரு தந்திரம் தான் என்றாலும் அடிக்கடி இவ்வாறு செய்வதால் தலையின் புறத்தோல் பாதிக்கப்பட்டு முடி உதிர்ந்து அடர்த்தி குறையும். எனவே முடிக்கு பாதிப்பில்லாமல் முடியை அடர்த்தியாக காட்ட சில முடி ஸ்ப்ரே (அதிக ரசாயனம் கலக்காதது) உபயோகப்படுத்தலாம்.
    உங்கள் தலைமுடி வளராமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அதை சரிசெய்தால், நிச்சயம் உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
    இன்றைய தலைமுறையினர் இளமையிலேயே முடியை இழந்துவிடுகின்றனர். முடி கொட்டுவதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை மேம்படுத்த எத்தனையோ வழிகளை முயற்சிக்கின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. இப்படி பல முயற்சிகளை மேற்கொண்டும் உங்களுக்கு முடி வளராவிட்டால், அதற்கும் சில காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அதை சரிசெய்தால், நிச்சயம் உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

    இங்கு ஒருவருக்கு ஏன் தலைமுடி வளர்வதில்லை என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

    * மோசமான உணவுப் பழக்கமும் முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆரோக்கியமற்ற உணவுகளை எந்நேரமும் உட்கொள்ளும் போது, போதிய வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் உடலுக்கு கிடைக்காமல், முடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களின்றி, முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். அதுமட்டுமின்றி, உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் டயட், உடல் எடையைக் குறைக்கும் அதே சமயம் முடியின் வளர்ச்சியைக் குறைக்கும்.

    * உங்களுக்கு முடி வளராமல் இருப்பதற்கான காரணங்களுள் மற்றொன்று டென்சன். ஒருவர் அளவுக்கு அதிகமான மனதளவில் கஷ்டப்பட்டால், அது முடியின் வளர்ச்சியை தான் பாதிக்கும். மேலும் தலைமுடியின் வேர்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுத்தாலும், முடியின் வளர்ச்சி பாதிக்கப்படும்.



    * தலைமுடி வேகமாக உலர வேண்டும் என்பதற்காக பலர் ஹேர் ட்ரையர் பயன்படுத்துவார்கள். இப்படி ஹேர் ட்ரையரை அதிகம் பயன்படுத்தினால், அதனால் மயிர்கால்கள் பாதிக்கப்பட்டு, முடி உதிர்வதோடு, அதன் வளர்ச்சி முழுமையாக தடுக்கப்படும். அதேப் போல் வெளியே வெயிலில் செல்லும் போது, தலைக்கு ஏதேனும் ஒரு துணியை கட்டிக் கொண்டு செல்லுங்கள். இல்லாவிட்டால் சூரியக்கதிர்களின் நேரடியான தாக்கத்தால் தலைமுடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.

    * தற்போது நிறைய பேர் தலைக்கு தினமும் எண்ணெய் வைப்பதில்லை. இப்படி எண்ணெய் வைக்காமல் இருப்பதால், தலைமுடி மிகுந்த வறட்சிக்குள்ளாகி, முடி வெடிப்பை ஏற்படுத்தி, முடியின் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்துகிறது

    * தலைமுடியைப் பராமரிக்கிறேன் என்று பலர் ஷாம்புக்கள், கெமிக்கல் நிறைந்த சீரத்தைப் பயன்படுத்துவார்கள். இப்படி கண்ட கெமிக்கல் நிறைந்த பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்தினால், அவை முடியின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் முழுமையாக தடுத்துவிடும்.

    * தலைமுடி அதிகம் உதிர்வதற்கு வைட்டமின் குறைபாடும் ஓர் முக்கிய காரணம். தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டுமானால், அதன் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களை அன்றாடம் எடுக்க வேண்டியது அவசியம். எனவே முடி அதிகம் உதிர்ந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரையின் பேரில் நடந்து கொள்ளுங்கள்.
    ×