search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "diarrhea"

  • முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.
  • வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது.

  இன்றைய காலக்கட்டத்தில் பிம்பிள்ஸ், கரும் புள்ளிகள், தழும்புகள் என அனைத்தும் அவர்களது அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தலாகத் உள்ளது.

  பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப்பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  வெளிப்படையான பயன்பாடுகளை பொருத்த வரையில் தலையணை உறை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் பரவக்கூடும்.

   முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லை இருந்தால் முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். இதை எல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் பிம்பிள்ஸ் பிரச்சனை இருக்காது.

   கரும்புள்ளிகள் மறைய:

  வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயணத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக்கொள்ளாததாக இருக்கிறது. அதுபோல எலுமிச்சை சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

   முகத்தில் உள்ள வடுக்கள் நீங்க:

  முகத்தில் பல்வேறு விதமான வடுக்கள் ஏற்படுகின்றன. முகப்பரு வடு, அம்மைத் தழும்பு, விபத்துக்களால் ஏற்படும் வடு போன்றவை. தொடக்கத்திலேயே இதற்கு அழகு சிகிச்சை கொடுத்தால் நிரந்தரமாக மாற்றிவிடலாம். இல்லாவிட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம்தான் இதனை குணப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் வடுக்கள் எவ்வாறாக இருந்தாலும் அதனை மேக்கப் மூலம் தற்காலிகமாக மறைத்துவிடலாம்.

  இயற்கை அழகு சிகிச்கை:

  ஐம்பது சதவீத அளவிலான பெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். இதற்கு பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணம். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது.

  வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். பூலான் கிழங்கு, மஞ்சள், பாசிப்பயிறு, போன்றவைகளை அரைத்து தண்ணீர் கலந்து உடல் முழுக்கத் தேய்க்க வேண்டும். பத்து வயதில் இருந்து சிறுமிகளுக்கு இதனைதேய்து குளிப்பாட்டினால் தேவையற்ற ரோமங்கள் வளருவதை முதலில் இருந்தே தவிர்த்துவிடலாம்.

  • வாழைப்பழத்தில் பொட்டாசியம், மாங்கனீசு சத்துக்கள நிறைந்துள்ளன.
  • மாம்பழத்தில் உள்ள என்ஸைம்கள் செரிமான அமைப்பை பாதிக்கக்கூடும்.

   வாழைப்பழத்தில் பொட்டாசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள நிறைந்துள்ளன. எனவே வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் நலம் பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

   அதேபோல் மாம்பழம் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக்கூடாது. ஏனென்றால் மாம்பழத்தில் உள்ள என்ஸைம்கள் செரிமான அமைப்பை பாதிக்கக்கூடும்.

   பப்பாளிப் பழத்தில் பாப்பைன் (papain) என்ற என்ஸைம் உள்ளது. எனவே பப்பாளி பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் வயிறு மந்தமாகுவதோடு வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்திவிடும். எனவே பப்பாளி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்தக்கூடாது.

   அன்னாசி பழத்தில் ப்ரோமிலைன் (Bromelain) என்ற என்சைம் உள்ளது. எனவே அன்னாசி பழத்தை சப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக் கூடாது. அன்னாசி பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும் போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

   ஆரஞ்சு பழத்தில் அதிகமான அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. எனவே ஆரஞ்சு பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதனால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

   ஆப்பிளில் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே ஆப்பிளை சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதனால் வயிற்றில் வீக்கம் உண்டாவதோடு மந்தமான உணர்வு ஏற்படும்.

  • நீங்கள் போதுமான அளவு தண்ணீர் பருகுகிறீர்களா?
  • அதிகமாக தண்ணீர் பருகினால் `ஹைபோநெட்ரீமியா’ பிரச்சினை ஏற்படும்.

  மழைக்காலம் தொடங்கி விட்டால் பலரும் தண்ணீர் பருகுவதை தவிர்த்துவிடுவார்கள். இதற்கு விதிவிலக்காக பசி உணர்வை கட்டுப்படுத்துவதற்காக தண்ணீர் பருகுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குறைவான அளவில் பருகுவதாக நினைத்து அடிக்கடி பருகிக்கொண்டிருப்பார்கள்.

  சிலரோ குறைந்த பட்சம் 3 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும் என்ற இலக்கை எட்டும் நோக்கத்தில் சாப்பிடும் பொருட்கள் மற்றும் உணவில் தண்ணீர் கலந்திருப்பதை உணராமல் தண்ணீரை அதிகமாக குடிக்கிறார்கள். இதனால் அதிக நீரிழப்பு ஏற்படக்கூடும். பக்க விளைவுகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கும். அதிக அளவு தண்ணீர் பருகுவதை உணர்த்தும் 6 அறிகுறிகள் குறித்து பார்ப்போம்.

  1. சிறுநீரின் நிறம்

  நீங்கள் போதுமான அளவு தண்ணீர் பருகுகிறீர்களா? என்பதை கண்டறியும் சிறந்த வழிகளுள் ஒன்று, சிறுநீரின் நிறத்தை கண்காணிப்பதாகும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது மோசமான அறிகுறியாகும். அதாவது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். அதனை தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் பருகிவர வேண்டும். சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவதே சரியானது. அது உடலில் நீர்ச்சத்து உகந்த நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டும். ஆனால் சிறுநீர் வெள்ளை நிறத்தில் இருந்தால் அதிக நீரிழப்பு ஏற்படுவதாக அர்த்தம். அதாவது தண்ணீர் உட்கொள்ளும் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக அளவு தண்ணீர் பருகும்போது இந்த பிரச்சினை எட்டிப்பார்க்கும்.

  2. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

  நீர் உட்கொள்ளல் அளவு அதிகரிக்கும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்கும் அவஸ்தையை அனுபவிக்க நேரிடும். ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிக்கலாம். ஆனால் 10 முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க நேர்ந்தால் உடலுக்கு தேவையானதை விட அதிகமாக தண்ணீர் பருகுகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தால் அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  3. சோர்வு

  அதிகமாக தண்ணீர் பருகினால் `ஹைபோநெட்ரீமியா' பிரச்சினை ஏற்படும். இது ரத்தத்தில் சோடியம் அளவு குறைவாக இருப்பதன் அறிகுறியாகும். மேலும் அதிகப்படியான நீரிழப்பு ஏற்படுவதையும் வெளிக்காட்டும். அதிக அளவு நீர் பருகும்போது உடல் ஆற்றல் திறன் குறையும். மயக்கம், சோர்வு போன்ற பிரச்சினைகளும் தலைதூக்கும்.

  4. வீக்கம்

  உடலின் எலக்ட்ரோலைட் சம நிலையை பராமரிக்க நீர் உதவும். எலக்ட்ரோலைட்டுகள்தான் உடலின் ஆற்றல் மட்டத்தை உயர்த்த உதவுகின்றன. தண்ணீர் அதிகமாக குடிக்கும்போது, இந்த சமநிலை மாறுபடும். எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வை எதிர்கொள்ளும்போது கைகள், கால்கள் அல்லது உதடுகளில் வீக்கம் ஏற்படலாம். ஹைபோநெட்ரீமியா பாதிப்பையும் உணரலாம்.

  5. தலைவலி, குமட்டல்

  உடலில் அதிகப்படியான நீரிழப்பு ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள சோடியம் அளவை குறைத்து, ஹைபோநெட்ரீமியா நிலைக்கு வழிவகுப்பதோடு மூளையின் செயல்திறனில் குறைபாடு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற அறிகுறிகளும் தென்படும். குறிப்பாக தலைவலியை புறக்கணிக்க வேண்டும். ஏனெனில் அது அதிக நீரிழப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

  6. தசை பலவீனம்

  அதிகப்படியான தண்ணீரைக் குடிப்பதால் எலக்ட்ரோலைட் அளவு குறையும் போது, உடல் சமநிலை மாறுபடும். உடல் சோர்வை அனுபவிப்பதுடன் கை, கால்களில் நடுக்கம் மற்றும் வலியை உணரலாம். தசை பிடிப்பும் உண்டாகலாம். இதுவும் அதிகப்படியான நீரிழப்பின் அறிகுறியாகும். பெண்கள் உடலில் நீர்ச்சத்தை பேணுவது அவசியமானது. அதேவேளையில் எதையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

  • பெண்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம்.
  • தூக்கம் இல்லாததால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது.

  விலைவாசி உயர்வு, குடும்பச் சூழல் மற்றும் எதிர்காலத்தை குறித்த பயம் போன்ற பல காரணங்கள் மக்களை நேரம் காலம் பார்க்காமலும், இரவு பகல் என்று நினைக்காமலும் வேலை செய்ய வைக்கிறது. ஆனால், இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு உடல் நலக்கோளாறுகள் மற்றும் மன ரீதியான கோளாறுகள் போன்ற பாதிப்புகள் அதிகமாகவே ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொடர்ந்து இரவு நேரத்தில் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை இப்போது காண்போம்.

  பகல் நேரத்தில் வேலைசெய்யும் பெண்களை விட இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் இருக்கிறது. அதனால் இரவுநேர வேலையை குறைத்துக்கொள்வது நல்லது. எப்படி குறைக்கலாம் என்று தானே கேட்கிறீர்கள். மாதம் முழுவதும் இரவுநேர வேலை பார்ப்பதைவிட மாதம் ஒருமுறை மட்டும் இரவுநேர வேலை பார்க்கலாம்.

   2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இரவுநேர வேலை பார்ப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. தூக்கம் இல்லாததால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

  இரவுநேரத்தில் வேலை பார்ப்பதால் மனதில் எதிர்மறையான ஆற்றல்கள் வெளிப்படுகிறது. அதனால் உடலும், மனதும் சோர்வடையும்.

  இரவுநேரத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக வேலைபார்த்தாலும் சில தடுமாற்றம் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு உடல் ஓய்வெடுக்கச் சொல்லும். அந்த நேரத்தில் உங்கள் வேலைகளில் கவனச்சிதறல் ஏற்பட்டு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  இரவுநேரத்தில் வேலை செய்து பகலில் தூங்குவதால் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சினை ஏற்படும். வயிற்றுப்போக்கு, அல்சர் மற்றும் குடல் பிரச்சினை, இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினையை ஏற்படுத்தும்.

   நீங்கள் இரவில் வேலை செய்துவிட்டு பகலில் நேரத்தில் தூங்கினாலும் உங்களால் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முடியாது. இதனால் நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.

  இரவுநேரத்தில் வேலை செய்பவர்கள் காய்கறிகள், பழங்கள் என்று ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

   இரவுநேரத்தில் வேலைபார்ப்பவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

  • ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
  • குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

  ஃப்ளூவின் அதிகபட்ச பாதிப்பை உண்டு செய்யும் ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தற்போது குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இவை சற்று தீவிரமான பாதிப்பையே உண்டு செய்கின்றன. இந்த காய்ச்சலை தவிர்க்க எதிர்கொள்ள என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

  இன்ஃப்ளூயன்சா வைரஸ் என்பது ஒருவகை வைரஸ். நார்மலாக வரக்கூடிய சளி வகை போன்ற வைரஸ் தான் இது. எனினும் இதன் வீரியம் சற்று கூடுதலாக இருக்கும். இந்த ஹெச்3 என்2-ன் தாக்கம் இருந்தால் அதன் அறிகுறிகள் சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், உடல் வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, நீர் கோர்த்தல் இதனோடு அதிக காய்ச்சலும் இருக்கும்.

  பொதுவாகவே வைரஸ் காய்ச்சல் 3- 4 நாட்கள் வரை இருக்கலாம். ஆனால் இந்த ஹெச்3 என்2 வைரஸ் ஒரு வாரம் முதல் ௧௨ நாட்கள் வரை கூட ஆகலாம். அதோடு சில நாட்கள் வறட்டு இருமல் நீடிக்கவும் வாய்ப்புண்டு. அதோடு தற்போது மழையும், வெயிலும் பருநிலை மாறுவதால் இதன் வீரியம் அதிகரிக்கும். இதனுடன் மிதமான மழையும் சேர்ந்தால் அது பரவலை அதிகரிக்கச் செய்யும்.

  இதை எதிர்கொள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவியல் மற்றும் வாழ்வியல் முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

  ஆரோக்கியமான உணவுகளில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் தயாரிக்கும் உணவுகளை மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். சாலையோர கடைகளில் இருக்கும் உணவுகள், சுகாதாரமற்ற உணவுகளை தவிர்ப்பதே பாதுகாப்பானது. உதாரணத்துக்கு சாலையோரம் கம்பங்கூழ், கேப்பை கூழ், திறந்த நிலையில் இருக்கும் வெங்காயம், மோர் மிளகாய், வத்தல் போன்றவை வெயிலுக்கு இதமாக இருக்கும் என்றாலும் இவை நீண்ட நேரம் திறந்த நிலையில் இருப்பதால் இவற்றில் இருக்கும் கிருமித்தொற்றுகள் உடலில் பாதிப்பை உண்டு செய்யலாம்.

  வெயிலுக்கு ஏற்றது என்றாலும் கபத்தை உண்டு செய்யும் கொய்யாப்பழம், பால் சேர்ந்த பொருள்கள் குறைப்பது நல்லது. இதனோடு இரவு நேரங்களில் போதுமான தூக்கம் அவசியம் ஆகும்.

  குழந்தைகளுக்கு ஹெச்3 என்2 மட்டும் அல்லாமல் மற்ற தொற்றுகளையும் எதிர்க்கும் அளவுக்கு உடல் பலமாக இருக்க தினமும் பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு சளி தொற்று இருக்கும் போது, காய்ச்சல் இருக்கும்போது நீங்கள் தொடர்ந்து 10 நாட்கள் இந்த பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு தொற்று நேராமல் தடுக்க உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதை கொடுக்கலாம்.

  பூண்டு- ஒரு பல் எடுத்து தட்டிகொள்ளவும். அதில் பால் மற்றும் தண்ணீர் சம அளவு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பூண்டு வேகும் வரை வைத்து பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து இனிப்பு தேவை என்றால் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுக்கலாம். தொற்று வந்த பிறகு தொடர்ந்து 10 நாட்கள் வரை இதை கொடுக்கலாம்.

  நுரையீரல் தொற்று பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நுரையீரல் தொடர்பான கோளாறுகள், உடல் பருமன் கொண்டவர்களுக்கு தொற்று நேரும் அபாயம் அதிகமாக இருக்கலாம். இவர்கள் இன்னும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் நிலவேம்பு கஷாயமும், கபசுர குடிநீரும் எடுத்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நேர்ந்தாலும் அவை தீவிரமாகாமல் தடுக்க முடியும்.

  குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது. காற்றில் கூட இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு அதிகம் என்பதால் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். கிருமிநாசினிகள் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் தொற்று வராமல் தடுக்க முடியும்.

  கூட்டமான இடங்கள் என்றில்லாமல் எப்போதும் ஒரு சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த ஹெச்3என்2 தொற்று மட்டுமல்ல வேறு எந்த வகை தொற்றையும் தடுக்கலாம்.

  • வயிற்றுப்போக்குடன் ரத்தம் போவது நிற்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

  துளசி தீர்த்தம் 400-க்கும் மேற்பட்ட நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. துளசியில் உடனடி பலன் பெறும் சில நோய்கள் விவரம் வருமாறு:

  1. உண்ட விஷத்தை முறிக்க உதவுகிறது.

  2. விஷஜுரம் குணமாகும்.

  3. ஜன்னிவாத ஜுரம் குணமாக உதவுகிறது.

  4. வயிற்றுப்போக்குடன் ரத்தம் போவது நிற்கும்.

  5. காது குத்து வலி குணமாக உதவுகிறது.

  6. காது வலி குணமாகும்.

  7. தலைசுற்று குணமாக உதவுகிறது.

  8. பிரசவ வலி குறைய உதவுகிறது.

  9. அம்மை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.

  10. சிறுநீரக துவார வலி குணமாக உதவுகிறது

  11. வண்டு கடி குணமாகும்.

  12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக உதவுகிறது

  13. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

  14. தோல் சம்பந்தமான நோய் குணமாக உதவுகிறது

  15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற உதவுகிறது

  16. அஜீரணம் குணமாகும்.

  17. கெட்ட ரத்தம் சுத்தமாக உதவுகிறது

  18. குஷ்ட நோய் குணமாகும்.

  19. குளிர்காய்ச்சல் குணமாகும்.

  20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக உதவுகிறது

  21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க உதவுகிறது.

  22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க உதவுகிறது.

  23. வலிப்பு குணமாகும்

  24. ஜலதோஷம் குணமாகும்

  25. ஜீரண சக்தி உண்டாக உதவுகிறது

  26. தாதுவைக் கட்ட உதவுகிறது

  27. சொப்பன ஸ்கலிதம் குணமாக உதவுகிறது

  28. இடிதாங்கியாகப் பயன்பட உதவுகிறது

  29. தேள்கொட்டு குணமாக உதவுகிறது

  30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக உதவுகிறது

  31. கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற உதவுகிறது

  32. வாதரோகம் குணமாக உதவுகிறது

  33. காய்ச்சலின் போது தாகம் தணிய உதவுகிறது

  34. பித்தம் குணமாகும்.

  35. குழந்தைகளுக்கு வாந்தியை நிறுத்த உதவுகிறது

  36. குழந்தைகள் வயிற்றுப்போக்கை நிறுத்த உதவுகிறது

  37. சகல விதமான வாய்வுகளும் குணமாக உதவுகிறது

  38. மாலைக்கண் குணமாகும்

  39. எலிக்கடி விஷம் நீங்க உதவுகிறது

  40. ரணத்தில் ரத்தம் ஒழுகினால் நிறுத்த உதவுகிறது

  41. வாந்தியை நிறுத்த உதவுகிறது

  42. தனுர்வாதம் குணமாகும்

  43. வாதவீக்கம் குணமாகும்

  44. மலேரியா காய்ச்சல் குணமாக உதவுகிறது

  45. வாயுப் பிடிப்பு குணமாக உதவுகிறது

  46. இருமல் குணமாகும்.

  47. இன்புளூயன்சா காய்ச்சல் குணமாகும்.

  48. காய்ச்சலால் ஏற்படும் வாந்தியை நிறுத்த உதவுகிறது

  59. இளைப்பு குணமாகும்

  50. பற்று, படர்தாமரை குணமாக உதவுகிறது

  51. சிரங்கு குணமாக உதவுகிறது

  52. கோழை, கபக்கட்டு நீங்க துளசியை பயன்படுத்தலாம்.

  • உடலில் 300-க்கும் மேற்பட்ட என்சைம்கள் உற்பத்திக்கு ஜிங்க் இன்றியமையாதது.
  • உடலில் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கு ஜிங்க் உதவுகிறது.

  ஜிங்க் என்பது நமது அன்றாட உடல் செயல்பாடுகளை பராமரிக்க தேவையான தனிம சத்தாகும். உடலில் ஜிங்க் குறைபாடு இருக்கும் நபர்களுக்கு ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. வளர்ச்சி குன்றுதல், வயிற்றுப்போக்கு, முடி உதிர்தல், கண் மற்றும் சரும பாதிப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது

  உடலில் 300-க்கும் மேற்பட்ட என்சைம்கள் உற்பத்திக்கு ஜிங்க் இன்றியமையாதது. எனவே நம் உணவில் போதுமான வைட்டமின்களை பெறுவது மிகவும் அவசியம். நம் உடல் ஆரோக்கியமான வளர்ச்சி பெற கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற பல தாதுக்கள் தேவைப்படுகின்றன. எனவே சமச்சீரான ஜிங்க் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா போன்ற காலங்களில் ஏற்படக்கூடிய தொற்றில் இருந்து தப்பிக்க உதவுகிறது

  பெண்களுக்கு உடல்நலனை காக்க தேவைப்படும் சத்துக்களில் துத்தநாகம் என்னும் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது., இந்த ஜிங்க் பெண்களின் உடல்நலத்திற்கு எந்த வகையில் உதவுகிறது என்பதை பார்க்கலாம்.

  * உடலில் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கு ஜிங்க் உதவுகிறது.

  * ஜிங்க் உணவுகள் இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்கள் வராமல் காக்க உதவுகிறது.

  * ஜிங்க் சத்து கால்சியம் அளவிற்கு எலும்புகளுக்கு முக்கியமானது. எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.

  * ஜிங்க் உணவுகள் ஹார்மோன் உற்பத்தியை சமநிலையாக பராமரிக்க உதவுகிறது.

  * ஜிங்க்கில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் பண்புகள் சரும செல்கள் சேதமடைவதை தடுத்து சருமத்தை பாதுகாக்கிறது.

  * ஜிங்க்கில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் தொகுப்புகள் கண்களின் பார்வை திறனை மேம்படுத்துகின்றன.

  * ஜிங்க்கில் உள்ள சத்துக்கள் முடி உதிர்தலை குறைத்து கூந்தல் பாதுகாப்பிற்கு உதவுகிறது.

  * ஜிங்க் பெண்களின் கர்ப்பப்பை பாதுகாப்பு மற்றும் கருமுட்டை வளர்வதற்கு உதவுகிறது.

  • உடல்நலம் பாதிக்கப்பட்ட 4 பேரும் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
  • இந்த ஓட்டலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

  வண்டலூர்:

  செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே பிரபல தனியார் ஓட்டலில் கடந்த 13-ஆம் தேதி மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 27) தனது குடும்பத்துடன் கோழி இறைச்சியில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு இரவு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் ஓட்டலில் சாப்பிட்ட 4 பேரும் வாந்தி வயிற்றுப்போக்கால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். உடனடியாக 4 பேரும் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

  இது குறித்து மோகன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள ஓட்டலுக்கு நேரில் சென்று விசாரித்துவிட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் ஊரப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஓட்டலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

  ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சைவம் மற்றும் அசைவ ஓட்டல்கள் உள்ளன பெரும்பாலான ஓட்டல்களில் தரமான உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடிக்கடி வந்து நேரில் ஆய்வு செய்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

  • ஒவ்வொரு வருடமும் “தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்” 2 வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டுக்கான முகாம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை முகாம் நடைபெறுகிறது.

  சேலம்:

  5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலுமாக தவிர்க்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் "தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்" 2 வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முகாம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை முகாம் நடைபெறுகிறது.

  முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 5 வயது குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்புநீர் கரைசல் தூள் பாக்கெட்டுகளை இலவச மாக வழங்கி வயிற்றுப்போக்கின் போது அதனை உபயோகிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றர்.

  அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளிலும் ஓ.ஆர்.எஸ். பகுதி அமைக்கப்படும் மற்றும் ஓ.ஆர்.எஸ். உப்பு நீர் கரைசல் தயாரிப்பது, கை கழுவும் முறை, பிரத்யேக தாய் பால் அளிக்கும் முறை, இணை உணவு வழங்கும் முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

  5 வயதிற்குட்பட்ட குழந்தை இறப்பிற்கான முக்கிய காரணங்களில் வயிற்றுப்போக்கு ஒன்றாகும். அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கால் குழந்தைகளுக்கு நீர்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படும்.

  இந்நீர்சத்து குறைபாட்டினை தடுக்க ஓ.ஆர்.எஸ். (உப்புநீர் கரைசல்) எனும் உயிர்காக்கும் அமுதம் அளிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்பினை தடுக்கலாம். மேலும் வயிற்றுப்போக்கின் போது துத்தநாக மாத்திரையை 14 நாட்களுக்கு தொடர்ந்து கொடுப்பதால், வயிற்றுப்போக்கு விரைவில் குணமடையும்.

  வயிற்றுப்போக்கு எளிதில் தடுக்க கூடிய நோய்களில் ஒன்றாகும். பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு பற்றிய விழிப்புணர்வின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்தலாம்.

  இதனை கருத்திற்கொண்டு தேசிய அளவில் சேலம் மாவட்டத் தில் உள்ள 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 501 துணை சுகாதார நிலை யங்கள், 13 அரசு மருத்துவ மனைகள் மற்றும் 2,696 அங்கன்வாடி மையங்களில் முகாம் நடத்துதப்படுகிறது.

  இம்முகாம்களில் பொது சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட துறைகளைச் சார்ந்த 3,212 பணி யாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் இந்காத முகாம் மூலம் 2 லட்சத்து 60 ஆயிரம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயன்பெற உள்ளனர் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

  • 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 10 சதவீதம் வயிற்று போக்கால் ஏற்படுகிறது.
  • பாதுகாப்பான குடிநீர் பற்றி விழிப்புணர்வு இல்லாததும் காரணமாகும்.

  ஈரோடு, 

  ஈரோடு மாவட்டத்தில் வரும் 12 முதல் 24-ந் தேதி வரை இரு வார கால வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடக்க உள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதாகும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 10 சதவீதம் வயிற்று போக்கால் ஏற்படுகிறது.

  இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் வயிற்று போக்கால் இறக்கின்றன. பிறந்த குழந்தைகளில் பிறந்த உடன் சீம்பால் புகட்டாத குழந்தைகள், பிறந்து 6 மாதம் வரை பிரத்யோகமாக தாய்ப்பால் புகட்டாமல் இருத்தல், சுகாதாரமற்ற வளர்ப்பு முறை, கை சுத்தம் பேனாமல் இருத்தல், வளர்ப்பு குழந்தைகளில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, பாதுகாப்பான குடிநீர் பற்றி விழிப்புணர்வு இல்லாததும் காரணமாகும். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 45,354 குழந்தைகள் உள்ளனர்.

  இரு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை முன்னிட்டு அனைத்து அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளின் தாய்மார்களுக்கு 'சின்க்' மாத்திரை, ஓ.ஆர்.எஸ். உப்பு சர்க்கரை கரைசல் பொட்டலங்கள் வழங்கப்பட்டு தயாரிக்கும் முறை, பயன்பாடு குறித்து விளக்கப்படும்.

  பிறந்த குழந்தைகளுக்கு தாய்பாலின் முக்கியத்துவம், கை கழுவுதல் முறை பற்றி விளக்கப்படும். பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பான குடிநீர், கை கழுவுதல் முறை விளக்கப்படும். இந்த தகவலை ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.