search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Vitamin"

  • காபி பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.
  • கலோரி இல்லாத பானமாகவும் காபி விளங்குகிறது.

  காலையில் எழுந்தும் காபி பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். பால், காபி டிகாஷன், சர்க்கரை உள்ளிட்டவை ஒரு சேர கலந்து வெளிப்படும் காபியின் நறுமணத்தால் வீடே கமகமக்கும். அது காபி பிரியர்களை குஷிப்படுத்தினாலும் சில கட்டுப்பாடுகளை பின்பற்றினால்தான் காபியை தொடர்ந்து பருக முடியும். உடலுக்கு கேடு நேராமல் பார்த்துக்கொள்ள முடியும்.

  பால் கலந்த காபியை விட சாதாரண கருப்பு காபி (பிளாக் காபி) பருகுவதுதான் நல்லது என்ற கருத்தை மருத்துவ நிபுணர்கள் முன்வைக்கிறார்கள். அதில் சர்க்கரை, கொழுப்பு, கலோரிகள் சேர்க்கப்படாமல் இருப்பதால் காபியின் நன்மைகளை முழுமையாக பெற முடியும் என்றும் கூறுகிறார்கள்.

  பிளாக் காபியில் இயற்கையாகவே ஆன்டிஆக்சிடென்டுகள், வைட்டமின் பி2, பி3, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்துள்ளது. மேலும் இது கலோரி இல்லாத பானமாகவும் விளங்குகிறது. உடல் எடையை சீராக பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் உதவக்கூடியது.

  அல்சைமர் நோயை விரட்டும்:

  நினைவாற்றல் இழப்பு, சிந்தனை திறன் செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் அல்சைமர் நோய் பாதிப்பால் ஏற்படக்கூடும். அன்றாடம் மேற்கொள்ளும் இயல்பான பணிகளை கூட செய்யவிடாமல் தடுமாற வைத்துவிடும். பிளாக் காபி பருகுவது அல்சைமர் நோய் அபாயத்தை குறைக்கும் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தினமும் 2 அல்லது 3 கப் கருப்பு காபி பருகுவதன் மூலம் அல்சைமர் நோய் அபாயத்தை 65 சதவீதம் குறைக்கலாம் என்பதும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  எடை குறைப்புக்கு வித்திடும்

  பிளாக் காபியை தொடர்ந்து பருகுவது உடல் எடையை குறைக்கவும் உதவும். ஹார்வர்டு டி.எச். சான் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் மேற்கொண்ட ஆய்வில், உடல் எடையை குறைக்கும் விஷயத்தில் கருப்பு காபியை உட்கொள்வது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கருப்பு காபியில் உடல் எடையை குறைக்கவும், குளுக்கோஸ் உற்பத்தியை மெதுவாக்கவும் உதவும் குளோரோஜெனிக் அமிலங்கள் இருக்கின்றன. புதிய கொழுப்பு செல்கள் உருவாகுவதையும் கட்டுப்படுத்துகின்றன. ஆதலால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கருப்பு காபி சிறந்த தேர்வாக அமையும். எனினும் பால், சர்க்கரை சேர்க்கவில்லை என்றால் காபியில் கலோரிகள் குறைவாகவே இருக்கும். அதனை கருத்தில் கொண்டு காபி பருகுவது நல்லது.

  உடல் ஆற்றலை அதிகப்படுத்தும்

  ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பிளாக் காபி பருகுவது சோர்வை விரட்டும். உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். அதனால் உற்சாகத்தோடும், உடல் வலுவோடும் உடற்பயிற்சி செய்யலாம். உடல் இயக்கமும் மேம்படும்.

  நீரிழிவு நோயை விரட்டும்

  ஐரோப்பிய நீரிழிவு நோய் தடுப்பு அசோசியேசனின் அங்கமான டயபடோலாஜியா இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவின்படி, கருப்பு காபி உட்கொள்வது டைப்-2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவும். உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்து நீரிழிவு அபாயத்தை குறைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

  மனநிலையை மேம்படுத்தும்

  எடுத்த காரியத்தை சிறப்பாக செய்யவும், மனநிலையை அதிகரிக்கவும் ஒரு கப் பிளாக் காபி உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனதை விழிப்பு நிலையில் வைத்திருக்கவும் கருப்பு காபி துணைபுரியும். எனவே மனம் தளர்ந்து போகும் சமயத்தில் கருப்பு காபி பருகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

  எப்போது காபி குடிக்க வேண்டும்?

  காலை அல்லது பகல் பொழுதில் கருப்பு காபி பருகுவது சிறந்தது. இரவில் தூங்கும் முன் கருப்பு காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

  பக்க விளைவுகள்

  தினமும் 2 அல்லது 3 கப் பிளாக் காபி பருகலாம். அதற்கு மேல் பருகினால் தூக்க சுழற்சியை சீர்குலைத்து, தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். மேலும் காபியில் காபின் நிறைந்துள்ளதால் அதனை அதிகம் பருகும்போது அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் உண்டாக்கும்.

  • வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
  • உடலில் வைட்டமின் டி அதிகமாக இருப்பது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும்.

  இதயம், நுரையீரல், மூளை உள்பட உடல் தசைகளின் சீரான செயல்பாட்டுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளுள் ஒன்றாக வைட்டமின்-டி விளங்குகிறது. மேலும் எலும்புகளுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை உறிஞ்ச உதவுகிறது. உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை உணவுகள், சூரிய ஒளிக்கதிர்கள் மூலம் பெறலாம். போதுமான அளவு வைட்டமின் டி உட்கொள்வதன் மூலம் உடல் எடை குறைத்தல், எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துதல், மனச்சோர்வை தடுத்தல், இதய நோய்களில் இருந்து பாதுகாத்தல் போன்ற ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும், வைரஸ் நோய்களுக்கு எதிராக நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கச்செய்வதிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது.

  கடுமையான கொரோனா வைரஸ் தொற்று அல்லது அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைஅடுத்து உடலில் வைட்டமின் டி சத்தை வலுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதேவேளையில் வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதுபற்றி பார்ப்போம்.

  உடலில் வைட்டமின் டி அளவு அதிகரித்தால் கால்சியத்தை உறிஞ்சும் அளவும் அதிகமாகும். அதன் காரணமாக பசியின்மை, உயர் ரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் உண்டாகும். மார்பு வலி, எரிச்சல், பதற்றம் போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும்.

  உடலில் வைட்டமின் டி அதிகமாக இருப்பது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். ஏனெனில் வைட்டமின் டி அதிகமாகும்போது ரத்தத்தில் கால்சியம் அளவும் அதிகரித்துவிடும். அது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். காய்ச்சல், குமட்டல், வாந்தி அல்லது கடுமையான வயிற்று வலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

  வைட்டமின் டி அளவு அதிகமானால் ரத்தத்தில் வைட்டமின் கே 2 அளவு குறைந்துவிடும். இதன் முதன்மையான செயல்பாடு எலும்புகளில் கால்சியத்தைப் பாதுகாப்பது தான். வைட்டமின் டி அதிகமாக உட்கொண்டால் அது வைட்டமின் கே 2 வின் செயல்பாட்டைக் குறைத்துவிடும். அதனால் எலும்புகளுக்கு பாதிப்பு நேரும். எலும்புகளில் வலி, கடுமையான முதுகுவலி, மூட்டுவலி, எலும்பு முறிவு ஆபத்து, எலும்புகள் உறுதியற்ற தன்மையில் இருப்பது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

  வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது ஹைபர்கால்சீமியா பாதிப்பை ஏற்படுத்தும். அதன் காரணமாக இதய துடிப்பு ஒழுங் கற்ற நிலைக்கு மாறிவிடும். மேலும் கால்சியம் அளவு அதிகரிக்கும்போது இதயத்தின் தமனிகளில் கால்சியம் படியத்தொடங்கிவிடும். அது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

  வைட்டமின் டி அளவு அதிகரிக்கும்போது ரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பேட் அளவும் அதிகரித்துவிடும். அவை ஒன்றிணைந்து படிகங்களை உருவாக்கும். அந்த படிகங்கள் நுரையீரலில் படிவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் நுரையீரலின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகும். அப்படி நேர்ந்தால் இருமல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மார்பு வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.

  ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கும்போது சிறுநீரகம் சிறுநீரை பிரித்தெடுக்கும் செயலுக்கு ஆபத்து ஏற்படக்கூடும். அதன் காரணமாக கட்டுப்பாடு இல்லாமல் அதிக அளவில் சிறுநீர் கழிக்க நேரும். அதனால் நீரிழப்பு உண்டாகும்.

  வைட்டமின் டி அதிக அளவு உட்கொள்ளும்போது கணைய அழற்சி பிரச்சினையும் தோன்றும். எடை குறைதல், வயிற்றின் மேல் பகுதியில் வலி மற்றும் காய்ச்சல் போன்றவை கணைய அழற்சிக்கு ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக அமையும்.

  உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால் எலும்பு பலவீனம், முடி உதிர்தல், தசை வலி, மனச்சோர்வு, அடிக்கடி நோய்வாய்ப்படுவது போன்ற அறிகுறிகள் தென்படும். உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை உணவுகள், சூரிய கதிர்கள் மூலம் பெறுவதே நல்லது. அப்படி இருந்தும் வைட்டமின் டி பற்றாக்குறையை சந்திக்க நேர்ந்தால் டாக்டர்களின் பரிந்துரையின் பேரிலேயே மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

  முட்டை, காளான், பால், பாலாடைக்கட்டி, மீன் வகைகளில் வைட்டமின் டி அதிகமாக இருக்கும். 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் 8.5 முதல் 10 மைக்ரோ கிராம் வைட்டமின் டி தேவைப்படும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தினமும் 10 முதல் 20 மைக்ரோ கிராம் வைட்டமின் டி தேவைப்படும். இருப்பினும் ரத்த அளவை பராமரிக்க 25 முதல் 100 மைக்ரோ கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம் என சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தினமும் அந்த அளவுக்கு வைட்டமின் டி சார்ந்த உணவுகளை உட்கொண்டால் போதுமானது.

  • வைட்டமின் சி சத்து மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமானது அல்ல.
  • அன்றாடம் நார்ச்சத்து, நீர்ச்சத்து உணவுகளை சாப்பிடுவது சீரான உடல் இயக்கத்திற்கு உதவும்.

  கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சத்து அதிகம் கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் வைட்டமின் சி சத்து மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமானது அல்ல. ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.

  அதனால் வைட்டமின் சி மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சீரான உணவை உண்பது அவசியமானது. மேலும் நன்றாக தூங்கவும் வேண்டும். உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டு வருவதும் நல்லது.

  ஆண்டு முழுவதும் உடல் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. அவை பெரும் பாலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எனப்படும் இரண்டு முக்கிய கூறுகளால் ஆனவை. மனித உடல்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைத் தாங்களே உற்பத்தி செய்யும் திறன் கொண் டவை அல்ல. ஆதலால் போதுமான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

  அனைத்து நுண்ணூட்டச்சத்துக்களும் தனித்துவமான குணங்களைக் கொண்டிருக்கின்றன. சாப்பிடும் உணவில் அவை போதுமான அளவு இல்லாதபோது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக்கூடும். அதனால் நோய்க்கிருமிகள் எளிதாக குடிகொண்டுவிடும். உடலுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக பால் பொருட்கள், இறைச்சி பொருட்கள், முழு தானியங்கள் மற்றும் தினைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  நுண்ணூட்டச்சத்துக்களைத் தவிர, அன்றாடம் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது சீரான உடல் இயக்க செயல்பாட்டிற்கு உதவும். அது குடல் ஆரோக்கியத்தையும், மூளையின் சரியான செயல்பாட்டிற்கான நீரேற்றத்தையும் உறுதி செய்துவிடும். எந்த ஊட்டச்சத்துக்களை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது பற்றி உணவியல் நிபுணரை கலந்தாலோசித்துக்கொள்வதும் அவசியம்.

  மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவு பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின்-டியைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான்.
  உயிர்ச்சத்துகளில் வைட்டமின்-டி முக்கியமானது. அதேநேரம் அதிக கவனம் செலுத்தப்படாத வைட்டமின்களில் ‘டி'யும் ஒன்று.

  வைட்டமின்-டி என்பது எலும்புக்கும் பற்களுக்கும் அவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது.

  வைட்டமின்-டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தை சமாளிப்பதிலும் வைட்டமின்-டி உதவுவதாக கூறப்படுகிறது. மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவு பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின்-டியைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான்.

  இதை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

  நமது வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் அமைந்துவிட்டது. வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு வெளியே ஒரு 20 முதல் 25 நிமிடங்கள் நம் கை மீது வெயிலோ அல்லது திறந்தவெளிக் காற்றோ படும்படி இருந்தாலே போதும், வைட்டமின்-டி கிடைக்கும். மதிய உணவு நேரத்தின்போது அலுவலக வளாகத்துக்கு வெளியே சற்று நடந்துவரலாம். அதேபோல் குழந்தைகளையும் வெளியே விளையாட ஊக்குவிக்கலாம். இப்படிச் செய்யும் அதேநேரத்தில் அதிகப்படியாக வெயிலில் இருந்துவிடவும் கூடாது. அதனாலும் பாதிப்பு ஏற்பட நேரிடும்.

  நமது வழக்கமான உணவிலிருந்து வைட்டமின் ‘டி'யைப் பெறுவது கடினம் என்பதால் காளா, சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களைக் கொண்டு நமது தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளலாம். 3 காளா துண்டுகள், நமது தினசரி வைட்டமின் ‘டி’ தேவையில் 80 சதவீதம் பூர்த்தி செய்துவிடும். முட்டைகளிலிருந்தும் வைட்டமின்-டி சத்தை பெறலாம். ஒரு முட்டையிலிருந்து ஒரு மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் ‘டி'யைப் பெறலாம். மாட்டு ஈரலில் புரதச்சத்து, இரும்புச் சத்து போன்றவை மட்டுமல்ல, வைட்டமின் ‘டி'யும் காணப்படுகிறது.
  சூரிய ஒளியில் சில நிமிடங்களை செலவிடுவதன் மூலம் ரத்த அணுக்களில் உள்ள வைட்டமின் டி அளவை அதிகரிக்க செய்யலாம்.
  உடல் உறுப்புகளின் அத்தியாவசியமான செயல்பாட்டுக்கு வைட்டமின் டி அவசியமானது. சூரிய ஒளியில் சில நிமிடங்களை செலவிடுவதன் மூலம் ரத்த அணுக்களில் உள்ள வைட்டமின் டி அளவை அதிகரிக்க செய்யலாம். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் ஆண்டு முழுவதும் போதுமான அளவு சூரிய ஒளி தடையின்றி கிடைக்கிறது. எனினும் நமது நாட்டில் வைட்டமின் டி குறைபாடு பிரச்சினை அதிகளவில் இருக்கிறது. 65 முதல் 70 சதவீதம் பேர் வைட்டமின் டி குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

  உலகளவில் 100 கோடி பேருக்கு வைட்டமின் டி குறைபாடு பிரச்சினை இருக்கிறது. தாமதமாக தூங்க செல்வது, காலை வேளையில் சூரிய வெளிச்சம் உடலில் படாமல் இருப்பது, குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் செலவிடுவது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தவறான உணவு பழக்கம் போன்றவை வைட்டமின் டி பற்றாக் குறைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மற்ற வைட்டமின்களை போல் அல்லாமல் வைட்டமின் டி உடலில் உள்ள உயிரணுக்கள், ஹார்மோன்களின் செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வைட்டமின் டி தேவைப்படுகிறது.

  முதுகுவலி தசை வலி, சோர்வு, மன அழுத்தம், முடி கொட்டுதல் போன்ற பிரச்சினை கள் வைட்ட மின் டி பற்றாக் குறையால் ஏற்படுவ தாகும். அதிக எடை, உடல் பருமன் கொண்டவர்கள், போதுமான அளவு மீன், பால் பொருட்களை சாப்பிடாதவர்கள், சூரிய ஒளியில் இருந்து விலகி இருப்பவர்கள், வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் பயன்படுத்துபவர்கள், தொடர்ந்து உள் அறைகளிலேயே தங்கி இருப்பவர்கள் வைட்டமின் டி குறைபாடுக்கு ஆளாக நேரிடும்.
  பல வைட்டமின் குறைபாடுகள் ஆரம்ப காலத்தில் சில அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். ஆயினும் சில உடல் நலமின்மை வெளிப்பாடுகளை நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அணுகுவதற்கான சில குறிப்புகளை பார்க்கலாம்.
  வைட்டமின்களும், தாது உப்புகளும் உடல் நலத்திற்கு மிக மிக அவசியமானவை இதன் குறைபாடு பலரிடம் காணப்படுவதன் காரணம் பழங்கள், காய்கறிகள் இவற்றினை நாம் இன்னமும் நன்கு பயன்படுத்த முன்வராதது தான் காரணம். பலருக்கு பொருளாதார பிரச்சினை காரணமாக முறையான உணவு முறையினை பின்பற்ற முடிவதில்லை. மிகச் சாதாரணமாக நாம் காணும் சத்து குறைபாடுகளானது இரும்பு, வைட்டமின் டி, கால்ஷியம் குறைபாடுகள் ஆகும்.

  பல வைட்டமின் குறைபாடுகள் ஆரம்ப காலத்தில் சில அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். மருத்துவரே உங்கள் குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆயினும் சில உடல் நலமின்மை வெளிப்பாடுகளை நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அணுகுவதற்கான சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

  * எப்போதும் சோர்வாக இருப்பது போல் தோன்றினால் வைட்டமின் பி12, வைட்டமின் டி, இரும்பு சத்து குறைபாடு போன்றவை இருக்கக்கூடும்.

  * ஆடு தசையில் ஏற்படும் இறுக்கப் பிடிப்பு மக்னீசயம் குறைபாட்டினைக் குறிக்கலாம்.

  * ஈறுகள் வீக்கம், சிறு காயங்கள் ஆற அதிக நேரம் பிடித்தல் போன்றவை வைட்டமின் ‘சி’ குறைபாடாக இருக்கலாம். அதிக புகை பிடிப்பவர்களுக்கு வைட்டமின் ‘சி’ குறைபாடு அதிகம் காணப்படுகின்றது.

  * இரவில் கண் பார்வை குறைதல் (அ) பொதுவாகவே கண் பார்வை குறை போன்றவற்றுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைபாடும் முக்கிய காரணமாகும்.

  * சிலருக்கு கை, முதுகு லக்கங்களில் கூட பருக்கள் இருக்கலாம்.இதற்கு சரும மருத்துவர் மூலம் சிகிச்சை பெற வேண்டும் எனினும் லிவீஸீநீ குறைபாடு இருக்கின்றதா எனவும் மருத்துவர் மூலம் அறிந்து குறைபாட்டினை சரிசெய்து கொள்ள வேண்டும்.

  * வாயில் சிறு புண்கள், உடலில் வித்தியாசமான சரும பாதிப்புகள் இருந்தால் வைட்டமின் குறைபாடு இருக்கின்றதா என்று அறியவும்.

  * நாக்கில் வெள்ளை படிதல் இருந்தால் சில காரணங்களுடன் முக்கியமான காரணமாக வைட்டமின் ‘பி’ குறைபாடும் இருக்கலாம். இந்த வைட்டமின் உங்கள் நரம்பு மண்டலத்திற்கு அவசியம்.

  சில அறிகுறிகளை நாம் அலட்சியப்படுத்தாமல் ஆரம்ப நிலையிலேயே கவனிக்க வேண்டும் என்பதற்காக சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  * தொடர்ந்து சோர்வாக இருந்தால் உடனடியாக இதற்கு கவனம் செலுத்துங்கள்.

  * உங்கள் முயற்சி இல்லாமல் திடீரென எந்த காரணமும் இன்றி எடை குறைவு ஏற்பட்டால் ஏன் என மருத்துவர் மூலம் அறியுங்கள்.

  * உடலில் ஏதோ ஒரு பகுதியில் விடாது வலி இருப்பதும், சிகிச்சை பலனின்றி வலிப்பதும் அதிக மருத்துவ கவனம் தேவைப்படுவது ஆகும்.

  * உடலில் கட்டி போல் சிறு உருண்டை இருப்பின் உடனடியாக பரிசோதித்து தீர்வு பெறுங்கள்.

  * அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் பாதிப்பிற்கு கூடுதல் மருத்துவ பரிசோதனை தேவை.

  * சருமத்தில் ஏற்படும் திடீர் மச்சம் போன்றவை அல்லது அதில் ஏற்படும் மாறுதல்கள் இருந்தால் அதனை தீர மருத்துவஆய்வு செய்ய வேண்டும்.

  * இருமல் பொதுவாக சளி, காய்ச்சல் இவற்றோடு ஏற்படுவதுதான்.

  * அடிக்கடி சிறுநீர் செல்லுதல், அடிக்கடி வயிற்றுப்போக்கு பின் மலச்சிக்கல் என்ற அறிகுறிகளை உடனடியாக கவனிக்க வேண்டும்.

  * இருமலில் ரத்தம், மேலும் பிறப்புறுப்பு, குடல் வெளியேற்றத்தில் ரத்தம் போன்றவற்றுக்கு சிறிதும் காலம் தாழ்த்தாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

  * உணவு, திரவ உணவு விழுங்குவதில் சிரமம் இருந்தால் கவனித்து விட வேண்டும்.
  வைட்டமின் டி, அதன் முக்கியத்துவம் இவற்றினைப் படிக்கின்றோம். ஆனால் இன்னமும் அது மக்களின் மனதில் முழு முக்கியத்துவத்தினைப் பெறவில்லை என்றே தோன்றுகின்றது.
  வைட்டமின் டியினை வைட்டமின் என்பதனை விட ஹார்மோன் என்றே சொல்ல வேண்டும். மிகவும் முக்கியமான சத்து கொண்டது. ஆயினும் இதன் குறைபாடு அநேகரிடம் காணப்படுவதன் காரணமாகவே இதன் முக்கியத்துவத்தினைப் பற்றி எழுத வேண்டி உள்ளது. இன்றைய ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாடு 200 வகையான நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றன.

  * வைட்டமின் டி குறைபாடால் அடிக்கடி ஏற்படும் குறைபாடுகளான சளி, ஃப்ளூ போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

  * இதன் குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தியினைக் குறைக்கின்றது.

  * வைட்டமின் டி உடலில் கால்ஷியம் உறிஞ்சப்படுவதற்கு மிகவும் அவசியமான ஒன்று. இதுவே எலும்பு முறிவுகளைத் தவிர்க்க பெரிதும் உதவுகின்றது. எலும்புகள் உறுதியாய் இருக்கவும், சமச்சீரான உடல் அசைவுக்கும் வைட்டமின் டி பெரிதும் அவசியமாகின்றது. இதன் குறைபாடு எளிதில் எலும்பு முறிவுகளை ஏற்படுத்தி விடும்.

  * நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கும் டி வைட்டமின் உதவுகின்றது.

  * குறைந்த வைட்டமின் டி என்பது அதிக உயர் ரத்த அழுத்தம் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆக வைட்டமின் டி ரத்த அழுத்தம் சீராய் இயங்கவும். இருதய பாதுகாப்பிற்கும் அவசியம் ஆகின்றது.

  * சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவுகின்றது.

  * போதுமான அளவு வைட்டமின் டி உடலில் இல்லை என்றால் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி இருந்து கொண்டே இருக்கும். ஓயாத பசி இருந்தால் வைட்டமின் டி அளவினையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

  * கூர்ந்து கவனித்து செயல்படுவது குறிப்பாக வயது கூடும் பொழுது ஏற்படும். வைட்டமின் டி குறைபாடு இத்தகு பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் மருத்துவர் இப்பரிசோதனை செய்து வைட்டமின் டி தேவைகளுக்கான மாத்திரைகள் அளிப்பார்.

  நல்ல சத்தான உணவினை முறையாக உண்டாலும் நான்கில் ஒருவருக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
  20-ம் நூற்றாண்டில் இருந்தே மனிதன் உடல் உழைப்பினை சிறிது சிறிதாக குறைத்து வருகின்றான். சைக்கிள், கார் என வளர்ந்து இன்று ஒரு கம்ப்யூட்டர் மூலம் உலகை வலம் வருகின்றான்.

  பன்னிரெண்டு மணிநேரம் கூட அமர்ந்தே இருக்கும் மனிதர்களுக்கு உடல் அசைவுகள், நடை இவை மிகக்குறையும். ஒரே காரணத்தினால் அவர்கள் ஆயுளைக் கூட அதிகம் குறைத்துக் கொள்கின்றனர் என்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

  மேஜை முன்னாடி வேலை என்றாலும் நின்று செய்ய பழகுங்கள். நான் காலையில் ஒரு மணிநேரம் நடக்கின்றேன், உடற்பயிற்சி செய்கின்றேன் என்று சொல்லி மீதி நேரம் அமர்ந்தே வேலை செய்வது உடலை வெகுவாய் பாதிக்கின்றது.

  ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை 250 அடிகள் நடக்க வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 2 நிமிடங்களாவது எழுந்து நிற்கவேண்டும். நிற்பதும், நடப்பதும் உடல், மன சக்தியினை கூட்டும். உடல் செயல் பாட்டுத்திறனைக் கூட்டும். மூட்டுகளை இயல்பாய் செயல்பட வைக்கும். புற்றுநோய் தாக்குதலை குறைக்கும். மன உளைச்சலை நீக்கும். இனி அலுவலகத்தில் எல்லோருடனும் நடந்துகொண்டே வேலை செய்வீர்களா?

  கைகள் வலுவடைகின்றன.
  வயிறு தசைகள் இறுக்கம் பெறுகின்றன.
  ஆரோக்கி யமான கால் மூட்டு கிடைக்கின்றது.
  கால்கள் பலம் பெறுகின்றன.

  வைட்டமின் பி12-ன் சில செய்திகளைப் பற்றி அடிக்கடி கூற வேண்டிய அவசியம் மருத்துவ உலகில் உள்ளது. நல்ல சத்தான உணவினை முறையாக உண்டாலும் நான்கில் ஒருவருக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

  தண்ணீரில் கரையும் இந்த வைட்டமின் பி12 பல வருடங்கள் கூட கல்லீரலில் பாதுகாப்பாக சேகரித்து உடலை வைக்கின்றது. இது மிக அவசியம் என்பதால் இதனை பத்திரப்படுத்தி வைக்கும் இயற்கை உந்துதல் உடலுக்கு இருப்பது அதிசயத்தக்க ஒன்றே. இந்த வைட்டமின் பி12 நரம்பு மண்டலம், சீரண மண்டலம், ரத்தக் குழாய்கள், இனப் பெருக்கு மண்டலம் இவை அனைத்திற்கும் மிக முக்கியமானது.

  * ஹார்மோன்  சுரப்புகளை சீர் செய்யும்.
  * நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டும்.
  * மாவுச்சத்தினை குளூகோசாக மாற்றும்.
  * புரதம் உடலில் ஏற்று சீராக செயல்பட உதவும்.

   * பொதுவில் சைவ உணவு உடட்கொள்பவர்களுக்கு பி12 குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இவர்கள் மருத்துவ  ஆலோசனைப்படி பி12 சத்து மாத்திரைகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். வயது கூடும் பொழுது பி12 சக்தியை உணவிலிருந்து உரிஞ்சு சத்து குறையும், ஏனெனில் வயிற்றில் ஆசிட் சுரக்கும் தன்மை குறையும். பொதுவில் ரத்த சோகை, கை கால்களில் குறுகுறுப்பு.

  சோர்வு, மலச்சிக்கல், கண் பார்வை குறைதல், மன நலமின்மை, மறதி, நரம்பு பிரச்சினைகள் இவை பி12 குறைபாட்டின் அறிகுறிகளாக வெளிப்படும்.

  உங்கள் மூளையினை சுறுசுறுப்பாக வைக்கின்றது?
  * சக்தி * புரதம் * கார்பன் டை ஆக்சைட்

  உங்கள் உணவினை முழுமையாய் செரிக்க உதவுவது எது?
  * வயிறு மட்டுமே * சீரண மண்டலம் * மூளை

  ஜீரண மண்டலத்தில் உள்ள ஏதாவது மூன்று உறுப்புகளின் பெயர் சொல்லுங்களேன் ?
  உங்கள் சருமம், நகம், முடி, சதை, உள் உறுப்பு, மூளை எவற்றிலுமே புரதம் இல்லை.

  * உண்மை * தவறு
  வைட்டமின் டி யினைக் கூறும் மற்றொரு பெயர் என்ன?

  * தூக்க வைட்டமின் * சூரிய ஒளி வைட்டமின்

  நம்மை வேலை செய்ய ஏதுவாக்குகின்றது எது?
  * சக்தி * ஜீரண உறுப்புகள் * நுரையீரல்

  உணவில் உள்ள இதுதான் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது?
  * புரதம் * நார் சத்து * கொழுப்பு சத்து
  பெண்கள் மாதவிடாய் காலத்தில் வைட்டமின் சி, இரும்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவை அதிக ரத்த இழப்பு, திரவ இழப்புகளை ஈடு செய்யும்.
  பெண்கள் மாதவிடாய் காலத்தில் வைட்டமின் சி, இரும்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவை அதிக ரத்த இழப்பு, திரவ இழப்புகளை ஈடு செய்யும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் துணை புரியும்.

  அதிக வலி, தசைப் பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணமாகவும் அமையும். முளைகட்டிய தானியங்கள், கீரை, வெல்லம், பழங்கள், நட்ஸ்கள், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். சமையலில் மஞ்சள் பொடி, இஞ்சி, சீரகம், லவங்கப்பட்டை போன்றவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  ஒருசில வகை உணவுகளை மாத விடாய் காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.

  காபி பிரியர்கள் அதனை தவிர்ப்பது அவசியமானது. அது ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்திவிடும். அதனால் இதயத்துடிப்பும் அதிகரிக்கும். வீண் டென்ஷன், கவலை போன்ற பாதிப்புகள் உருவாக்கும். காபிக்கு பதிலாக கிரீன் டீ, தக்காளி, கேரட் ஜூஸ் அல்லது சூப் பருகலாம்.

  பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், பன்றி இறைச்சி, ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக காய்கறி சாலட், கஞ்சி போன்றவற்றை சாப்பிடலாம். வெளி உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.

  கொழுப்பு நிறைந்த உணவுகள், பர்கர்கள், கிரீம் சார்ந்த இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். மாதவிடாய் நாட்களில் தவறான உணவுகளை சாப்பிடுவது நீரிழப்பு, சரும வறட்சி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக கோதுமை ரொட்டி, சால்மன் மீன்கள், பருப்பு குழம்பு வகைகளை சாப்பிடலாம்.

  பால், பாலாடை கட்டி போன்ற பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக மோர் பருகலாம்.

  நொறுக்கு தீனிகள், பிஸ்கட், சிப்ஸ் போன்ற வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றில் கொழுப்பு அதிகமாக இருக்கும். அவை ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகப்படுத்தி மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு பதிலாக கேரட், வெள்ளரிக்காய்கள் சாப்பிடலாம்.

  ரொட்டி, பீட்சா போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். அவை மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். செரிமான செயல்பாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

  பதப்படுத்தப்பட்ட பவுடர்களில் தயாராகும் சூப்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவற்றுள் உப்பு அதிகமாக இருக்கும். அதற்கு பதிலாக தயிரை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  நீண்ட நேர வேலை, உறவுகளுக்குள் ஏற்படும் மனஸ்தாபம் உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் மன அழுத்த பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது.
  மன அழுத்தத்தில் இருந்து விடுபட சாப்பிடும் உணவுக்கும் பங்கு இருக்கிறது. நீண்ட நேர வேலை, உறவுகளுக்குள் ஏற்படும் மனஸ்தாபம் உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் மன அழுத்த பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது. மன அழுத்தத்தின் காரணமாக கார்டிசால் ஹார்மோன்களின் உற்பத்தியும் அதிகமாகி பாதிப்பை அதிகப்படுத்தி விடும்.

  அதிலிருந்து விடுபட சாப்பிடும் உணவுக்கும் பங்கு இருக்கிறது. வைட்டமின் சி, கார்டிசால் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆதலால் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தத்தை போக்கலாம்.

  * புளூ பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி பழ வகைகள் வைட்டமின் சி அதிகம் நிரம்பப்பெற்றவை. அவற்றுக்கு மன நிலையை மேம்படுத்தும் சக்தி இருக்கிறது. மன அழுத்தத்தை அதிகப்படுத்தும் கார்டிசால் ஹார்மோனுக்கு எதிராக போராடி இயல்பு நிலைக்கு திரும்ப உதவும். அவற்றை சாலட்டுகளிலோ, இனிப்பு பலகாரங்களிலோ சேர்த்து சாப்பிடலாம்.  * தக்காளி பழங்களில் வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் அதிகம் இருக்கின்றன. அவை மன அழுத்தம் மட்டுமின்றி புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படும் தன்மை கொண்டவை. அவற்றை சாண்ட்விச்களிலோ, சாலட்டுகளிலோ, புதினாவுடன் சேர்த்து தக்காளி ஜூஸாகவோ பருகலாம்.

  * தக்காளி, பெர்ரி பழங்களை விட சிவப்பு முள்ளங்கியில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளடங்கி இருக்கிறது. அதனை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

  * முலாம் பழமும் அதிக அளவில் வைட்டமின் சி சத்து கொண்டது. ஒரு நாளைக்கு தேவைப்படும் வைட்டமின் சி சத்தில் 90 சதவீதத்தை இதன் மூலமே பெற்றுவிடமுடியும்.