search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deworming"

    • புல் வளர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • முகாமில் கிடோரி கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு சிறந்த கலப்பின கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், அக்கரைவட்டம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் நோயுற்ற கால்நடைகளுக்கு மருத்துவம் சினை பெறாத கால்நடைகளுக்கு மலடு நீக்கி சிகிச்சை, பருவத்தில் உள்ள பசு எருமைகளுக்கு இலவசமாக செயற்கை முறை கருவூட்டல், ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு குடல் புழு நீக்கம், மேலும் உற்பத்தி திறன் அதிகரிக்க கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம், தஞ்சாவூர் கால்நடை பெரும்பாக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி திட்டத்தினால் புல் வளர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் முகாமில் கிடோரி கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு சிறந்த கலப்பின கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இம் மருத்துவ முகாமி ல்கால்நடை ஆய்வாளர் செல்வேந்திரன், கால்நடை மருத்துவர்கள் கலியபெ ருமாள், தினேஷ்குமார், ஆகியோர் கொண்ட குழுவினர் ஆலோசனை வழங்கினர் மேலும் கால்நடை மருத்துவ முகாமி ல் காண ஏற்பா டுகளை அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணை யன் சிறப்பாக செய்திருந்தார். முகாமில் அக்கரைவட்டம் கிராமம் அதனை சுற்றியுள்ள கிராம சேர்ந்தவர்கள் தனது கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்றனர்.

    • ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
    • சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் ஊராட்சி சகடமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    உதவி இயக்குனர் அசன் இப்ராகிம் முன்னிலை வகித்தார்.

    கால்நடை உதவி மருத்துவர் பிரியதர்ஷினி வரவேற்றார்.

    முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும்எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள்- ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    இதில் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் உதவி டாக்டா்கள் முத்துகுமரன், ராதா, சிவப்பிரியா, ஸ்ரீதர் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவர்களுக்கு குடற்புழுநீக்க மாத்திரைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களையும் மாணவ- மாணவிகளுக்கு அவர் வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சியாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு சிறப்பு முகாம் நடந்தது.

    முகாமை தொடங்கி வைத்து மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களையும் மாணவ- மாணவிகளுக்கு அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ- மாணவிகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்க அறிவுறுத்தி உள்ளார்.

    மீனாட்சியாபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் தேவியாற்றியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் கிராமப்புற மாணவ- மாணவிகளின் அறிவாற்றலை பெருக்க சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. அதனை மாணவ- மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    இதில் டாக்டர் கருணாகரபிரபு, பள்ளி தாளாளர் பவுன்ராஜ், தலைமை ஆசிரியர் பாஸ்கர், மாவட்ட தி.மு.க. மீனவரணி அமைப்பாளர் நவமணி, கிளை செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் ஆத்மா திட்டத்தின் வாயிலாக கரையாம்புத்தூர் மற்றும் அதற்குட்பட்ட கடுவனூர் வருவாய் கிராமத்தில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • கால்நடை மருத்துவர் செல்லமுத்து கால்நடை–களுக்கு குடற்புழு நீக்கம் சிகிச்சை அளித்து, பால் உற்பத்தி குறித்து ஆலோசனை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் ஆத்மா திட்டத்தின் வாயிலாக கரையாம்புத்தூர் மற்றும் அதற்குட்பட்ட கடுவனூர் வருவாய் கிராமத்தில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    முகாமுக்கு வேளாண் அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். முன்னதாக துணை வேளாண் அலுவலர் கங்காதுரை கால்நடை விவசாயிகளை வரவேற்றார்.

    கால்நடை மருத்துவர் செல்லமுத்து கால்நடை–களுக்கு குடற்புழு நீக்கம் சிகிச்சை அளித்து, பால் உற்பத்தி குறித்து ஆலோசனை வழங்கினார்.முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

    முகாமில் விவசாயி–களுக்கு கறவை மாடுகளுக்கான தாது உப்பு கலவை இலவசமாக வழங்கப்பட்டது விழாவின் ஏற்பாடுகளை செயல் விளக்க உதவியாளர் பத்மநாபன் செய்திருந்தார். ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    ×