search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thangapandian MLA"

    • ஒரு மாத சம்பளத்தை கல்விக்காக தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • 82- வது மாத ஊதியத்திலிருந்து (ரூ.1 லட்சத்து 5 ஆயிரம்) வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் தனது 82- வது மாத ஊதியத்திலிருந்து (ரூ.1 லட்சத்து 5 ஆயிரம்) சேத்தூர் பேரூராட்சியைச் சேர்ந்த வித்யா, முத்துச்செல்வி, மஞ்சுளா, ராஜபாளை யத்தை சேர்ந்த ஐஸ்வர்யா, சரண்யா மற்றும் சொக்க நாதன்புத்தூர் ஊராட்சியைச்சேர்ந்த திவ்யா ஆகிய 6 மாணவிகளுக்கு மருத்துவம், வழக்கறிஞர், ஆசிரியர் படிப்பு போன்ற மேற் படிப்பை தொடர ஏதுவாக கல்வி உதவித்தொகையாக வழங்க முடிவு செய்தார்.

    அதன்படி கல்வி உதவித் தொகையை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் மாணவ, மாணவி களுக்கு வழங்கினர். அப்போது அவர்கள் கல்வியை சிறப்பாக பயின்று எதிர்காலத்தில் ஏழை-எளிய பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டனர். மேலும் கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொண்ட மாணவிகள் இரு வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், தேவதானம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • துணை சேர்மன் துரைகற்பகராஜ் மற்றும் டாக்டர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் சிங்கராஜ் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் தனது 3 மாத ஊதியத்தில் இருந்து 500 கர்ப்பிணிகளுக்கு 19 வகையான சீர்வரிசை பொருட்களை தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

    கருணாநிதி ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம், அரசு பஸ்களில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் வசதி, குடும்ப தலைவி களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகை என பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் தங்கலட்சுமி, பங்கஜம், ராஜபாளையம் மருத்துவ அலுவலர்கள் வரலட்சுமி, ரம்யா, உமாமகேஸ்வரி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட அணிகளின் அமைப்பாளர் கள் சுமதி ராமமூர்த்தி, கல்பனா குழந்தை வேலு, சேகர், நவமணி, சொர்ணம், துணை சேர்மன் துரைகற்பக ராஜ் மற்றும் டாக்டர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் நகர் பகுதியில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகர் 9,10,11 ஆகிய வார்டு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்மந்தபுரம் சீதக்காதி தெருவில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த பணிக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் முன்னிலையில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது.

    மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ராஜபாளையம் நகர, கிராமப்பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 10 நியாய விலைக்கடைகள் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. அதில் சம்மந்தபுரம் பகுதி நியாய விலைக் கடை அமைக்க பூமி பூஜை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்வில் நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விபத்தில் காயமடைந்த குழந்தையின் மேல் சிகிச்சைக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உதவினார்.
    • குடும்பத்துடன் வந்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மாடசாமிகோவில் தெருவில் நீதி மன்றம் அருகே உள்ள சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு பவித்ரா லட்சுமி, ரன்விதா, ராஜேஷ், கார்த்திகா ஆகியோர் குடும்பத்துடன் வந்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்தனர்.

    அவர்கள் கூறுகையில், 5 மாதங்களுக்கு முன்பு சிவகாசி செல்லும்போது குடும்பத்துடன் விபத்துக்கு ள்ளாகி சிகிச்சை பெற்றோம். தற்போது குழந்தையின் மேல்சிகிச்சைக்காக பண உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதைகேட்ட தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. உடனடியாக தனது சொந்த செலவில் ரூ.15 ஆயிரத்தை வழங்கியதுடன் டாக்டரிடம் பேசி உயர்ரக மருத்துவ சிகிச்சையை குழந்தைக்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

    தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, வார்டு செயலாளர்கள் குழந்தைவேலு, இக்சாஸ், மாயாவி, மதன் ராம்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பள்ளி மாணவர்களுக்கு குடற்புழுநீக்க மாத்திரைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களையும் மாணவ- மாணவிகளுக்கு அவர் வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சியாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு சிறப்பு முகாம் நடந்தது.

    முகாமை தொடங்கி வைத்து மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களையும் மாணவ- மாணவிகளுக்கு அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ- மாணவிகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்க அறிவுறுத்தி உள்ளார்.

    மீனாட்சியாபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் தேவியாற்றியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் கிராமப்புற மாணவ- மாணவிகளின் அறிவாற்றலை பெருக்க சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. அதனை மாணவ- மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    இதில் டாக்டர் கருணாகரபிரபு, பள்ளி தாளாளர் பவுன்ராஜ், தலைமை ஆசிரியர் பாஸ்கர், மாவட்ட தி.மு.க. மீனவரணி அமைப்பாளர் நவமணி, கிளை செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.5.45 கோடியில் சாலை பணிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தாமதமின்றி விரைவில் பணியை முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தளவாய்புரம் முதல் இனாம்கோவில்பட்டி சாலையில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில் 2 பாலங்களுடன் சேர்த்து 4 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.

    இந்த பணிக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தாமதமின்றி விரைவில் பணியை முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் கூறினார்.

    இதில் பொறியாளர் முத்துமுனிகுமாரி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு வந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியது.
    • அப்போது அந்த வழியாக வந்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. விபத்து நடந்ததை அறிந்ததும் தனது காரை விட்டு இறங்கி மீட்டு பணியில் ஈடுபட்டார்.

    ராஜபாளையம்

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு ஒரு அரசு பஸ், 42 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு வந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியது.

    இதில் பஸ்சின் முன்பக்க அச்சு முறிந்து சக்கரங்கள் கழன்று ஓடியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 16 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். அதே வேளையில் பழங்கள் ஏற்றி வந்த ஒரு சரக்கு வேன் மோதி பஸ்சின் பின்புறம் புகுந்தது.

    அப்போது அந்த வழியாக வந்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. விபத்து நடந்ததை அறிந்ததும் தனது காரை விட்டு இறங்கி மீட்டு பணியில் ஈடுபட்டார். அவருடன் நகரசெயலாளர் ராமமூர்த்தி மற்றும் ஆதரவாளர்கள் அவருக்கு உதவி புரிந்தனர்.

    விபத்தில் காயமடைந்த வேன் டிரைவர் திருமலைக்குமார் (வயது 45), தென்காசி நைனாபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (40) ஆகிய இருவரை ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் 1 மணி நேரம் போராடி மீட்டனர்.

    மீட்கப்பட்ட இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த அரசு பஸ் டிரைவர் வேல்முருகன் (55) மற்றும் பயணிகள் 21 பேர் மீட்கப்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தனது ஒருமாத சம்பளத்தை வழங்கினார்.

    ராஜபாளையம்:

    தி.மு.க. செயல் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் தலைவராக பொறுப் பேற்றார். இதையொட்டி ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தனது தொகுதியில் உள்ள சாரோன் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்பு பள்ளிக்கு தனது 27-வது மாத ஊதியமான 55 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைவரானதை கொண்டாடும் வகையில் இந்த உதவியை வழங்கியுள்ளேன்.

    மு.க.ஸ்டாலின் முதல்வரானவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களையும், ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்துவார்.

    மேலும் மாணவர்களுக்கு உணவு வழங்க அரிசி வழங்கப்படும். விரைவில் மாவட்டச் செயலாளர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அனுமதி பெற்று ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தங்கசாமி, நகரச் செயலாளர் ராம மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல் முருகன், ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×