கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கிய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.

கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். துணை சேர்மன் துரைகற்பகராஜ் மற்றும் டாக்டர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கிய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.
Published on

ராஜபாளையம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் சிங்கராஜ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் தனது 3 மாத ஊதியத்தில் இருந்து 500 கர்ப்பிணிகளுக்கு 19 வகையான சீர்வரிசை பொருட்களை தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

கருணாநிதி ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம், அரசு பஸ்களில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் வசதி, குடும்ப தலைவி களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகை என பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்.

இவ்வாறு அவர் பேசி னார்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் தங்கலட்சுமி, பங்கஜம், ராஜபாளையம் மருத்துவ அலுவலர்கள் வரலட்சுமி, ரம்யா, உமாமகேஸ்வரி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட அணிகளின் அமைப்பாளர் கள் சுமதி ராமமூர்த்தி, கல்பனா குழந்தை வேலு, சேகர், நவமணி, சொர்ணம், துணை சேர்மன் துரைகற்பக ராஜ் மற்றும் டாக்டர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com