குடற்புழுநீக்க மாத்திரைகள்: தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்

பள்ளி மாணவர்களுக்கு குடற்புழுநீக்க மாத்திரைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களையும் மாணவ- மாணவிகளுக்கு அவர் வழங்கினார்.
மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சியாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு சிறப்பு முகாம் நடந்தது.

முகாமை தொடங்கி வைத்து மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களையும் மாணவ- மாணவிகளுக்கு அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ- மாணவிகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்க அறிவுறுத்தி உள்ளார்.

மீனாட்சியாபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் தேவியாற்றியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் கிராமப்புற மாணவ- மாணவிகளின் அறிவாற்றலை பெருக்க சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. அதனை மாணவ- மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

இதில் டாக்டர் கருணாகரபிரபு, பள்ளி தாளாளர் பவுன்ராஜ், தலைமை ஆசிரியர் பாஸ்கர், மாவட்ட தி.மு.க. மீனவரணி அமைப்பாளர் நவமணி, கிளை செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com