ரூ.5.45 கோடியில் சாலை பணிகள்

ரூ.5.45 கோடியில் சாலை பணிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தாமதமின்றி விரைவில் பணியை முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் கூறினார்.
ரூ.5.45 கோடியில் சாலை பணிகள்
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் தொகுதியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தளவாய்புரம் முதல் இனாம்கோவில்பட்டி சாலையில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில் 2 பாலங்களுடன் சேர்த்து 4 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.

இந்த பணிக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தாமதமின்றி விரைவில் பணியை முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் கூறினார்.

இதில் பொறியாளர் முத்துமுனிகுமாரி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com