என் மலர்
நீங்கள் தேடியது "நெல்லிக்காய்"
- ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தார் அதியமான்
- சாறு, பொடி, சட்னி என எந்த வடிவத்தில் எடுத்துக்கொண்டாலும் நெல்லிக்காய் நன்மை பயக்கும்.
'ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தார் அதியமான்' என நாம் படித்திருப்போம். உலகில் எவ்வளவோ பொருட்கள் இருக்கும்போது நெல்லிக்கனியை ஏன் கொடுத்தார்? என பலரும் யோசித்திருப்போம். அதற்கு காரணம் நெல்லிக்கனியில் இருக்கும் மருத்துவக் குணங்கள். ஔவை நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதற்காக கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி அவருக்கு நெல்லிக்கனியை கொடுத்தார். அவ்வளவு மருத்துவக்குணமிக்கதா நெல்லிக்காய் என நாம் வியப்போம். ஆம், நெல்லிக்காய் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. அதை எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து காண்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி
கொய்யா, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களைவிட நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுகிறது. அதே நேரத்தில் செல்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
இயற்கை நச்சு நீக்கி
நெல்லிக்காய் உடலில் நச்சு நீக்க செயல்முறையை ஆதரிக்கிறது. இரத்தத்தை சுத்திகரிக்கிறது. உயிர்சக்தியை மேம்படுத்துகிறது.
முதிர்வை தடுக்கிறது
நெல்லிக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இதனால் தோல் மற்றும் உறுப்புகளின் வயதாகும் தன்மையை தடுக்க முக்கிய பங்காற்றுகிறது.
இதய ஆரோக்கியம்
கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் மாரடைப்பு போன்ற பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கிறது
நெல்லிக்காய் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்தக் கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது.

ஜூஸ், பொடி, சட்னி என அனைத்து வடிவத்திலும் நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளலாம்
பசியை கட்டுப்படுத்தும்
கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால், நெல்லிக்காய் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால்தான் எடை குறைக்க விரும்புவர்கள் பலரும் நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக்கொள்வார்கள்.
நினைவாற்றலை அதிகரிக்கிறது
நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளை செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. கூர்மையான நினைவாற்றலை வளர்க்க உதவுகின்றன.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், எலும்புகளை வலுப்படுத்த உதவும். இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளையும் தடுக்க உதவும்.
சரும ஆரோக்கியம்
நெல்லிக்காயின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கின்றன, பிக்மெண்டேஷனை குறைக்கின்றன, மேலும் சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பை அளிக்கின்றன.
முடி பராமரிப்பு
பல தலைமுறைகளாக, இந்திய முடி பராமரிப்பில் நெல்லிக்காய் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. வேர்களை வலுப்படுத்துதல், முன்கூட்டியே நரைப்பதைத் தடுத்தல், முடிக்கு பளபளப்பைச் சேர்த்தல் என முடி பராமரிப்பிற்கு முக்கிய பங்காற்றுகிறது நெல்லிக்காய். இதுபோல இன்னும் பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. சாறு, பொடி, நெல்லிக்காய் சட்னி, இல்லை ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் அப்படியே சாப்பிடுகிறேன் என்றாலும், எந்த வடிவத்தில் எடுத்துகொண்டாலும் பலனளிக்கும்.
- பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும்.
- ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது.
பெண்கள் கூந்தலை பராமரிக்க நெல்லிக்காய், கற்றாழை இரண்டையுமே பயன்படுத்துவார்கள். அதிலும் முடி உதிராமல் நீளமாக வளர வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கும். முடி வளர்ச்சிக்கு இந்த இரண்டில் எதனை பயன்படுத்துவது சிறந்தது? என்ற குழப்பமும் சிலரிடம் இருக்கும். அதற்கு சரியான தீர்வு எது என்று பார்ப்போமா?
நெல்லிக்காய்
இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடென்டுகள், இரும்பு மட்டுமின்றி உச்சந்தலை மற்றும் முடியின் மயிர்க்கால்களுக்கு பலம் சேர்க்கும் பொருட்களும் நிரம்பியுள்ளன. அடிப்படையில் நெல்லிக்காய் முடியின் வேர்க்கால்களுக்கு புரதம்போல் ஊட்டச்சத்து மதிப்புடன் செயல்பட்டு அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது.
பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும். உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். விரைவில் முடி நரைப்பதை குறைக்கும். நெல்லிக்காயை எண்ணெய்யாக தலைக்கு பயன்படுத்தலாம். நெல்லிக்காய் பொடியையும் தலையில் தேய்த்து வரலாம். நெல்லிக்காயை சாறாக பருகியும் வரலாம். இப்படி நெல்லிக்காயை ஏதாவதொரு வகையில் பயன்படுத்தி வந்தால் கடுமையாக முடி உதிர்வது தடுக்கப்படும். தலைமுடி மீண்டும் உயிர்ப்புடன் காட்சியளிக்க உதவும்.
கற்றாழை
இது மென்மையானது, குளிர்ச்சியானது. உச்சந்தலைக்கு பயன்படுத்த ஏதுவானது. கற்றாழையில் வைட்டமின்களும், நொதிகளும் நிறைந்துள்ளன. உச்சந்தலை ஈரப்பதமின்றி வறட்சியாக காட்சி அளிக்கிறதா? உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுகிறதா? கற்றாழை இதற்கு சிறந்த தேர்வாக அமையும். இது ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது. தலைமுடி சரியாக வளர்வதற்கு ஏற்ற சூழலையும் அளிக்கிறது. கற்றாழையை செடியில் இருந்து வெட்டி எடுத்து, அதன் உள்பகுதி சதையை வெளியே எடுத்து நேரடியாக தலையில் தேய்க்கலாம். கடைகளில் கிடைக்கும் தரமான கற்றாழை ஜெல்லையும் உபயோகிக்கலாம்.
எதனை பயன்படுத்தலாம்?
நெல்லிக்காய், கற்றாழை இவை இரண்டுமே வெவ்வேறு வழிகளில் முடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. நெல்லிக்காயை பொறுத்தவரை முடி உதிர்வை தடுக்கவும், முடியை வலுவாக்கவும், முடி அடர்த்திக்கும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. கற்றாழை உச்சந்தலையை தூய்மையாக பராமரிக்கவும், குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவிடக்கூடியது. முடி வளர்வதற்கு சாதகமான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கக்கூடியது.
உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை இருந்தாலோ, முடி அடர்த்தி குறைந்து மெல்லியதாக இருந்தாலோ நெல்லிக்காய் சிறந்த தீர்வாக அமையும். உச்சந்தலை வறண்டு அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால் கற்றாழை கைகொடுக்கும்.
- முடி லேசாக உதிர்ந்தால் கூட பலருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தும்.
- ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால் தூசுகள் பட்டு மிகவும் பாதிப்படைகிறது.
தலை முடி என்றாலே அனைவருக்கும் அது அழகு சேர்க்கும். ஆண்கள் என்றாலும் பெண்கள் என்றாலும் முடி மிக முக்கியமான ஒன்றாக கருதுவார்கள். இது மிகவும் இயல்பான ஒன்றே. முடி லேசாக உதிர்ந்தால் கூட பலருக்கு அது மன வருத்தத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக பெண்களை காட்டிலும் இன்றளவு ஆண்களுக்கே முடியை பற்றி கவலைப்படும் பிரச்சினை இருக்கிறது. ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால் அவர்களின் முடிகள் தூசுகள் பட்டு மிகவும் பாதிப்படைந்து விடுகிறது. இதற்கு தீர்வாக எண்ணற்ற மருந்துகளையெல்லாம் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? இனி அந்த கவலை வேண்டாம்.
அந்த காலத்தில் முனிவர்கள் பின்பற்றிய பல்வேறு ஆயுர்வேத முறைகள் முடி சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் அற்புதமான தீர்வு தருகிறது. பொதுவாக ஆயர்வேதம் என்றாலே முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்களாகவே அதில் நாம் பயன்படுத்துவோம். அந்த வகையில் இந்த பதிவில் ஆயர்வேத முறையை எவ்வாறு வழுக்கை பிரச்சினைக்கு பயன்படுத்தலாம் என்பதை இனி பார்ப்போம்.

1. கரிசலாங்கண்ணி (பிரிங்கராஜ்)
`மூலிகைகளின் அரசன்' என்றே அழைக்கப்படும் இந்த பிரிங்கராஜ் பல மருத்துவ குணங்களை கொண்டது. வெறும் பெயரில் மட்டும் இது ராஜாவாக இல்லை. வழுக்கை பிரச்சினையை தீர்ப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் வழுக்கை தலையில் முடி வளர, 5 டேபிள்ஸ்பூன் பிரிங்கராஜ் பவ்டருடன் 2 டேபிள்ஸ்பூன் கற்றாழை சாற்றை கலந்து தலையில் தடவுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து சிறிதளவு ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசினால் சொட்டை இருந்த இடத்தில் முடி வளரும். இந்த ஆயர்வேத முறையை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால் நல்ல பலனை தரும்.

2. அஸ்வகந்தா
பல நன்மைகளை தனக்குள்ளே வைத்திருக்கும் ஒரு அற்புத மூலிகை இந்த அஸ்வகந்தா. ஹார்மோன் பிரச்சினையினால் முடி உதிரும் பலருக்கும் இது நல்ல நண்பன் போல உதவும். 3 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 3 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றை எடுத்து, தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின் 30 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் வழுக்கை தலை, முடிகளுடன் காணப்படும்.

3. வெந்தயம்
நம்ம வீட்டு அஞ்சறை பெட்டியில் இருக்கும் இந்த சிறிய விதைகள்தான் உங்கள் சொட்டை தலைக்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறது. முடி வளர்ச்சிக்கு தேவையான புரத சத்து இதில் அதிகம் உள்ளதால் முடியின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். அத்துடன் ஹார்மோன்களை சமநிலையில் வைத்து முடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும். 3 டீஸ்பூன் வெந்தய பொடியை எடுத்து கொண்டு அதனுடன் பாலை கலக்கவும். இந்த கலவையை தலையில் வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தடவினாலே சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரும்.

4. பிராமி
முடியின் வளர்ச்சிக்கு வேரில் இருந்து நல்ல ஆரோக்கியத்தை இந்த மூலிகைகள் தருகிறது. முடியின் போஷாக்கை அதிகரிக்கவும், பொடுகு தொல்லையை நீக்கவும் இது நன்கு பயன்படும். 2 டீஸ்பூன் பிராமி பவுடர், 2 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர், 1/2 கப் யோகர்ட் ஆகியவற்றை நன்றாக கலந்து முடியின் அடி வேரில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்று, வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.

5. சிகைக்காய்
தலை முடிக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்க கூடியது இந்த சிகைக்காய். இன்று நாம் பயன்படுத்தும் ஷாம்பூக்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இனி சிகைக்காய் பயன்படுத்தி பாருங்கள். எந்தவித முடி சார்ந்த பிரச்சினைகளும் உங்களுக்கு வராது. 6 டீஸ்பூன் சிகைக்காய் பவ்டருடன் 2 கப் நீர் சேர்த்து தலையில் தடவுங்கள். பின் 10 நிமிடம் கழித்து தலையை அலசவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர செய்யும். மேலும் சிகைக்காயை நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்களுடனும் சேர்த்து தடவலாம்.

6. நெல்லிக்காய்
ஆயர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் மிக முதன்மையான இடத்தில் உள்ளது. இது உடலில் உள்ள பலவித நோய்களுக்கும் நல்ல தீர்வை தர வல்லது. 5 டீஸ்பூன் நெல்லிக்காய் பவ்டரை நீரில் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். பிறகு அதனை வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து வந்தால் முடிகள் மீண்டும் வளர செய்யும். அத்துடன் தலையில் உள்ள செல்களை புத்துணர்வூட்டி முடி உதிர்வை தடுக்கும்.

7. வேப்பிலை
மூலிகைகளில் அதிக வீரியம் கொண்டது இந்த வேப்பிலைதான். இது ஒரு நல்ல கிருமி நாசினியும்கூட. அடிக்கடி இதனை தலையில் தடவி வந்தால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் முடியின் வளர்ச்சியும் கூடும். தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவற்றை நீக்கும் சக்தி இந்த வேப்பிலைக்கு உள்ளது. கை நிறைய வேப்பிலையை எடுத்து கொண்டு அதனை 2 கப் நீரில் மிதமான சூட்டில் கொதிக்கவிட்டு 15 நிமிடம் கழித்து இறக்கவும். பிறகு குளிர வைத்து வடிகட்டி கொண்டு அதனை தலைக்கு அலசினால் நல்ல பலனை தரும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை தீர்ந்து, வழுக்கை இன்றி இருக்கலாம்.

8. ஆயுர்வேத எண்ணெய்
தேங்காய் எண்ணெய், பிரிக்கராஜ் எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொரு டீஸ்பூன் சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு குளிர வைத்து தலைக்கு தடவி மசாஜ் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும். இந்த ஆயர்வேத முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை குறைந்து, வழுக்கையில் முடி வளரும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
- தீக்காயங்களுக்கு தேன் சிறந்த நிவாரணமாகும்.
- முடி உதிர்வு பிரச்சினைக்கு நெல்லிக்காய் சிறந்த தீர்வாகும்.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு பராமரிப்புப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. நவீனத்துவத்தை விரும்பும் இளம்பெண்களும் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இயற்கையான பொருட்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் பல தலைமுறைகளாக நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான அழகு பராமரிப்பு பொருட்களும், அவற்றை உபயோகிக்கும் முறைகளும் இதோ...

வேப்பிலை:
முகப்பரு பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை ஆறவைத்து மிதமான சூட்டுக்கு கொண்டு வரவும். அந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து முகம் முழுவதும் மென்மையாக அழுத்தி பூச வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நாளடைவில் முகப்பருக்கள் நீங்கும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் வேப்பிலை பொடியுடன் திராட்சை விதை எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இதன்மூலம் சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.
பொடுகு மற்றும் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வேப்ப எண்ணெய்யை தலை முழுவதும் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.

தேன்:
தீக்காயங்களுக்கு தேன் சிறந்த நிவாரணமாகும். தீப்புண்களில் தேனை தொடர்ச்சியாக பூசிவந்தால் காயம் விரைவாக ஆறுவதோடு, காயத்தால் ஏற்படும் வடுவும் மறையும்.
சிறிதளவு தேனோடு, காய்ச்சிய பாலேடு, சந்தனம், கடலைமாவு, ரோஜா எண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும், இந்த 'ஃபேஸ் பேக்' முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பொலிவாக்கும்.

நெல்லிக்காய்:
முடி உதிர்வு பிரச்சினையால் சிரமப்படுபவர்களுக்கு நெல்லிக்காய் சிறந்த தீர்வாகும். 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் சாறுடன், சமஅளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை தலையில் பூசி சிறிதுநேரம் கழித்து குளிக்கவும்.
காய்ந்த நெல்லிக்காய், புங்கங்கொட்டை, சீயக்காய் இவை மூன்றையும் தேவையான அளவு எடுத்து ஓர் இரும்பு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து அந்த கலவையை இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அந்த சாற்றை வடிகட்டி தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.

மஞ்சள்:
ஸ்டிரெச் மார்க்குகள் இருப்பவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன், கடலைமாவு மற்றும் தயிர் கலந்து அந்த பகுதியில் பூச வேண்டும். இவ்வாறு தினமும் செய்துவந்தால் நாளடைவில் ஸ்டிரெச் மார்க்குகள் சருமத்தின் நிறத்திலேயே மாற ஆரம்பிக்கும்.
சிறிதளவு மஞ்சள்தூளுடன் அரிசிமாவு, தக்காளிச்சாறு, காய்ச்சாத பால் கலந்து முகத்தில் பூச வேண்டும். இது நன்றாக உலர்ந்தவுடன் முகத்தை சுத்தப் படுத்த வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு சிரமப்படுபவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன், கடலைமாவு மற்றும் தயிர் கலந்து அந்த பகுதியில் பூசவும். இவ்வாறு தினமும் செய்துவந்தால் நாளடைவில் ஸ்டிரெச் சருமத்தின் நிறத்திலேயே மாற ஆரம்பிக்கும்.
சிறிதளவு மஞ்சள் தூளுடன் அரிசிமாவு, தக்காளிச்சாறு, காய்ச்சாத பால் கலந்து முகத்தில் பூசவும். இது நன்றாக உலர்ந்தவுடன் முகத்தை சுத்தப்படுத்தவும். இவ்வாறு செய்துவந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு சிரமப்படுபவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பாதங்களில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் பாதங்களைக் கழுவ வேண்டும்.
- ஒரு வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்கு பாகு எடுத்துக் கொள்ளவும்.
- இஞ்சியை தோல்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் - 400 கிராம்
இஞ்சி - 100 கிராம்
வெல்லம் - 400 கிராம்
எலக்காய் - 1/2 ஸ்பூன்
நெய் - 4 ஸ்பூன்

செய்முறை:
• ஒரு இட்லி பாத்திரத்தில் நெல்லிக்காய் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
• நெல்லிக்காய் நன்கு வெந்துவிட்டதா என்று பார்க்கவும். நெல்லிக்காயை லேசாக அழுத்தினால் வெந்துவிட்டதா என்று தெரியும்.
• இஞ்சியை தோல்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
• வேகவைத்த நெல்லிக்காய் மற்றும் இஞ்சி துண்டுகளை ஒரு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்கு பாகு எடுத்துக் கொள்ளவும்.
• பாகு எடுத்த வெல்லத்தில் அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய் இஞ்சி விழுதை சேர்த்து நல்ல கெட்டியான பதத்திற்கு கிளறவும்
• கிளறும் போது இடை இடையே நெய் சேர்க்கவும்.

• நெல்லிக்காய் இஞ்சி மரப்பா பதத்திற்கு வந்து விட்டதா என்று சரிப்பார்க்க உங்கள் கையில் லேசாக நெய் தொட்டு மிதமான சூடு இருக்கும் போது எடுத்து உருட்டி பார்க்கவும் நல்ல உருண்டை பதம் வந்துவிட்டால் நீங்கள் செய்த நெல்லிக்காய் இஞ்சி மரப்பா ரெடி என்று அர்த்தம்
• அப்படி இல்லையென்றால் மறுபடியும் ஒரு 5 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.
• பின்னர் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வடிவத்தில் உள்ள பாத்திரத்தில் மாற்றி உங்களுக்கு தேவையான வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
• இதோ சுவையான உடலுக்கு நல்ல ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் இஞ்சி மரப்பா ரெடி.
குறிப்பு: குழந்தைகளுக்கு இஞ்சியின் சுவை பிடிக்கவில்லை என்றால் இஞ்சிக்கு பதிலாக பாதாம் பருப்பு பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம்.






