என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "natural beauty care products"

    • முகத்தில் உள்ள தூசி, எண்ணெய் சுரப்பை அகற்றுவதற்கு பால் சிறந்த கிளென்சராக செயல்படும்.
    • பப்பாளி பழத்துடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

    இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், சருமத்தில் உண்டாகும் பருக்களை கட்டுப்படுத்துவதற்கும், சரும பராமரிப்புக்கும் அதிக நேரமும், பணமும் செலவிட முடியாத நிலைமை பலருக்கும் இருக்கிறது. பார்லர் பேஷியல், கிரீம்கள் போன்றவை பருக்களை நீக்கி சருமத்திற்கு உடனடி பொலிவை தந்தாலும், அது தற்காலிக நிவாரணமாகவே அமைகிறது.

    இதற்கு மாற்றாக, இயற்கை பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் 'நேச்சுரல் பேஷியல்' எனும் இயற்கை அழகு சிகிச்சை பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கும். சமையலறையிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து செய்யப்படும் இந்த பேஷியல், சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க உதவுவதோடு பருக்கள் வராமல் தடுப்பதற்கும் உதவும்.

    'நேச்சுரல் பேஷியல்' என்பது ரசாயனங்கள் இல்லாத, இயற்கை மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் முக அழகு பராமரிப்பு முறையாகும். இதில் பால், தேன், மஞ்சள், கடலைமாவு, கற்றாழை, ரோஜா நீர் உள்ளிட்ட இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குவதில் நல்ல பலனை அளிக்கின்றன. எவ்வாறு 'நேச்சுரல் பேஷியல்' செய்யலாம் என்று பார்ப்போம்.

    • முகத்தில் உள்ள தூசி, எண்ணெய் சுரப்பை அகற்றுவதற்கு பால் சிறந்த கிளென்சராக செயல்படும். காட்டன் துணியில் பாலை நனைத்து முகத்தை மெதுவாக துடைக்கவும். பால் சருமத்தை சுத்தம் செய்வதுடன், மென்மையும் அளிக்கும்.

    • வெந்நீரில் சிறிது வேப்பிலை அல்லது புதினா போட்டு ஆவி பிடிப்பது, முகத்தில் உள்ள துளைகளில் இருந்து அழுக்குகளை வெளியேற்ற உதவிடும். ஆவி பிடிப்பதற்கு சுமார் 5 நிமிடங்களே போதுமானது.

    • மசாஜ் செய்வது சருமத்தை உறுதியானதாக மாற்றும். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்யில் ஒன்றை விரல்களில் தடவி சருமத்தில் மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். இது முக சோர்வை குறைத்து, இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.

    • ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன் தேவையான அளவு பால் கலந்து குழைத்து முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்கும்.

    • தக்காளி சாறை காட்டன் துணியில் நனைத்து, முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலர விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். முகத்தில் எண்ணெய் சுரப்பு குறையும், சரும துளைகள் சுருங்கும்.

    • வெள்ளரிக்காய், தயிர் இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். வெயிலால் ஏற்பட்ட எரிச்சல் குறையும்.

    • பப்பாளி பழத்துடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். முகம் பிரகாசமாகவும், இளமையாகவும் தோன்றும். பப்பாளி இறந்த செல்களை இயற்கையாகவே அகற்றும் தன்மை உடையது.

    • காபி தூளுடன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் மென்மையாக தடவி 5 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது முகத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். காபி தூள் சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.

    • வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பின்னர் அதை அரைத்து முகத்தில் பூசி வந்தால் எண்ணெய் வடிதல் மற்றும் சரும அழுக்குகள் நீங்கும்.

    • 2 முதல் 3 கிராம்புகளை வெந்நீரில் ஊறவைத்து குளிர்ந்த பின்பு அந்த நீரை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவுவது, சருமத்தில் பருக்கள் வருவதை தடுக்கும்.

    இதோடு சேர்த்து பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள்:

    • தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

    • அன்றாடம் 3 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.

    • பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும்.

    • ரசாயனம் கலந்த சரும உபகரணங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    • 10 நிமிடங்கள் முடிக்கு மசாஜ் கொடுத்து, சுடுநீரில் முடியை கழுவவேண்டும்.
    • பேன் சீப்பை வைத்து சீவினாலே பொடுகுகள் அனைத்தும் கொட்டிவிடும்.

    உடல்நலனைவிட தற்போதெல்லாம் சரும நலனுக்கு மெனக்கெடுபவர்கள்தான் அதிகம். இதற்காக பலரும் பியூட்டி பார்லர்களுக்கு சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்கின்றனர். அப்படி பியூட்டி பார்லர் செல்ல இயலாதவர்கள், வீட்டிலேயே சருமத்தின் அழகை மெருகூட்ட, சில பியூட்டி டிப்ஸ்களை கூறியுள்ளார் அழகுக்கலை நிபுணர் நிஷா கோஷ். அந்த குறிப்புகளை காணலாம்.

    வறண்ட சருமம் இருக்கக்கூடாது!

    நமக்கு எண்ணெய் சருமமாக கூட இருக்கலாம். ஆனால் வறண்ட சருமமாக இருக்கக்கூடாது. வறண்ட சருமம், அரிப்பு, செதில்கள் மற்றும் வறண்ட திட்டுகள் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும், மேலும் புற ஊதா கதிர்களால் எளிதாக சேதமடையக்கூடும், எனவே வறண்ட சருமம் உள்ளவர்கள், பாதாம் எண்ணெய் இரண்டு சொட்டுகள், ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டுகள் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்துவிட்டு, காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் முகம் கழுவுவதால் சருமத்தை நன்றாக பாதுகாத்துக் கொள்ளமுடியும். இதை தினசரி செய்யும்போது அழகான மற்றும் வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு எண்ணெய் சருமம் கிடைக்கும்.

    பொடுகு பிரச்சனைக்கு தீர்வு

    பொடுகு பிரச்சனை நிறைய இருப்பவர்கள், முல்தானி மெட்டி, எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக்கரு ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து ஸ்கேல்ப்பில் அப்ளை செய்யவேண்டும். ஒரு பத்து நிமிடம் மசாஜ் கொடுக்கவேண்டும். பின்னர் சுடுநீரில் முடியை கழுவவேண்டும். பின்னர் சீப்பை வைத்து சீவினாலே பொடுகுகள் அனைத்தும் கொட்டிவிடும். இதை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். முடி பார்க்க வழுவழுப்பாக சிக்கில்லாமல் தெரிய முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சைச் சாறு, புதினாச்சாறு ஆகிய மூன்றையும் நன்றாக பீட்செய்து முடியில் அப்ளை செய்யவேண்டும். 20 நிமிடம் அல்லது அரைமணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு முடியை கழுவினால், பளப்பளப்பாக, வழுவழுவென முடி நன்றாக இருக்கும்.

    கருகருவென நீளமான முடிக்கு!

    அதுபோல முடி நீளமாக கருகருவென வளரவேண்டுமென எண்ணினால், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கேரட்டின் இலையை துண்டு துண்டாக வெட்டி போட்டு சூடுப்படுத்த வேண்டும். அதில் கொஞ்சம் மிளகு, வெந்தயம் சேர்க்கவேண்டும். அந்த எண்ணெய்யை நன்கு காய்ச்சி, வடிகட்டி ஒரு மூன்று நாட்கள் வெயிலில் வைக்கவேண்டும். அதை தலைக்கு தேய்த்தால், முடி கருகருவென நன்றாக வளரும். புழுவெட்டு இருப்பவர்கள் தலையில் சின்ன வெங்காயத்தை நன்கு தேய்க்க வேண்டும். மூன்று மாதங்கள் தொடர்ந்து தேய்த்தால், அந்த இடத்தில் குட்டி குட்டி முடி வளரத் தொடங்குவதை நீங்கள் பார்ப்பீர்கள். அதுபோல கண்புருவம் அடத்தியாக வேண்டும் என்றால், விளக்கெண்ணெய்யை அப்ளை செய்யலாம்.

    கருமை நீங்க...

    கண்ணில் கருவளையம் இருப்பவர்கள், உருளைக்கிழங்கு சாறுடன், கடலைமாவை சேர்த்து பத்துபோல போட்டு வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். உதடு கருப்பாக இருப்பவர்கள், தாங்களாகவே ரோஸ்வாட்டர் தயாரித்து அப்ளை செய்தால் நன்றாக இருக்கும். சந்தைகளில் வாங்குவதில் நிறைய போலிகள் உள்ளன. ரோஸ் வாட்டர் எப்படி செய்வது என நான் கூறுகிறேன். ரோஜாப்பூக்கள் ஒரு கிலோ வாங்கினோமானால், அதன் இதழ்களை எடுத்து தண்ணீரில் கொதிக்கவைக்க வேண்டும். ஒருகிலோ இதழ் 100 மில்லிக்கு வரும்வரையில், கொதிக்கவைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து வடிகட்டி, தினமும் காட்டன் துணியால் தொட்டு உதட்டில் தடவி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். உதடு ரோஸ் நிறத்திற்கு மாறும். இவை அனைத்திற்கும் மேலாக, என்னதான் ஸ்கின் கேர் செய்தாலும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பட்டர் ஃப்ரூட் எடுத்துக்கொள்ளலாம். இது கர்ப்பப்பைக்கும் நல்லது, முகத்திற்கும் பளபளப்பு மற்றும் அழகை தரும்.

    • தீக்காயங்களுக்கு தேன் சிறந்த நிவாரணமாகும்.
    • முடி உதிர்வு பிரச்சினைக்கு நெல்லிக்காய் சிறந்த தீர்வாகும்.

    இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு பராமரிப்புப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. நவீனத்துவத்தை விரும்பும் இளம்பெண்களும் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இயற்கையான பொருட்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் பல தலைமுறைகளாக நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான அழகு பராமரிப்பு பொருட்களும், அவற்றை உபயோகிக்கும் முறைகளும் இதோ...

     வேப்பிலை:

    முகப்பரு பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை ஆறவைத்து மிதமான சூட்டுக்கு கொண்டு வரவும். அந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து முகம் முழுவதும் மென்மையாக அழுத்தி பூச வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நாளடைவில் முகப்பருக்கள் நீங்கும்.

    வறண்ட சருமம் கொண்டவர்கள் வேப்பிலை பொடியுடன் திராட்சை விதை எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இதன்மூலம் சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.

    பொடுகு மற்றும் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வேப்ப எண்ணெய்யை தலை முழுவதும் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.

     தேன்:

    தீக்காயங்களுக்கு தேன் சிறந்த நிவாரணமாகும். தீப்புண்களில் தேனை தொடர்ச்சியாக பூசிவந்தால் காயம் விரைவாக ஆறுவதோடு, காயத்தால் ஏற்படும் வடுவும் மறையும்.

    சிறிதளவு தேனோடு, காய்ச்சிய பாலேடு, சந்தனம், கடலைமாவு, ரோஜா எண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும், இந்த 'ஃபேஸ் பேக்' முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பொலிவாக்கும்.

     நெல்லிக்காய்:

    முடி உதிர்வு பிரச்சினையால் சிரமப்படுபவர்களுக்கு நெல்லிக்காய் சிறந்த தீர்வாகும். 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் சாறுடன், சமஅளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை தலையில் பூசி சிறிதுநேரம் கழித்து குளிக்கவும்.

    காய்ந்த நெல்லிக்காய், புங்கங்கொட்டை, சீயக்காய் இவை மூன்றையும் தேவையான அளவு எடுத்து ஓர் இரும்பு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து அந்த கலவையை இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அந்த சாற்றை வடிகட்டி தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.

     மஞ்சள்:

    ஸ்டிரெச் மார்க்குகள் இருப்பவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன், கடலைமாவு மற்றும் தயிர் கலந்து அந்த பகுதியில் பூச வேண்டும். இவ்வாறு தினமும் செய்துவந்தால் நாளடைவில் ஸ்டிரெச் மார்க்குகள் சருமத்தின் நிறத்திலேயே மாற ஆரம்பிக்கும்.

    சிறிதளவு மஞ்சள்தூளுடன் அரிசிமாவு, தக்காளிச்சாறு, காய்ச்சாத பால் கலந்து முகத்தில் பூச வேண்டும். இது நன்றாக உலர்ந்தவுடன் முகத்தை சுத்தப் படுத்த வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

    பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு சிரமப்படுபவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன், கடலைமாவு மற்றும் தயிர் கலந்து அந்த பகுதியில் பூசவும். இவ்வாறு தினமும் செய்துவந்தால் நாளடைவில் ஸ்டிரெச் சருமத்தின் நிறத்திலேயே மாற ஆரம்பிக்கும்.

    சிறிதளவு மஞ்சள் தூளுடன் அரிசிமாவு, தக்காளிச்சாறு, காய்ச்சாத பால் கலந்து முகத்தில் பூசவும். இது நன்றாக உலர்ந்தவுடன் முகத்தை சுத்தப்படுத்தவும். இவ்வாறு செய்துவந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

    பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு சிரமப்படுபவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பாதங்களில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் பாதங்களைக் கழுவ வேண்டும்.

    ×