என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கற்றாழை"

    • முடி இழைகளை ஊட்டமளிக்கவும், நீரேற்றம் செய்யவும் மற்றும் வலுப்படுத்தவும் உதவுகின்றன.
    • முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு கற்றாழை ஒரு சிறந்த மூலப்பொருளாக உள்ளது.

    பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடிகொட்டுவது. முடிகொட்டுதலை தடுக்க, முடிவளர நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். பலரும் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எல்லாம் பெறுவார்கள். ஆனால் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் இயற்கையிலேயே மருந்து உள்ளது. அதுதான் கற்றாழை. வீட்டில் எளிதாக கிடைக்கும் கற்றாழையால் நமது முடி அடையும் ஆரோக்கிய நன்மைகள், எப்போதெல்லாம் இந்த கற்றாழையை முடிக்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம். 

    முடி உதிர்தல்

    முடி உதிர்தல் அதிகமாகிறது என்று நீங்கள் கவலைக்கொள்ளும்போது கற்றாழையை தலைக்கு பயன்படுத்தலாம். கற்றாழை கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது முடியின் நுண்ணறைகளை வலுப்படுத்தவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவும். கற்றாழையில் தாதுக்கள் மற்றும் நீர் இருப்பதால், முழு இழையையும் வலுப்படுத்துகிறது. மேலும் முடிக்கு வலிமையை கொடுக்கிறது. இதனால் முடி எளிதில் உடையக்கூடிய தன்மையை இழக்கும்.

    முடி வளர்ச்சி

    கற்றாழை முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. கற்றாழையில் உள்ள நொதிகள் உச்சந்தலையில் இருந்து இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. கற்றாழையில் வைட்டமின்கள் (வைட்டமின் A, B1, B2, B6, C மற்றும் E போன்றவை), தாதுக்கள் (கால்சியம் போன்றவை) மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை உள்ளன. அவை முடி இழைகளை ஊட்டமளிக்கவும், நீரேற்றம் செய்யவும் மற்றும் வலுப்படுத்தவும் உதவுகின்றன.

    எண்ணெய் பசை

    கற்றாழை உச்சந்தலை மற்றும் முடியில் அதிகளவில் உள்ள எண்ணெய் பசையைக் குறைக்கும். முடியின் இழைகளுக்கு சேதம் விளைவிக்காமல் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

    வறண்ட முடி

    கற்றாழை தலையில் செல்வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் மயிறிழைகளுக்கு அதிக நெகிழ்ச்சித்தன்மையை அளிக்கும். இதன்மூலம் வறண்ட நிலையில் இருக்கும் முடி ஆரோக்கியம் பெறும். 


    அனைத்துவிதமான முடி பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை கொண்டது கற்றாழை

    அரிப்பு மற்றும் எரிச்சல்

    கற்றாழை அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் போன்றவற்றை தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உச்சந்தலையில் ஏற்படும் அழற்சியைக் குணப்படுத்தவும், சருமத்தை ஆற்றவும், அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற தோல் அழற்சி அல்லது பூஞ்சை தொற்றுகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது. 

    பொடுகு 

    கற்றாழை உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. மேலும் உச்சந்தலையில் நீரேற்றத்தை ஊக்குவிக்கிறது. உச்சந்தலை வறளும்போதுதான் பொடுகு உண்டாகும். இதன்மூலம் பொடுகு உருவாவதையும் கட்டுப்படுத்துகிறது. 

    புற ஊதா கதிர்கள்

    சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து முடி இழைகளைப் பாதுகாக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கற்றாழையில் உள்ளன. மேலும், அதன் ஈரப்பதமூட்டும் திறன் மற்றும் அதன் கலவையில் உள்ள வைட்டமின்கள் காரணமாக, கற்றாழை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

    முடி உதிர்தலைத் தடுப்பது, உச்சந்தலையில் இருந்து அதிகப்படியான எண்ணெயை நீக்குவது, முடியை ஈரப்பதமாக்குவது, முடி வளர்ச்சியை ஊக்குவித்தல், சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாத்தல் மற்றும் பொடுகு அல்லது உச்சந்தலையில் தொற்றுகள் வராமல் தடுப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை தலைமுடிக்கு அளிக்கிறது கற்றாழை. முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு கற்றாழை ஒரு சிறந்த மூலப்பொருளாக இருப்பதுடன் மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கவும் கற்றாழையை பயன்படுத்தலாம். 

    • பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும்.
    • ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது.

    பெண்கள் கூந்தலை பராமரிக்க நெல்லிக்காய், கற்றாழை இரண்டையுமே பயன்படுத்துவார்கள். அதிலும் முடி உதிராமல் நீளமாக வளர வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கும். முடி வளர்ச்சிக்கு இந்த இரண்டில் எதனை பயன்படுத்துவது சிறந்தது? என்ற குழப்பமும் சிலரிடம் இருக்கும். அதற்கு சரியான தீர்வு எது என்று பார்ப்போமா?

    நெல்லிக்காய்

    இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடென்டுகள், இரும்பு மட்டுமின்றி உச்சந்தலை மற்றும் முடியின் மயிர்க்கால்களுக்கு பலம் சேர்க்கும் பொருட்களும் நிரம்பியுள்ளன. அடிப்படையில் நெல்லிக்காய் முடியின் வேர்க்கால்களுக்கு புரதம்போல் ஊட்டச்சத்து மதிப்புடன் செயல்பட்டு அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது.

    பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும். உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். விரைவில் முடி நரைப்பதை குறைக்கும். நெல்லிக்காயை எண்ணெய்யாக தலைக்கு பயன்படுத்தலாம். நெல்லிக்காய் பொடியையும் தலையில் தேய்த்து வரலாம். நெல்லிக்காயை சாறாக பருகியும் வரலாம். இப்படி நெல்லிக்காயை ஏதாவதொரு வகையில் பயன்படுத்தி வந்தால் கடுமையாக முடி உதிர்வது தடுக்கப்படும். தலைமுடி மீண்டும் உயிர்ப்புடன் காட்சியளிக்க உதவும்.

    கற்றாழை

    இது மென்மையானது, குளிர்ச்சியானது. உச்சந்தலைக்கு பயன்படுத்த ஏதுவானது. கற்றாழையில் வைட்டமின்களும், நொதிகளும் நிறைந்துள்ளன. உச்சந்தலை ஈரப்பதமின்றி வறட்சியாக காட்சி அளிக்கிறதா? உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுகிறதா? கற்றாழை இதற்கு சிறந்த தேர்வாக அமையும். இது ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது. தலைமுடி சரியாக வளர்வதற்கு ஏற்ற சூழலையும் அளிக்கிறது. கற்றாழையை செடியில் இருந்து வெட்டி எடுத்து, அதன் உள்பகுதி சதையை வெளியே எடுத்து நேரடியாக தலையில் தேய்க்கலாம். கடைகளில் கிடைக்கும் தரமான கற்றாழை ஜெல்லையும் உபயோகிக்கலாம்.

    எதனை பயன்படுத்தலாம்?

    நெல்லிக்காய், கற்றாழை இவை இரண்டுமே வெவ்வேறு வழிகளில் முடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. நெல்லிக்காயை பொறுத்தவரை முடி உதிர்வை தடுக்கவும், முடியை வலுவாக்கவும், முடி அடர்த்திக்கும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. கற்றாழை உச்சந்தலையை தூய்மையாக பராமரிக்கவும், குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவிடக்கூடியது. முடி வளர்வதற்கு சாதகமான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கக்கூடியது.

    உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை இருந்தாலோ, முடி அடர்த்தி குறைந்து மெல்லியதாக இருந்தாலோ நெல்லிக்காய் சிறந்த தீர்வாக அமையும். உச்சந்தலை வறண்டு அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால் கற்றாழை கைகொடுக்கும்.

    • உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுத்து உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் குணம் இதன் மகத்துவம்.
    • உடற்பயிற்சிக்காக நடப்பவர்களைவிட உடல்பருமனைக் குறைக்க நடப்பவர்களே அதிகம்.

    கற்றாழையில் சோற்றுக் கற்றாழைதான் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மிகச் சாதாரணமாகக் கிடைப்பதும் சோற்றுக் கற்றாழைதான் என்பதால் அதைத்தான் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். எல்லாக் கற்றாழைகளையும்விட செங்கற்றாழை அதிக மருத்துவக் குணம் வாய்ந்தது என்றாலும் அது இப்போது கிடைப்பதில்லை. மற்ற கற்றாழை வகைகளும் கிடைப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் வேறு சில கற்றாழைகள் வெளி உபயோக மருந்தாகப் பயன்படுத்தப்படும் மருந்துப் பொருள்களில் சேர்க்கப்படுகிறது.

    கற்றாழையை முறைப்படி பொடியாக்கிச் சாப்பிட்டால் நூறு ஆண்டுகள் இளமையாக வாழலாம் எனத் தேரன் வெண்பா கூறுகிறது. உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுத்து உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் குணம் இதன் மகத்துவம். தவிர, ஈரல் மற்றும் குடல்களின் செயல்பாட்டைச் சரி செய்யக்கூடியது.

     சருமம் காக்கும் தோழன் இது. உடல் சூட்டைத் தணிப்பதில் கற்றாழைக்கு நிகர் கற்றாழையே. பெண்களின் கர்ப்பப்பை மற்றும் தொடை எலும்புகள் இடுப்பில் இணையும் பகுதியான கூபக உறுப்புகளில் வரும் நோய்களுக்கும், ஆண்களின் விந்தணு உற்பத்திக்கும் கைகண்ட மருந்து இது. உடல் பருமனைக் குறைக்கவும் பெரிதும் உதவும் மருந்து.

    இன்று உடற்பயிற்சிக்காக நடப்பவர்களைவிட உடல்பருமனைக் குறைக்க நடப்பவர்களே அதிகம். அதனால்தான் நடைப்பயிற்சிக்காக மக்கள் குவியும் அத்தனை இடங்களிலும் கற்றாழை ஜூஸ் வியாபாரம் கன ஜோராக நடக்கிறது. நடைப்பயிற்சியுடன் கற்றாழை ஜூஸ் குடிக்கக் கிடைத்தால் இரட்டை நன்மைதானே! கலோரி மற்றும் கொழுப்பைக் கரைக்க கற்றாழை மிகவும் நல்லது.

    சரி, சாலையோரத் தள்ளுவண்டிக் கடைகளிலும் ஜூஸ் கடைகளிலும் விற்கப்படும் கற்றாழை ஜூஸ் உண்மையிலேயே ஆரோக்கியமானதா என்றால், இல்லை என்றே சொல்லலாம். காரணம், பெரும்பாலான ஜூஸ் கடைகளில் கற்றாழையின் தோலை மட்டும் அகற்றிவிட்டு அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை கழுவாமல் அப்படியே போட்டு இடித்து நசுக்கி மோர், உப்பு சேர்த்துக் கொடுக்கிறார்கள். ஆனால், கற்றாழை ஜெல்லை கழுவாமல் சாப்பிடக்கூடாது. கற்றாழை ஜூஸ் எப்படித் தயார் செய்ய வேண்டும், யாரெல்லாம் குடிக்கலாம் என்பது மிகவும் முக்கியம்.


    எப்படித் தயார் செய்வது?

    நான்கு ஆண்டுகள் வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில்தான் அத்தனை சத்துகளும் பொதிந்திருக்கும். அவற்றை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். கற்றாழைச் செடியின் வெளிப்புறமாக வளரும் மடல்கள் முதிர்ச்சி அடைந்திருக்கும். அவற்றை நறுக்கி எடுத்து, அதிலுள்ள மஞ்சள் நிறப் பாலை முழுமையாக வடிக்க வேண்டும். பிறகு அதன் தோலை அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெல்லை எடுத்து, ஏழு முறை நீரில் கழுவ வேண்டும். ஏழு முறை கழுவும்போதுதான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும். இல்லாவிட்டால் அது வயிற்றின் உள்ளே செல்லும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று எரிச்சல் உண்டாகும். மேலும் ஏழுமுறை கழுவினால்தான், கற்றாழையின் கசப்புச் சுவை மற்றும் நாற்றமும் விலகும்.

    • வீட்டில் எளிமையாக வளர்க்கக்கூடிய ஒரு வகையான தாவரம்.
    • எரிச்சலான சருமத்தை சரி செய்ய உதவுகிறது.

    சரும பராமரிப்பு என்று வரும்போது அதில் சரியானவற்றைக் கண்டறிவது மிகவும் கடினமாகும். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் சருமப் பராமரிப்புக்கு புகழ்பெற்ற ஒன்றாக மாறியிருப்பது கற்றாழை ஜெல் மட்டுமே. கற்றாழை வீட்டில் எளிமையாக வளர்க்கக்கூடிய ஒரு வகையான தாவரம்.

    தண்ணீர் இல்லாத வறண்ட பிரதேசத்தில் கூட வளரும். இயற்கையின் அதிசயமாகப் பார்க்கப்படும் கற்றாழையில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால், சருமத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இந்த பதிவில் இரவில் முகத்துக்கு கற்றாழை ஜெல் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

    கற்றாழை ஜெல் சருமத்தை வறண்டு போகச்செய்யாமல் பாதுகாக்க உதவுகிறது. இதை இரவில் சருமத்திற்குப் பயன்படுத்தும் போது இயற்கையான ஈரப்பதத்தைப் பராமரிக்கிறது. உங்களுக்கு சென்சிடிவ் அல்லது எரிச்சலூட்டும் சருமம் இருந்தால் கற்றாழை ஜெல் இவை அனைத்தையும் சரி செய்யும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் எரிச்சலான சருமத்தை சரி செய்ய உதவுகிறது.

    நமக்கு வயதாகும்போது நமது சருமம் நெகிழ்ச்சியடைந்து அதன் உறுதித் தன்மையை இழக்கிறது. கற்றாழை ஜெல்லில் இருக்கும் விட்டமின் சி மற்றும் இ உள்ளிட்ட ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுவதால், வயதான தோற்றத்தை தாமதப்படுத்த உதவுகிறது. எனவே தொடர்ச்சியாக இரவில் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள், மெல்லிய கோடுகள் போன்றவை குறையும்.

    முகப்பரு என்பது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான சரும பாதிப்பாகும். கற்றாழை ஜெல் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

    முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள், தழும்புகள் போன்றவை நமது மனநிலையை பெரிதும் பாதிப்பவை. கற்றாழை ஜெல்லில் தழும்புகளை நீக்கும் என்சைம்கள் உள்ளன. எனவே அவை முகத்தில் உள்ள வடுக்களை நீக்க உதவுகின்றன. தினமும் இரவில் முகத்தில் கற்றாழை ஜெல் தடவுவதால் முகத்திற்கு இயற்கையான புத்துணர்ச்சி கிடைக்கிறது.

    • கண்களில் மஸ்காரா, காஜல் நீக்கத்தை பாதிப்பில்லாமல் நீக்க தேங்காய் எண்ணெய் உதவும்.
    • கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து சுத்தமான காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்கலாம்.

    மேக் அப் பயன்படுத்துவதும் அத்தியாவசியமாகிவிட்ட நிலையில் அதை அன்றாடம் அகற்றவும் செய்ய வேண்டும். இல்லையெனில் சருமத்தை பாதிப்புக்குள்ளாக்கும். நம்மில் பலர் வெளியே கிளம்பும்போது சிரத்தையெடுத்து அழகுபடுத்தி கொள்வார்கள். ஆனால் வீடு திரும்பியதும் முகத்தில் கண்களில் இருக்கும் மேக் அப் பொருள்களை கலைக்காமல் அப்படியே விட்டுவிடுவார்கள். இதனால் சருமத்தினுள்ளே ரசாயனங்கள் ஊடுருவ வாய்ப்புண்டு. சருமத்துளைகளிலும் பருக்கள் மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும்.

    மேக் அப் கலைக்க வீட்டிலிருக்கும் பொருள்களை பயன்படுத்தினால் சருமத்துக்கு பாதுகாப்பும் கிடைக்கும்.

    * சுத்தமான நீரில் முகத்தை கழுவி மேக் அப் கலைப்பதை காட்டிலும் சில துளி தேங்காய் எண்ணெய் முகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த மேக் அப்பை சுத்தமாக நீக்கிவிடும்.

     * ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து உள்ளங்கையில் தடவி நன்றாக தேய்த்து முகம் முழுக்க லேசாக மசாஜ் செய்தால் மேக் அப் பாதிப்பில்லாமல் நீங்கும். கண்களில் மஸ்காரா, காஜல் நீக்கத்தை பாதிப்பில்லாமல் நீக்க தேங்காய் எண்ணெய் உதவும்.

    * முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் இருக்கும் அழுக்கை அகற்றும் சுத்தமான இயற்கை பொருள் பால். புரதங்களும், கொழுப்பும் சருமத்தை மென்மையாகவும் அழகாகவும் வைத்திருக்கும். பாலை கொண்டு முகத்தை துடைத்தால் முகத்தில் வறட்சி பிரச்சனையே இருக்காது.

    * காய்ச்சாத பாலை சுத்தமான காட்டனில் நனைத்து முகத்தில் நன்றாக படரும் படி ஒற்றி ஒற்றி எடுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் காட்டனை கொண்டு துடைத்து எடுங்கள். மேக் அப் சற்று கூடுதலாக பயன்படுத்தி இருப்பவர்கள் ஆலிவ் எண்ணெயை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து பிறகு பாலை கொண்டு சருமத்தை சுத்தம் செய்யலாம். இவை சரும துளைகளில் இருக்கும் அழுக்கை நீக்கி முகத்தை பளிச்சென்று வைக்க உதவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். இதனால் சருமம் மென்மையாக மாறும்.

    * அழகு சாதன பொருள்கள் எப்போதாவது சருமத்தில் லேசான எரிச்சலை உண்டாக்குவது போல் இருப்பவர்கள் சிறப்பான முறையில் அதை அகற்ற வெள்ளரிக்காய் உதவுகிறது. வெள்ளரிக்காயை தோல் சீவி நன்றாக மைய அரைத்து விழுதாக்கி வைத்துகொள்ளவும். தினசரி மேக் அப் பயன்படுத்துபவர்கள் வாரம் ஒரு முறை இதை மசித்து வைத்துகொள்ளலாம்.

    * மேக் அப் கலைக்கும்போது இந்த விழுதை முகத்தில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். மேக் அப் பயன்பாடும் நீங்கும். வெள்ளரிக்காய் விழுதை பயன்படுத்துவது சிரமமாக இருந்தால் வெள்ளரிக்காயை அரைத்து கெட்டியாக சாறு பிழிந்து அதை காட்டனில் நனைத்தும் பயன்படுத்தலாம். இதனால் முகத்தில் கூடுதலாக குளிர்ச்சித்தன்மையை உணர்வீர்கள்.

    * கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து சுத்தமான காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்கலாம். கண்களை சுற்றியிருக்கும் மேக் அப்- ஐயும் இதை கொண்டு துடைத்து எடுக்கலாம். கற்றாழை பயன்படுத்துவதன் மூலம் கருவளையங்கள் வராமல் தடுக்கமுடியும். இதை கொண்டு மசாஜ் செய்த பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்தால் முகம் மென்மையாக மாறும்.

    * பார்ட்டி, திருமணம் போன்ற விசேஷங்களின்போது சற்று அதிகப்படியான மேக் அப் பயன்படுத்துவது உண்டு. இந்த நேரத்தில் முகத்துக்கு ஆவி பிடிப்பதன் மூலம் முகத்தில் இருக்கும் மேக் அப் முழுவதுமே வெளியேறும். அதோடு சருமத்துவாரங்களில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி அகற்றப்படும். இதன் மூலம் மறுநாள் உங்கள் முகத்தில் கூடுதல் பொலிவை உணரலாம்.

    * மேக் அப் பயன்பாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்று அதை கலைப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் சருமம் எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.

    • கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
    • ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கற்றாழை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    கற்றாழை ஒரு மருத்துவ தாவரமாகும். இது பல வகையான பிரச்சனைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது. கற்றாழை செடிக்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை. நோய் தாக்கும் அபாயம் இல்லை. செடியை வீட்டுக்குள்ளும், வெளியிலும் வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன.

    கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது தோல் பராமரிப்பு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கற்றாழை காற்றை சுத்திகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே இதனை வீட்டில் வளர்த்தால் மாசுக்களை உறிஞ்சி சுத்தமான சூழலை உருவாக்குகிறது. மேலும் காற்றின் தரம் மேம்படுவதால், சுவாச நோய்களின் ஆபத்து குறைகிறது.

    கற்றாழை ஜெல் பல நோய்களுக்கு மருந்தாகவும், சிகிச்சையாகவும் பயன்படுகிறது. கற்றாழை இலைகளை வெட்டி, தோல் நீக்கி அதில் உள்ள ஜெல்லை உண்ணலாம். இதை ஜூஸ் செய்து குடிக்கலாம். இந்த ஜெல்லை சருமத்தில் தடவலாம்.

    ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கற்றாழை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கற்றாழை ஜெல் முகப்பரு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு வகையான சரும பிரச்சனைகளை நீக்குகிறது. கற்றாழை ஜெல்லை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை குறையும். இதில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ ஆகியவை சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    கற்றாழை செடி மன அழுத்தத்தை போக்குகிறது. மன அழுத்தத்திலிருந்து விரைவாக மீள உதவுகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

    கற்றாழை செடிகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை பரப்புகின்றன. ஆன்மிக ரீதியாகவும் மனதை தூய்மைப்படுத்தும் சக்தி இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஏனெனில் அவை பாசிட்டிவ் ஆற்றலுடன் அமைதியை ஊக்குவிக்கின்றன. அதனால் எதிர்மறையான விஷயங்களில் மனம் செல்லாது.

    • கதிரவன் மலர் மகளிர் சுய உதவி குழு குளியல் சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சந்தனம், கற்றாழை, வேப்பிலை, ரோஜா என நான்கு வகையான குளியல் சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு ஒன்றியம் ஆழியவாய்க்கால் கதிரவன் மலர் மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் தயாரிக்க ப்பட்ட சோப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    ஆழியவாய்க்கால் 24 பெண்கள் கொண்ட கதிரவன் மற்றும் மலர் மகளிர் சுய உதவி குழுவினர்கள் மூலம் சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெரும்பாலான மகளிர் சுய உதவி குழுவினர் உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் உள்ளிட்ட தொழில்கள் மட்டும் மேற்கொண்டு வரும் நிலையில் கதிரவன் மலர் மகளிர் சுய உதவி குழு குளியல் சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த மகளிர் உதவி குழுவினர் ஆறு இயந்திரங்கள் கொண்டு தாவரங்கள் மூலிகையில் இருந்து தயாரிக்கப்பட்ட மூலப்பொருட்கள் மூலம் சந்தனம், கற்றாழை, வேப்பிலை, ரோஜா என நான்கு வகையான குளியல் சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் மாதத்துக்கு ஒரு லட்சம் சோப்புகள் தயாரிப்பதற்கானதிறன் கொண்டது .

    பொதுமக்களி டம் இந்த சோப்பிற்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழு தலைவர்கள் சீதாலட்சுமி, ஒன்றிய குழு தலைவர் பார்வதி சிவசங்கர், சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×