என் மலர்
நீங்கள் தேடியது "preparation"
- மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு விதமான பொங்கல் பானைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
- பொங்கல் தொகுப்புடன் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண்பானை வழங்க முன்வர வேண்டும்.
உடுமலை:
தமிழா்களின் பாரம்பரியம்,பண்பாட்டை வெளிப்படுத்தும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது அரிசி, வெல்லம், நெய் சேர்த்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் படைத்து கொண்டாடுவது தமிழா்களின் மரபாகும்.
முன்னோர்கள் காலத்தில் இருந்தே புதிய பானையில் பொங்கலிடுவது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் மண்பானைகள் தயாரிக்கும் பணி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு விதமான பொங்கல் பானைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
மண் பானையில் செய்யப்படும் பொங்கல் சத்தானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்பதால் மண்பானைகளும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனால் வியாபாரம் அதிகரிக்கும் என்பதால் மண்பானை உற்பத்தி செய்வதில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான கரும்பு, பச்சரிசி, சக்கரை உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கி வருகின்றது. இந்நிலையில் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண்பானை வழங்க முன்வர வேண்டும். இதனால் மண்பானை தொழில் மேம்படும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 12 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது
- விசர்ஜனம் செய்யும் போது அரை மணி நேரத்தில் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரைந்து விடும்.
பல்லடம்
விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் மாதம் 18 ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பல்லடம் அருகே கவுண்டம்பாளையம்புதூரில் கடந்த 12 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விநாயகர் சிலைகள் தயாரிப்பு குழுவினர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு 400 சிலைகள் தயாரித்தோம். இந்த ஆண்டுக்கான சிலைகள் தயாரிப்பு பணி கடந்த மார்ச் மாதம் துவங்கியது.இங்கு இது வரை 150சிலைகள் மட்டுமே வடிவமைத்து தயார் நிலையில் வைத்துள்ளோம்.3 அடி முதல் 16 அடி வரையிலான சிலைகள் ரூ.3500 முதல் ரூ.34 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் கிழங்கு மாவு, பேப்பர் தூள் மூலம் தயாரித்து வாட்டர் பெயிண்டிங் அடித்துள்ளோம். விசர்ஜனம் செய்யும் போது அரை மணி நேரத்தில் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரைந்து விடும்.
மேலும் மூலப் பொருட்கள் விலை உயர்வு,தொழிலாளர்களின் சம்பள உயர்வு போன்றவற்றால் விநாயகர் சிலைகள் விலை உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
- 2019, 2020-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேசியக் கொடி ஆர்டர்கள் மட்டுமே பெறப்பட்டன.
- நடப்பாண்டு சுதந்திர தினத்துக்கு கடந்த ஒரு மாதமாக ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.
கோவை:
நாட்டின் சுதந்திர தினம் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நாட்டின், பல்வேறு பகுதிகளிலும் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை டவுன்ஹாலில் தேசியக் கொடி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இங்கு கதர், வெல்வெட், மைக்ரோ துணிகளால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கதர் துணிகளாலான தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன.
மைக்ரோ துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் குறைந்த பட்சம் ரூ. 30 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. வெல்வெட் துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் அளவுகளுக்கு ஏற்றார்போல் ரூ.100 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இது குறித்து தேசியக் கொடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராஜேந்திரன் கூறியதாவது:-
சுதந்திர தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு, வழக்கமாக 3 மாதங்களுக்கு முன்பாகவே கொடிகள் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கிவிடுவோம். இந்த ஆண்டு ஜூன் இறுதி வாரத்தில் இருந்து கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இல்லாததால் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகளுக்கான ஆர்டர்கள் அதிக அளவில் வருகின்றன.
நாங்கள் மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்து இருகூர், அரசூர், மேட்டுப்பாளையம், குறிச்சி, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டெய்லர்களுக்கு அவற்றை பிரித்து வழங்குகிறோம். அவர்கள் அளவுக் கேற்ப அதைத் தைத்து எங்களிடம் திருப்பி தருவர். நாங்கள் அந்தக் கொடிகளில் 1 அங்குலம் முதல் 42 அங்குலம் வரை கொடியின் அளவுக்கேற்ப அசோக சக்கரத்தை, ஸ்கீரின்பிரிண்டிங் செய்து கொடிகளை தயாரிக்கிறோம்.
கொரானா சமயத்தில் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 25 ஆயிரம் கொடிகளுக்கு மேல் விற்பனை செய்யப்படவில்லை. 2021 முதல் சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு தலா 1 லட்சம் கொடிகளுக்கு மேல் ஆர்டர்கள் வருகின்றன. இதனால் டெய்லர்கள், சரக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் என 2 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தேசியக் கொடி மட்டுமின்றி கட்சி கொடிகளின் ஆர்ட ர்களும் அதிக அளவில் வருவதால், கொடி தயா ரிப்பு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணிகள் கிடைக்கின்றன. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுதந்திர தினத்துக்கு தேசியக் கொடி மட்டுமின்றி, மூவர்ணத்தில் பேட்ஜ், தொப்பி, சால்வை, பலூன், குடை, மோதிரம் உள்ளிட்ட பொருள்களையும் விற்பனைக்கு வைத்து ள்ளோம். இவற்றுக்கு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது என்றார்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் பாலா கூறியதாவது:-
நாங்கள் தயாரிக்கும் தேசியக் கொடிகள் கோவை மட்டுமின்றி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
2019, 2020-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேசியக் கொடி ஆர்டர்கள் மட்டுமே பெறப்பட்டன. கடந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு மொத்தமாக 1 லட்சம் கொடிகளுக்கு மேல் ஆர்டர்கள் பெறப்பட்டன.
நடப்பாண்டு சுதந்திர தினத்துக்கு கடந்த ஒரு மாதமாக ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.
பெறப்பட்ட ஆர்டர்க ளின் பேரில் தேசியக் கொடி தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆர்டர்கள் அதிக அளவில் பெறப்பட்டு வருவதால் இந்த ஆண்டும் 1 லட்சம் கொடிகளுக்கு மேல் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து ள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதிய மாணவர்களின் பட்டியலை அடிப்படையாக்கொண்டு பிளஸ் - தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும்பணி துவங்கியுள்ளது.
- 28ந் தேதி மாவட்ட தேர்வுகள் உதவி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.
திருப்பூர் :
கடந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்பட்டியலை அடிப்படையாக்கொண்டு பிளஸ் -2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும்பணி துவங்கியுள்ளது.இது குறித்து திருப்பூர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும், அக்டோபர் 21 முதல் www.dge.tn.gov.in என்ற இணைய முகவரிக்கு சென்று தங்கள் பள்ளியில் மார்ச் 2023ல் பிளஸ் -2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் நிரந்தர பதிவு எண், பெயர், பிறந்த தேதி, பாடத்தொகுதி, பெற்றோரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.இப்பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) போட்டோ மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை 10-ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகலுடன் இணைத்து வரும் 28ந் தேதி மாவட்ட தேர்வுகள் உதவி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே மாணவரது பெயர் மற்றும் பிறந்த தேதியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அரசிதழில் பதிவு செய்து பெயர் மாற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டுமே 10-ம் வகுப்பு சான்றிதழில் உள்ளவாறு இல்லாமல் அரசிதழில் உள்ளவாறு பெயரை மாற்றம் செய்ய முடியும்.மாணவர் பெயர், தலைப்பெழுத்து விடுபட்டிருப்பின் தமிழில் தவறாக இருப்பின் அதனை முழுமையாக நீக்கம் செய்து, மாற்றவும். ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து பொதுத்தேர்வு எழுதி பின் மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறொரு பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படித்தால் அவர் பெயர், தற்போது பிளஸ் 2 பயிலும் பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கு பிளஸ் 1 மதிப்பெண் பட்டியல் நகல், மாற்றுச்சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.ஏற்கனவே படித்த பாடத்தொகுப்பு, பயிற்றுமொழி மற்றும் மொழிப்பாடத்தில் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்ய இயலாது. பிளஸ் 1 பொது தேர்வெழுதிய பள்ளி மாணவர் பெயரை பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கபடாத நிலையில் பிளஸ் 2 தேர்வு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது. அதேபோல், பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் வழங்காமல் நீண்ட காலம் விடுப்பில் இருக்கும் மாணவர் பெயரையும் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது.மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்ட பின் நீக்கலாம். கடந்த 2021-22ம் கல்வியாண்டுக்கு முன், பிளஸ் 1 படித்து பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்றும், பெறாமலும் இடைநின்று தற்போது மீண்டும் பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் பெயரை 2023 பட்டியலில் சேர்க்க இயலாது.28ந் தேதி மாவட்ட தேர்வுகள் உதவி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கதிரவன் மலர் மகளிர் சுய உதவி குழு குளியல் சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சந்தனம், கற்றாழை, வேப்பிலை, ரோஜா என நான்கு வகையான குளியல் சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு ஒன்றியம் ஆழியவாய்க்கால் கதிரவன் மலர் மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் தயாரிக்க ப்பட்ட சோப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
ஆழியவாய்க்கால் 24 பெண்கள் கொண்ட கதிரவன் மற்றும் மலர் மகளிர் சுய உதவி குழுவினர்கள் மூலம் சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலான மகளிர் சுய உதவி குழுவினர் உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் உள்ளிட்ட தொழில்கள் மட்டும் மேற்கொண்டு வரும் நிலையில் கதிரவன் மலர் மகளிர் சுய உதவி குழு குளியல் சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மகளிர் உதவி குழுவினர் ஆறு இயந்திரங்கள் கொண்டு தாவரங்கள் மூலிகையில் இருந்து தயாரிக்கப்பட்ட மூலப்பொருட்கள் மூலம் சந்தனம், கற்றாழை, வேப்பிலை, ரோஜா என நான்கு வகையான குளியல் சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் மாதத்துக்கு ஒரு லட்சம் சோப்புகள் தயாரிப்பதற்கானதிறன் கொண்டது .
பொதுமக்களி டம் இந்த சோப்பிற்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழு தலைவர்கள் சீதாலட்சுமி, ஒன்றிய குழு தலைவர் பார்வதி சிவசங்கர், சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சேலம் அருகே உள்ள அனுப்பூர் பகுதியில் குறைந்த செலவினத்தில் கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரித்தல் குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
- இயற்கை வளங்கள் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் அருகே உள்ள அனுப்பூர் பகுதியில் குறைந்த செலவினத்தில் கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரித்தல் குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
அட்மா திட்ட இனங்கள் பற்றியும், உழவன் செயலி யின் முக்கியத்துவம் பற்றி யும், மற்றும் முக்கிய மான பயிர் சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றியும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கந்தசாமி, குறைந்த செலவினத்தில் கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரிக்கும் முறை குறித்து சேலம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் கோபி ஆகியோர் விளக்க மளித்தனர்.
வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி வட்டார வேளாண்மை இயக்குநர் சரஸ்வதி பேசினார். தொடர்ந்து, தரிசு நில ங்களை கண்டறிந்து விளை நிலங்களாக மாற்றுதல், வேளாண்மையில் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் பற்றியும், கிராம ஊராட்சிகளில் உள்ள இயற்கை வளங்கள் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இதில் தோட்டக்கலை த்துறை உதவி அலுவலர் அருட்செல்வம், ஊராட்சி தலைவர் விஜயன், உதவி கால்நடை மருத்துவர் பிரியா, உதவி வேளாண்மை அலுவலர் சிவனேசன் உள்ளிட்ட பல்வேறு துறை யைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை உதவித் தொழில்நுட்ப மேலாளர் ராஜ்குமார் செய்திருந்தார்.
- மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் தேசியக்கொடி தயாராகும் பணி நடந்து வருகிறது.
- சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகங்கை
75-வது சுதந்திர அமுதப்பெருவிழாவை முன்னிட்டு வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது.
இதற்கு தேவையான தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணிகள் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், சக்கந்தியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இய–க்கத்தின் சார்பில், வட்டார அளவிலான மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பின் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் கூறுகையில், இந்தியா சுதந்திரமடைந்து 75-வது ஆண்டை முன்னிட்டு, சுதந்திர தினவிழா, "சுதந்திர தின அமுதப்பெருவிழாவாக'' கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி வீடுகள் தோறும் தேசியக்கொடியினை ஏற்றி வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கொண்டாட அரசு அறிவுறுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், வட்டார அளவிலான மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பின் மூலம் தேசியக்கொடி தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
36 மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் 359 மின் மோட்டார் தையல் எந்திரங்கள் மூலம் ஊரகப்பகுதிகளுக்கு 4 லட்சம் தேசியக்கொடிகளும், நகராட்சிப் பகுதிகளுக்கு 1 லட்சம் தேசியக்கொடிகளும் என மொத்தம் 5 லட்சம் தேசியக்கொடிகள் தயாரித்து வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊரகப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு உள்ளாட்சி மன்ற நிர்வாகத்தின் மூலமாகவும், நகராட்சி, பேரூராட்சி பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி அலுவலக மூலமாகவும் தேசியக்கொடிகள் விநியோகிக்கப்பட உள்ளது.
தேசியக்கொடியின் மீது எந்த வாசகமும் இடம்பெறாமல் தூய்மையான முழு அளவில் உள்ள கொடிகளை ஏற்ற வேண்டும். 15-ந் தேதிக்கு பிறகு தேசியக்கொடியினை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். கீழே எறியவோ, வேறு எந்தப்பயன்பாட்டிற்கோ பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
பெரம்பலூரில் மதன கோபாலபுரத்தில் அமைந்துள்ள ஐ.ஓ.பி. கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் காகிதப்பைகள் தயாரிக்கும் இலவச பயிற்சி 2 வாரங்கள் நடைபெற்றது. இந்த பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற 34 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்திற்கு அரசு தடைவிதித்துள்ளது.
பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் முற்றிலும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாற்று வழி முறையான காகிதப்பைகளை வியாபாரிகள் அதிகளவு பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் காகிதப்பை தயாரிப்பை அனைவரும் ஊக்கப்படுத்திட முன்வர வேண்டும் என்று கூறினார். இதில் வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.