search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TRAING"

    • ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது
    • மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையில் நடந்தது

    கரூர்

    தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் வாசித்தலை மேம்படுதற்காக ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமரன், வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி கலந்து கொண்டு, பயிற்சிகளை மேற்பார்வை செய்து ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். சிறப்பு கருத்தாளர் சாந்தி கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை தோகைமலை வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மலையாளம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது
    • 14-ந்தேதி முதல் நடைபெற உள்ளது

    அரியலூர்

    மத்திய-மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு, அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-சி கீழ் பிரிவு எழுத்தர் அல்லது இளநிலை செயலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் போன்ற 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வருகிற 14-ந்தேதி முதல் அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பணி காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுய விவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
    • அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அரியலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. பயிற்சி வகுப்பினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், மாணவர்கள் இந்த வகுப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் நடக்கும் வகுப்புகளை கவனித்து, பாடங்களை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். தேர்வுகளை சிறப்பாக எழுத வேண்டும். கடின உழைப்பும், முயற்சியும் இருந்தால் வெற்றி உங்கள் வசமாகும். அரசு சார்பில் நடத்தப்படும் எத்தகைய வகுப்புகளையும் மாணவர்கள் முறையாக பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் சின்னத்துரை பேசினார். மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, திருமானூர் உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் நேற்று 'நீட்' தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. இதில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் மொத்தம் 420 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கு வகுப்புகள் காலை மற்றும் மதியம் என இருவேளைகளிலும் நடைபெறுகின்றன. 

    • 13 இடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் தொடங்கியது.
    • அரசு பள்ளி மாணவர்களை தயார் செய்யும் வகையில்

    புதுக்கோட்டை

    தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு தொடர்பாக பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார அளவில் தலா ஒரு மையம் என்ற அடிப்படையில் 13 இடங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி மையம் நேற்று முதல் தொடங்கியது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பயிற்சியானது தொடர்ந்து அளிக்கப்படும் 'நீட்' தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களை தயார் செய்யும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது."

    • சுய வேலை வாய்ப்பு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
    • 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் இலவசமாக கட்டிட வண்ணப்பூச்சு பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அம்மைய இயக்குநர் ஆனந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் இலவசமாக கட்டிட வண்ணப்பூச்சு பயிற்சி வரும் 21 -ந் தேதி முதல் அளிக்கப்படவுள்ளது.

    பயிற்சியில் பெயின்டிங் பற்றிய ஒரு அறிமுகம் ,பெயின்டிங் பற்றிய அடிப்படை அறிவு மற்றும் அதன் முக்கியத்துவம்,அதன் வகைகள் ,கட்டிடம் மரம் மற்றும் உலோகம் ஆகியவற்றில் பெயிண்டிங்கிற்கு முன் செய்யப்பட வேண்டிய வேலைகள், மேற்பரப்பை தயார் செய்யும் முறைகள், ப்ரைமர், எனாமல் புட்டி மற்றும் சிமெண்ட் புட்டி ஆகியவற்றை பூசும் முறைகள், பெயின்டிங் செய்யும் பரப்பை கணக்கிட்டு அதற்கு ஆகும் செலவுகளை நிர்ணயிப்பது ஆகியன பற்றி துறை சார்ந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது.

    பயிற்சியின் கால அளவு 10 நாட்களாகும். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் வறுமை கோட்டிற்குள் கீழ் உள்ள ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல் மற்றும் 3 போஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் வரும் 18ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    • கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி தொடங்கியது
    • வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 44 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 6 வார நிர்வாக பயிற்சி பெரம்பலூர் தனியார் பள்ளியில் தொடங்கியது. பயிற்சியினை கலெக்டர் தொடங்கி வைத்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் பயிற்சியை முறையாக கற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் பணியாற்ற வேண்டும், என்றார். இந்த பயிற்சி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கவிதா (ஆலத்தூர்), சின்னதுரை (குன்னம்), பெரம்பலூர் தலைமையிடத்து வருவாய் ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.

    பெரம்பலூர்

    சென்னை மாமல்லபுரத்தில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடத்தப்படவுள்ளது.இதற்காக பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்டத்தில் மேற்கண்ட பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் செஸ் பயிற்சி முகாம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.

    முகாமில் கலந்து கொண்ட 90 உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான செஸ் விளையாட்டு வீரர் கார்த்திக் ராஜா செஸ் போட்டி குறித்து பல்வேறு பயிற்சிகளை அளித்தார். பின்னர் செஸ் பயிற்சி பெற்ற உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் சான்றிதழை வழங்கினார்.இதில் கல்வி மாவட்ட அலுவலர்கள் சண்முகம் (பெரம்பலூர்), ஜெகநாதன் (வேப்பூர்), மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர், பள்ளி உடற்கல்வி இயக்குனர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளி அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்களுக்கு வட்டார அளவிலும், அதில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு மாவட்ட அளவிலும் செஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் மாநில அளவில் நடைபெறும் பயிற்சி முகாம், போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மேலும் அவர்கள் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெறுவார்கள். 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடிப்பவர்கள் ஒலிம்பியாட் செஸ் போட்டிகளை பார்வையிடும் வாய்ப்பை பெறுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×