கொடுமுடி அருகே மிஷின் ஆப்பரேட்டர் தூக்குபோட்டு தற்கொலை

உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்த மிஷின் ஆப்பரேட்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி அருகே மிஷின் ஆப்பரேட்டர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் (38). தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நிர்மலுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று நிர்மலின் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு காட்டுப்புதூர் திருமண விழாவிற்கு சென்று விட்டார்.

பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது நிர்மல் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் நிர்மல் வரும் வழியிலேயே இறந்து–விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com