கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் ரூ.13 லட்சம் உண்டியல் காணிக்கை

கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.இதில் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 636 ரொக்க பணம், 45 கிராம் தங்கம், 82 கிராம் வெள்ளி உள்ளிட்ட காணிக்கையை பக்தர்கள் செலுத்திருந்தனர்.
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் ரூ.13 லட்சம் உண்டியல் காணிக்கை
Published on

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வாளர் தேன்மொழி முன்னிலையில் 20 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. இவை அனைத்தும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டன.

திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் குழுவினர், சென்னிமலை மகளிர் குழுவினர், பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 636 ரொக்க பணம், 45 கிராம் தங்கம், 82 கிராம் வெள்ளி உள்ளிட்ட காணிக்கையை பக்தர்கள் செலுத்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com