search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FOR 4th DAY"

    • இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
    • இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் போன்று வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலையில் நேற்று 4-வது நாளாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    குறிப்பாக கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று 2-வது நாளாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது. நேற்று முன்தினம் 8 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    அதைத்தொடர்ந்து நேற்று இரவும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 69. 20 மில்லி மீட்டர் அதாவது 6 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    இதேபோல் அம்மாபேட்டை, சென்னிமலை, பெருந்துறை, வரட்டுபள்ளம், கவுந்தப்பாடி பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் நள்ளிரவில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. 4 நாட்களாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    எனினும் காலை நேரம் வெயில் வழக்கும் போல் வாட்டி எடுத்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    கொடுமுடி-69.20, அம்மாபேட்டை-27.40, சென்னிமலை-27, பெருந்துறை-26, வரட்டுபள்ளம்-19.40, ஈரோடு-5, கவுந்தப்பாடி-4.80, பவானி-4, நம்பியூர் பவானிசாகர் கொடிவேரி பகுதியில் தலா ஒரு மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • கூரபாளையம் பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காத்திருப்பு போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இந்திய அரசு எம்.எஸ்.சாமிநாதன் ஆணையத்தின் படி உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசின் கொள்முதலை அனைத்துப் பொருட்களுக்கும் உத்தரவாதப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டம் இயற்றி பாதுகாக்க வேண்டும்.

    தமிழக அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.3000, கரும்பு டன்னுக்கு ரூ. 5000, மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.12,000, மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15,000, மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3000, மாட்டுப்பால் லிட்டர் ரூ.50, எருமை பால் லிட்டர் ரூ. 75 வழங்கிட வேண்டும்.பட்டுப்புழுவிற்கு குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ரூ.700 நிர்ணயம் செய்ய வேண்டும்.

    அரசு தென்னை, பனையில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். தேங்காய், கடலை, நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து மானிய விலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொப்பரை தேங்காவுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 150 நிர்ணயம் செய்ய வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் விவசாயிகள் அவர்களது சொந்த நிலத்திலேயே உழைப்பை செலுத்திட அனுமதி வழங்க வேண்டும்.

    பயிர் காப்பீடு திட்டத்தை காப்பீடு செய்த ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனிப்பட்ட முறையில் இழப்பீடு பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். பாண்டியாரு- புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பவானி ஆற்றை மாசுபடுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள அன்னூர் பவானிசாகர் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு பெருந்துறை ரோடு அடுத்த கூரபாளையம் பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் கடந்த 5-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது. இன்றைய காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொருளாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், தெற்கு மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இனாம் விவசாயிகள் இணை ஒருங்கிணைப்பாளர் கருணா மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட
    • கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி

    பெரம்பலூர்:

    குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்காலிகமாக பணிபுரியும் கவுரவ, மணி நேர விரிவுரையாளர்கள் விடுமுறை நாளான நேற்றும் 4-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறைவேற்றி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் சென்னை தலைமை செயலகத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்திப்பதற்காக இரவில் புறப்பட்டு சென்றனர்.

    ×