search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்து விழுந்த மைனா குருவிகள்.
    X
    இறந்து விழுந்த மைனா குருவிகள்.

    ரஜினியின் 2.0 பட பாணியில் கொத்து... கொத்தாக இறந்து விழுந்த மைனா குருவிகள்

    ரஜினியின் 2.0 பட பாணியில் கொத்து கொத்தாக மைனா குருவிகள் இறந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே நடந்துள்ளது. #Sparrows
    கொடுமுடி:

    சமீபத்தில் வெளியான ரஜினியின் 2.0 படத்தில் செல்போன் டவர்களால் பறவைகள் குறிப்பாக சிட்டு குருவிகள் இறந்து விழுவது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு செல்போன் டவர்களால் பறவைகள் இனமே அழிந்து வருவதாகவும், வருங்காலத்தில் இதை குறைக்க வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

    அந்த படத்தில் வந்த காட்சி போன்ற சம்பவம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே நடந்துள்ளது. பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கொடுமுடி அடுத்த சாலை புதூர் சந்தை வளாகத்தில் பல ஆண்டுகளாக வேப்பமரம், புளியமரம், புங்கை மரம் என பலவகை மரங்கள் உள்ளன.

    இந்த மரங்களில் நூற்றுக்கணக்கான பறவைகள் குறிப்பாக மைனா குருவிகள் அதிக அளவில் கூடுகள் கட்டி வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் இன்று காலை அந்த மரங்களில் இருந்து மைனா குருவிகள் கொத்து...கொத்தாக இறந்து விழுந்தன. இதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


    சிலர் இறந்து விழுந்த மைனா குருவிகளை சாக்கு பைகளில் அள்ளிச்சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘‘மைனா குருவிகள் இறந்து விழுந்த பகுதிக்கு அருகில் 200 மீட்டர் தூரத்தில் செல்போன் டவர்கள் உள்ளன. அந்த செல்போன் டவர்களால்தான் மைனாக்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு இறந்து விழுகின்றன’’ என்று புகார் கூறினார்கள்.

    இது பற்றி விசாரணை நடந்து வருகிறது. #Sparrows
    Next Story
    ×