search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sadhan Thirumalaikumar MLA"

    • சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
    • மக்களை தேடி மருத்துவம் சார்பாக மக்களுக்கு மருத்துவ பெட்டி வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பு முகாம் தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளிசங்கர் அறிவுரையின்படி, வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலகம் ராயகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ராயகிரி இந்து நாடார் உறவின்முறை சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் தலைமை தாங்கினார். சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் செண்பகவிநாயகம், ராயகிரி பேரூராட்சி மன்ற தலைவர் இந்திரா, துணைத்தலைவர் குறிஞ்சி மகேஷ், செயல் அலுவலர் சுதா, மருத்துவ அலுவலர் கிருபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியர் வெங்டகிருஷ்ணன் வரவேற்று பேசினார். சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவம் சார்பாக மக்களுக்கு நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் நோய்களுக்கான மருத்துவம் பெட்டி வழங்கினர்.

    முன்னதாக இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவ- மாணவிகள் பள்ளியின் சார்பாக அனைவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் சிறப்பு மருத்துவம், ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை உட்பட்ட அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் இந்து நாடார் உறவின்முறை தலைவர் அம்மையப்பன், செயலர் சண்முகானந்தம், சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி கமிட்டி செயலர் கணேசன், தலைமை ஆசிரியர் வெங்கடகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன், ஆசிரியர்கள் நாராயணன், நாகராஜ், பாபு, இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள், ம.தி.மு.க. கிருஷ்ணகுமார், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மனோகரன், விவேகானந்தன், பேரூர் செயலாளர் குருசாமி, தென்மலை கவுன்சிலர் முனியராஜ், ராஜகுரு, வார்டு கவுன்சிலர்கள், மணிகண்டன், விக்கி, வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலகம் சார்பில் அனைத்து மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார் செய்திருந்தார்.

    ×