சிவகிரியில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க ஆண்டு விழா

ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சிவகிரி வட்டக் கிளையின் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 ஓய்வுபெற்ற அலுவலர் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
ஓய்வுபெற்ற அலுவலர் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

சிவகிரி:

சிவகிரியில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சிவகிரி வட்ட கிளையின் சார்பாக 26-வது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிவகிரி வட்டக் கிளையின் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். கவுரவ ஆலோசகர்கள் சேதுராமலிங்கம், குருசாமி, வெள்ளத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்கத்தின் செயலாளர் உலகநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். இணைச் செயலாளர் கடற்கரை வரவேற்றார். பொருளாளர் ராமர் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாடசாமி நலநிதி அறிக்கை வாசித்தார். அருணாசலம் அமரர் நிதி அறிக்கை வாசித்தார். பாலசுப்ரமணியன் இரங்கல் அறிக்கை வாசித்தார். அமைப்பின் மாநில துணைத்தலைவர் சிவதிருமேனிநாதன் இயக்கக் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட் மாநிலங்களைப் போல் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும், 70 வயது நிறைவு பெற்றவுடன் 10 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும், மத்திய அரசு அகவிலைப்படி அறிவிக்கும் போதெல்லாம் மாநில அரசும் காலம் தாழ்த்தாமல் அறிவித்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com